தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, November 29, 2013

Computer வை பை பிரச்சனைகளை வை பை பிரச்சனைகளை சரிசெய்ய

வை பை பிரச்சனைகளை சரிசெய்ய.   {WIFI  Problem }

! இன்று வயர்லெஸ் இன்டர்நெட் நெட்வொர்க் என அழைக்கப்படும் வை-பை இன்டர்நெட் இணைப்பு நமக்கு, ஓரிடத்தில் அமர்ந்து மட்டுமே இன்டர்நெட் இயக்கும் சிக்கலைத் தவிர்க்கிறது. ஜாலியாக, வீட்டில் அல்லது அலுவலகத்தில் எந்த இடத்திலும் அமர்ந்து இன்டர்நெட்டில் உலா வர உதவுகிறது. கேபிளை இணைக்காமல், எளிதாக இன்டர்நெட் உலகைக் காண, அனுபவிக்க முடிகிறது. இருப்பினும், இதிலும் பல தொல்லைகளை நாம் சந்திக்கிறோம். இன்டர்நெட் இணைப்பைத் தரும் ரேடியோ அலைகளுக்குப் பல தடைகள் உருவாகின்றன. சிக்னல் வட்டம் சுருங்குதல், ஹார்ட்வேர் பிரச்னைகள், நமக்கு இணைப்பு சேவையினைத் தரும் நிறுவனம் தரும் பிரச்னைகள் எனப் பலவகைகளில் வை-பி இணைப்பிற்கு தடைகள் கிடைக்கின்றன. இவை கூடுமானவரை ஏற்படாமல் இருக்க சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
லேப்டாப்பில் உள்ள வை-பை பட்டன்: காபிஷாப், வீடு அல்லது அலுவலகத்தில் வை-பை இணைப்பு பெறுவதில் பிரச்னை உள்ளதா? முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் பிரச்னை உள்ளதா எனப் பார்க்கவும். உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் வை-பை பட்டன் அல்லது ஸ்விட்ச் உள்ளதா எனவும் அது எந்த நிலையில் உள்ளது எனவும் கண்டறியவும். இதனை நீங்கள் அறியாமலேயே அழுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தியிருப்பீர்கள். எனவே அதனை மீண்டும் அழுத்தி இயக்கவும்.
கம்ப்யூட்டர் மற்றும் ரௌட்டர் ரீ பூட்: வை-பை பட்டனை அழுத்திய பின்னரும், இன்டர்நெட் இணைப்பு கிடைக்கவில்லை எனில், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் இணைப்பு கிடைக்கப் பயன்படுத்தும் சாதனத்தையும், ரௌட்டரையும் ரீ பூட் செய்திடவும். இதனால், இந்த சாதனங்களின் ஹார்ட்வேர் பாகங்கள் ஏதேனும் பிரச்னை தருவதாக இருந்தால் அல்லது சாப்ட்வேர் குறையுடன் இயக்கப்பட்டிருந்தால், அவை சரி செய்யப்படும். அப்படியும் கிடைக்கவில்லை எனில், ரௌட்டரை இணைக்கும் கேபிள்களை 5 முதல் 10 விநாடிகள் கழற்றி வைத்துவிட்டு, பின்னர் இணைக்கவும். இதனை "power cycling" வழி என்பார்கள். மின் சக்தி மற்றும் இணைப்பு அகற்றப்பட்டு, மீண்டும் தரப்படுகையில், இவை சரியாக இயங்கத் தொடங்கும்.

ஒப்பந்ததொழிலாளர்கள் சங்க கூட்டம்

ப்பந்ததொழிலாளர்கள்  சங்க கூட்டம் பூந்தோட்டத்தில் 27-11-2013 அன்று 
மாலை தோழர் A .தியாகராஜன் TM தலைமையிலும் ,தோழர் ராஜாஜி 
மாவட்ட அமைப்பு செயலர் முன்னிலையிலும் நடைபெற்றது .கூட்டத்தில் 
தோழர்கள் V .நடராஜன் மாவட்ட துணை செயலர் ,K .தங்கமணி 
கிளைசெயலர் ,works committee member A .சேகர் ,SDOT கிளை தலைவர் 
R .குணா ,தோழர் பாலதண்டாயுதம் ,ஸ்ரீனிவாசன்TTA ,மற்றும் ஒப்பந்ததொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர் ,,
தோழர்கள் கோவிந்த் ,சந்திரஹாசன் ,முருகேசன் ,பாஸ்கரன் 
P .ராஜேந்திரன் ,ரவி மற்றும் NNL /PSM பகுதி தோழர்கள் கலந்து 
கொண்டனர் 

Sunday, November 24, 2013


         

    
NFTE பேரியக்கத்திற்கு 60 வயது தொடங்குகிறது .
1954  ல்   NFPTE தொடங்குவதற்கு முன்பாக 
UPTW என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை 
POSTAL ,தந்தி ,RMS ,TELECOM ,ADMINISTRATION
பகுதி அனைத்தையும் ஒன்று சேர்த்து 
P3&P4,T3&T4,R3& R4,E3&E4,&
Administrative union    
என 9 சங்கங்களை ஒன்றிணைத்து NFPTE சம்மேளனத்தை 
உருவாக்கினார் தோழர் OP குப்தா ,
எத்தனை போராட்டங்கள் ,எத்தனை  தடைகள் ,
பல பிரதமர்கள் ,பல துறை மந்திரிகள் ,அதிகாரிகள் 
என பலரையும் சந்தித்து சாதனை படைத்த சங்கம் 
NFTE க்கு வயது 60,,,,,,,,,,,தொடர்ந்தது வெற்றி நடை 
போட சபதமேற்போம் ,,, 
தோழர். SST (S.S. தியாகராஜன்) மறைந்தார்.
தேசத்தின் முதல் தொழிற்சங்கம் AITUC யின் அகில இந்திய துணைத் தலைவர் நேற்று  23-11-2013 அன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம்.   அவருக்கு கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவோம்.   அவர் ஆற்றிய உரை, கொடுத்த கல்வி கொஞ்ச நஞ்சமல்ல!  நமது மாநாடுகள் பலவற்றில் அவர் உரையாற்றியிருக்கிறார். அவரது மறைவு
தொழிற்சங்க இயக்கத்துக்கு பேரிழப்பு என்றால் மிகையாது.

Tuesday, November 19, 2013

மாநில செயற்குழு

     தருமபுரி SSA ல் கிருஷ்ணகிரியில் 20-11-2013 மாநில செயற்குழு 
             L JCM ,RJCM ,NJCM அமைக்கப்பட்ட சுழலில் ,     
            bonus  போராட்டம் நடத்தி முடித்த நிலையில் ,     
         ஒலிக்கதிர் பொன்விழா நடக்கயிருக்கிற வேளையில் , DEC 2013 டெல்லி தொழிலாளர் பேரணி நடக்கயிருக்கிற காலக்கட்டத்தில்      தருமபுரியில்  கூடி நாம் எடுக்கும் முடிவு இயக்கத்தை மேலும் முன்
எடுத்து செல்லவும் ,jan 2014 மேலும் கூடுதலாக உறுப்பினர் சேர்க்கவும் 
புத்தாண்டில் மேலும் பொலிவோடு நடை போடவும்  உதவும் ,,,,,  


                                   team of achievers celebrating victory in a competition-...


தக்க தருணத்தில் 
       உற்ற துணைவனாய் 
            விளங்கும்  சேலம் மாவட்டத்தின்  
                              புதிய மாவட்டச் செயலராக 
                                                 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
 தோழர். பாலகுமார் அவர்களை 
 வாழ்த்தி மகிழ்கிறது தஞ்சை மாவட்டச் சங்கம். 


   தலைவர் நூருல்லாவின் பாசறையில் 
வளர்ந்த, தேர்ந்த  இளைஞன் 
தோழன். பாலகுமாரின் பணி சிறக்கட்டும்.   
விருப்ப ஓய்வில் செல்லும் நமது மாநிலத் தலைவர் 
 தோழர். நூருல்லாவின் பணி ஓய்வுக்காலம் 
சிறப்பாக அமைய வேண்டும் என்றும்  
அவரை வணங்கி வாழ்த்துகிறோம்.

Tuesday, November 12, 2013

வாழ்த்துக்கள்
தமிழ் மாநில ஊழியர் சேமநலநிதிக்குழுவில்
(TAMILNADU CIRCLE  STAFF WELFARE BOARD) 
 NFTE சார்பில் ஊழியர் பிரதிநிதியாக 
நியமனம் செய்யப்பட்டுள்ள 
கடலூர் மாவட்டச்செயலர் 

அருமைத்தோழர்.
 R . ஸ்ரீதர் 
அவர்களின் பணி சிறக்க 
வாழ்த்துகின்றோம்.

Saturday, November 9, 2013

 திரு. J.V. ராஜாரெட்டி அவர்கள் 
5 ஆண்டு டெபுடேசனில் இப்போது ISRO வில்.

     முன்னாள் நமது பொது மேலாளரும் இந்நாள் திருச்சி பொது மேலாளரும் ஆன திரு. J.V. ராஜாரெட்டி அவர்கள் 5 ஆண்டு டெபுடேசனில் ISRO வில் பணியாற்ற ஸ்ரீஹரிகோட்டா செல்கிறார் என்ற செய்தி அறிந்து பெருமகிழ்வு கொள்கிறது தஞ்சை மாவட்டம். SHAR கண்ட்ரோலர் ஆக நவம்பர் 8 முதல்  துவங்கும் அவரது பணி மேலும் சிறக்கும் என்பதில் வியப்பில்லை.   தஞ்சை BSNL பொது மேலாளராக அவர் ஆற்றிய சிறப்பான சேவை சிறப்பு  ஸ்ரீஹரிகோட்டாவில் மேலும் மிளிரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

Friday, November 1, 2013

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR