வெற்றிகரமாக
நடைபெற்ற வேலை நிறுத்தப் பேரணி!
======================================================
தஞ்சை
ராமனாதன் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு
மேரிஸ் கார்னர் இணைப்பகம் வரை பேரணி சென்றது.
பேரணியில் ஓய்வூதியர்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்.
அண்ணா தொழிற்சங்க தலைவர்கள் சுந்தரராஜன், சந்திரன்
ஆகியோரோடு தோழர்களும் பங்கேற்றனர். பிப். 18, 19, 20 மூன்று
நாட்களும் அண்ணா தொழிற்சங்கமும் பங்கேற்கும் என்பதைக்
கூறினார்கள்.
100 சதவீத வேலைநிறுத்த பங்களிப்பை உறுதி செய்யும்
வகையில் 200 க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர்.
இறுதியாக மேரிஸ் கார்னரில் வேலை நிறுத்த முழக்கங்களுடன்
ஆர்ப்பாட்டமும், விளக்கக் கூட்டமும் நடைபெற்றது.
அனைத்துச் சங்கத் தலைவர்களும் பங்கேற்று பேசினார்கள்.
No comments:
Post a Comment