மாநில தலைமை பொது மேலாளர்
அவர்களுடன் AUAB தலைவர்கள் சந்திப்பு.
AUAB சங்கங்களின் தலைவர்கள் மாநில தலைமை பொது மேலாளர் அவர்களை சந்தித்து 4ஜி சேவை துவக்கம், அதன் செயல்பாடு .சில சிரமங்கள் குறித்து செய்தி பரிமாற்றம் செய்திட 31/01/2018 அன்று சந்தித்தோம்.. தமிழகத்தில் 4ஜி சேவை 2100MHz அலைக்கற்றை மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 5 BTS பகுதியில் வழங்கப்பட்டு குறைபாடுகளை அறிந்து சரி செய்து பின்னர் கோவை, சேலம் பகுதியில் முழு வீச்சாக அமுல் படுத்தப்படும். கோவையில் 240000, சேலத்தில் 140000 3ஜிBTS பகுதியில் அமுல் படுத்தப்படும். 3ஜி சேவை கிடைக்காது அதற்கு பதிலாக 4ஜி ,2ஜி சேவை இந்தபகுதியில் கிடைக்கும். செல் தொலைபேசி நமது LTE BAND I சேவை பெறும் வகையில் இருந்திடல் வேண்டும்.73 மாடல்கள் இனம் கண்டறியபட்டுள்ளன. தங்கள் தொலைபேசி 4ஜி சேவை பெற தகுதி உள்ளதா என்பதை அறிந்து கொள்ள விரைவில் SMS சேவை துவக்கப்படும். 13 MBPS வேகம் குறையாமல் கிடைக்கும். மேலும் உயர்த்திட OFC BACK HAUL மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிம் தட்டுபாட்டின்றி வழங்க வலியுறுத்தப்பட்டது. தற்பொழுது 3.5 லட்சம் கைவசம் உள்ளது. மேலும் போதுமான சிம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 4ஜி மாற்றம் செய்யப்படும் பகுதியில் விலாசம் சரி பார்க்கப்பட்டு இலவசமாக சிம் வழஙக்ப்படும். வேலூர்,மதுரை, திருச்சி, நாகர்கோயில் அடுத்த கட்ட விரிவாக்க்கம் நடைபெறும்.
வருவாய் மிக குறைவாக செலவு அதிகமாக உள்ள பகுதிகள் படிப்படியாக மூடப்பட்டு மாவட்டங்கள் லாபமீட்டும் பகுதியாக மாற்றிட திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைத்து சேவைகளிலும் இலக்கை விஞ்சி செயல் பட்டு வருகிறது. அனைத்து சேவைகளிலும் முதல் ,.இரண்டாம் இடத்தை கொண்டுள்ளது.
மாநில நிர்வாகம் சேவை முன்னேற்றத்தில் மேலும் முன்னேற அனைவரும் ஒத்துழைத்து செயல் பட வேண்டப்பட்டது. ஊழியர் தரப்பும் தங்களின் ஒத்துழைப்பை நல்கிட உறுதி கூறப்பட்டது.
No comments:
Post a Comment