தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, September 29, 2017

மாநிலச் செயற்குழுவிற்கு 
கிளைகள் அளித்த நிதி விபரம்.
======================ஒவ்வொரு கிளையும் 5000/- ரூபாய் 
நிதி அளிக்க வேண்டும் 
என்ற பட்டுக்கோட்டை மாவட்டச் செயற்குழு முடிவின்படி கீழ்கண்ட கிளைகள் 
நிதியினை அளித்துள்ளன. 
ஏனைய கிளைகளும் 
நாளை 30-09-2017 க்குள் அளித்திட வேண்டுகிறோம்.

1. மன்னை கிளை (தோழர் மோகன்) : 5000
2. திருவாரூர் SDOT கிளை
     (தோழர். சீத்தாராமன்)                  : 5000
3. திருத்துறைப்பூண்டி கிளை 
     (தோழர். கலைச்செல்வன்)            : 5000
4. வேதாரண்யம் கிளை 
   (தோழர் R.K. ராஜேந்திரன்)             : 5000                    
 நாளை பட்டியலை தொடர்வேன். 
நன்றி தோழர்களே!
K. கிள்ளிவளவன் 

மாநில செயற்குழு சிறக்க மனதார நன்கொடை 
அளித்த தோழர்கள்.
---------------


1. தோழர். பாலாஜி JE/TVN     : 2000
2. தோழர். V. பாலு TT/TTP      : 1000 
3. தோழர். K. காளிதாஸ் MNG : 1000
4. தோழர். ஆல்பர்ட் JE/TNJ     : 1000
5. தோழர். D. சேகர் TT/TVN     : 1000


01-10-2017 முதல்  
DA 5.3 % 
உயர்வு!  ( 124.3 )Thursday, September 28, 2017


கிளைச் செயலர்கள் 
கவனத்திற்கு.....

நமது  தமிழ் மாநிலச்சங்கத்தின் 
செயற்குழுவையொட்டி 
கிளைச்செயலர்கள்தங்களது
கிளையின் உறுப்பினர் எண்ணிக்கை,
அவர்கள் பெயர், பதவி விபரம் 
கடைசியாக மாநாடு நடந்த தேதி,
கிளை பொறுப்பாளர்கள் பட்டியல், 
வேறு பிரச்சினைகள் 
ஏதுமிருப்பின் அதுபற்றிய விபரம் 
மற்றும் மாநிலச் செயற்குழுவில் 
கலந்து கொள்ளவிரும்பும் 
தோழர்களின் விபரம் 
ஆகியவற்றை உடன் அளிக்கும்படி 
கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,
உங்கள் மாவட்டச் செயலாளர்,
கிள்ளிவளவன்.     
கிளை செயலர்கள் கூட்டம் 

26-09-10 காலை 11 மணிக்கு 
மாவட்டச் சங்க கட்டிடத்தில் 
தோழர். பன்னீர்செல்வம் 
தலைமையில் நடைபெற்றது. 
மாவட்டத் துணைத் தலைவர்கள் 
தோழர். பிரின்ஸ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டப் பொருளர் தோழர். சேகர், 
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் தோழியர். A. லைலாபானு ஆகியோரும் கருத்துரையாற்றினர். 


எல்லா கிளைகளிலிருந்தும் 
கிளை செயலர்கள் வந்திருந்தனர்.  

தோழர்களின் கருத்துரைக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. வருகின்ற 30-09-2017 க்குள் 
மாநிலச் செயற்குழு நிதியினை 
கிளைகள் அளித்திட வேண்டும்.
2. மாவட்டப் பொறுப்பாளர்கள்  
மற்றும் கிளைச் செயலர்கள் 
அனைவரும்  வரவேற்புக்குழு 
உறுப்பினர்களாக 
இருந்து செயல்பட வேண்டும். 
அன்புடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
 தோழர்.பி. சென்னகேசவன் JTO
NFTE தமிழ் மாநில  துணைத் தலைவர்.
30-09-2017 ல்  பணி ஒய்வு பெறுகிறார்.

1983 ல் RM ஆகத் துவங்கி 
லைன்மேன், TTA வாகப் பயணித்து 
JTO வாக பணியை நிறைவு செய்கிறார்.

சங்கப் பணியை 
துவங்கும் போது மாவட்டப் பொறுப்பு 
முடியும் போது மாநிலப் பொறுப்பு 
இடையில் தம் சங்கத்திலும், 
பொதுவுடைமை இயக்கத்திலும்
இடைவிடாத உழைப்பு. 

மாநாட்டுக்குப் பெயர் போன வேலூர் 
பல மாற்றங்களை உருவாக்கிய வேலூர்.
சைட்டில் சைடு அடிக்காத வேலூர்.

தஞ்சையைப் போல் 
தனது மாவட்டத்திலும் 
பெரிய அமைப்பு என்ற 
தடத்தைப் பதித்த வேலூர்.

மத்திய, மாநில, மாவட்ட அளவில் 
நடத்திய மாநாடு ஏராளம்.
 மாநாட்டுக்கு காட்சிகளில் 
வேலூர் நமக்கு மாதிரிப் பள்ளி! 
செயல் வீரர்கள் கைக்கொண்ட 
தனிப்படைத் தலைவன்  
 சென்னகேசவன்.

வேலூரிலே  தோழர்கள் 
தலைவனைப் பாராட்ட 
இன்று விழா எடுக்கிறார்கள்.
அவர் நலமுடன் வாழ்ந்து 
நாட்டுக்கும் வீட்டுக்கும் 
நனி சிறந்த பணியாற்ற  
நாமும் அவரை வாழ்த்துவோம்!

தோழமையுடன்,

தஞ்சை மாவட்டச் சங்கம்.Wednesday, September 27, 2017


NFTE - BSNL & TMTCLU 
ரூபாய் 7000/- போனஸ் கொடு!
மிகச் சிறப்பாக நடைபெற்ற 
  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
============
பெண் தோழியர்கள் 20 பேர் உள்ளிட்ட 180 
தோழர்கள் பங்கு பெற்ற மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் இணைப்பக வாயிலில் 26-09-2017 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. 
தோழர்கள் பட்டுக்கோட்டை நாடிமுத்து மற்றும் 
கூத்தாநல்லூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலர் 
குடந்தை தோழர். P. பாலமுருகன் அவர்கள் 
எழுச்சியுரையாற்றினார். 

https://youtu.be/Zw1CXctP4f4

முன்னாள் மாவட்டப் பொருளாளர் 
தோழர். S. சிவசிதம்பரம் மற்றும்
NFTE மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன் அவர்களும்  
இணைந்து கோரிக்கை முழக்கமிட்டனர்.


கோரிக்கையை விளக்கி TMTCLU 
மாவட்டச் செயலர் தோழர். D. கலைச்செல்வன்,
கிள்ளி, கவிஞர். இக்பால் , R.K. ராஜேந்திரன்,  பாஸ்டின் அமலநாதன், ஆரூர். சிவப்பிரகாசம், மன்னை  தாமஸ் எடிசன் ஆகியோரும் பேசினார். 

கிளை செயலர் தோழர்கள்  
திருவையாறு பத்மநாதன், மன்னை மோகன், பட்டுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி, வடசேரி பாலு, 
கூத்தாநல்லூர் ராஜசேகர், திருவாரூர் சீதாராமன்,
தஞ்சை SDOT கிளை பாண்டுரங்கன்,
இவர்களோடு தஞ்சை கண்ணன், தஞ்சை வேதமணி,
 பட்டுக்கோட்டை குணசேகர், விஜயராகவன், ராஜன் 
ஆகியோரும் பேசினார்கள்.

பட்டுக்கோட்டையிலிருந்து செல்வகுமார் தலைமையிலும், 
திருத்துறைப்பூண்டியிலிருந்து 
அறிவழகன் தலைமையிலும்  
 வேனில் திரண்டு வந்த தோழர்களுக்கு 
நன்றியும் பாராட்டும்.


SEWA  தலைவர் தோழர். முருகையன் அவர்கள் 
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

இறுதியாக தோழர். K. சின்னப்பா அவர்களின் 
நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. 


மேலும் ஆர்பாட்டக் காட்சிகள் கீழே:


தஞ்சையில் நடைபெறும் 
தமிழ்மாநில செயற்குழு சிறக்க 
மனமுவந்து அன்றைய தின 
குடிதண்ணீர் செலவினை 
ஏற்றுக் கொண்ட அன்புத் தோழர்களை  
வணங்கி வாழ்த்துகிறோம்!
=========================================
தோழர். பாஸ்டின் அமலநாதன்  
துணைசெயலாளர்,  
GM ஆபீஸ் கிளை, தஞ்சாவூர். 

தோழர். R.K. ராஜேந்திரன்  அவர்கள் 
NFTE கிளை செயலாளர் &
மாவட்டப் பொருளர், TMTCLU, வேதாரண்யம். 

தோழர். K. சின்னப்பா அவர்கள்,
 கிளை செயலர், GM ஆபீஸ், தஞ்சாவூர்.
=====================================

============================================================
நன்றியுடன், 
 தஞ்சை மாவட்டச் சங்கம். 

Tuesday, September 26, 2017

திருவாரூர் 
தோழர். V. சீனிவாசன் ATT அவர்கள் 
30-09-2017 இன்று பணி ஒய்வு பெறுகிறார். 
அவரது பணிஓய்வு காலம் 
சிறப்பாக அமைந்திட 
தஞ்சை மாவட்டச் சங்கம் 
வாழ்த்தி மகிழ்கிறது.

Monday, September 25, 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
26-09-2017
மாலை 4 மணி 
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம்.
!

திரண்டு வாரீர்!!
 NFTE & TMTCLU தஞ்சை மாவட்டச் சங்கம் 

தோழர். தங்கமணி அவர்கள் 
AGM (EB), தஞ்சை.  
நேற்றிரவு மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு 
பெரிதும் வருந்துகிறோம்!
தோழரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண், 
தஞ்சை மாவட்டச் சங்கம்.


தசரா ஆபர் 

EXTRA TALK TIME
TOPUP 120 : GET TALK TIME 130

FULL TALK TIME
TOPUP 80 : GET TALK TIME 80

OFFER PERIOD 
25.09.2017 TO 05.10.2017

OFFER ONLY THROUGH BSNL PORTAL (www.portal.bsnl.in) / BSNL APP

மத்திய சங்க செய்தி!

BSNL அமைப்பின் 
நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 
01.01.2017 முதல் BSNL ஊழியர்களுக்கு 
15 சத ஊதிய உயர்வு 
வழங்குவதற்கான முடிவு 
எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பெறும் அளவன்ஸ்களில் 
 கூடுதல் இருக்காது.

இந்த முடிவை மேலும் ஒரு  குழு ஆ ராயும்.

பின்னர் BSNL வாரியத்தின் ஒப்புதலுக்கு
அது அனுப்பப்படும்.

அதன் பின் DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
*
நமது NFTE மத்திய சங்கத்தின் சார்பாக 
அகில இந்தியச் செயலர் 
தோழர். C. சந்தேஷ்வர்சிங் 
 சம்மேளனச் செயலர்கள் 
தோழர். S.S. கோபாலகிருஷ்ணன் 
மற்றும் K.S. குல்கர்னி ஆகியோர் 
19-09-2017 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில்
GM (Restructuring) அவர்களைச் சந்தித்து 
2014-15, 2015-16 ஆகிய ஆண்டிற்கான 
போனஸ் வழங்குவது குறித்து விவாதித்தனர். 
BSNL ஊழியர்களுக்கு 
போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் 
Director (HR) அவர்களின் அனுமதிக்காக 
கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 
GM (Restructuring) அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sunday, September 24, 2017

24-09-2017

========================================================


தமிழ் மாநில செயற்குழுவிற்கு 
வீடியோ & ஆடியோ 
செலவுகளை ஏற்கும்
 மன்னார்குடி கிளை
யினை வாழ்த்தி வரவேற்கிறோம்.
===================================

நன்றியுடன், 
 தஞ்சை மாவட்டச் சங்கம். 

Saturday, September 23, 2017

TRAI அறிவிப்பு
இன்டெர்கனெக்ட் யூசேஜ் சார்ஜ் (IUC )
விலை 14பைசாவிலிருந்து 6 பைசாவா குறைக்கப்படுகிறது.
-------------------------------------------------------------

அம்பானிக்காக அரசுக்கு வர வேண்டிய 3000கோடியை இழக்கும் மோடியின் அயோக்கியத்தனம்:
கார்ப்ரேட் கம்பெனிகளால் ஊதி பெருசாக்கப்பட்ட மோடி பலூன் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் அந்த கார்ப்ரேட்களுக்கு நம் பணத்தை வாரி வழங்கி தனது இராஜவிசுவாசத்தை காட்டுவார்.

கடந்த காலங்களில் அதானிக்கு ஆஸ்திரேலியா சுரங்கத்தை வாங்கிகொடுத்தாக இருக்கட்டும். மகேந்திரா கம்பெனிக்கு பிரான்ஸ் நாட்டுடன் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் ஓப்பந்தம் வாங்கி கொடுத்ததாகட்டுமென்று இதற்கு நிறைய உதாரணங்களை சொல்ல முடியும்.அதில் புதிதுதான் அம்பானிக்காக நாட்டிற்கு 3000கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இந்த மோடி.

நாம் மொபைல் போனில் பயன்படுத்தும் ’இண்டெர்நெட் காலுக்கான’ விலையை 14பைசாவிலிருந்து 6பைசாவா குறைக்கிறோமென்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நேற்று அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்களென்று அரசு சொல்லியிருக்கிறது.

ஆனால் இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் அது ரிலையன்ஸ் என்றாலும் ஏர்டெல் என்றாலும் வோடபோன் என்றாலும் அல்லது மற்ற நிறுவனங்களானாலும் சரி எல்லோருக்கும் இணையதள சேவையை இலவசமாக அது ஒரு நாளைக்கு 1GBயிலிருந்து எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ளலாமென்று கொடுக்கிறது. இதனால் நமக்கு வாய்ஸ் காலுக்கு பைசா எவ்வளவு இருந்தாலும் ஒரு பிரச்சனையுமில்லை. ஏனென்றால் நமக்கு தான் இலவசமாச்சே. ஆனால் நமக்காக குறைக்கிறொமென்று சொல்லி தற்போது ஏன் யாருக்காக இந்த விலையை குறைக்க வேண்டும்.

அதாவது அம்பானியின் ஜியோ சேவை வந்தபின்பு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அனைத்து சேவைகளும் இலவசமாக பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் இனையதளத்தை எவ்வளவு வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாமென்பது. அதன்படி இண்டர்நெட் காலுக்கு இதற்குமுன் ஒவ்வொரு காலுக்கும் 14பைசாவை சேவை கட்டணமாக அரசுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டியிருந்தது. இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துகொண்டிருந்தது. இதை தற்போது பாதிக்கும் குறைவாக குறைத்ததன் விளைவாக அரசுக்கு வரவேண்டிய வருவாய் பல்லாயிரம்கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

குறிப்பாக இந்த விலை குறைப்பினால் அதிகமான லாபமடையப்போவது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தான். ஏனென்றால் அதிரடியாக சலுகை விலையில் ஜியோ மொபைல் போன் கொடுக்கப்போகிறோம், இலவசமாக பேசிக்கொள்ளலாம், எவ்வளவு வேண்டுமானாலும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்

என்று ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து இந்த குறுகிய காலத்திலேயே 200மில்லியன் வாடிக்கையாளரை சேர்த்து வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதனால் ஏற்கனவே இருந்த 14பைசா என்ற நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு நபருக்கு சராசரியாக 30ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. இதனால் வருடத்திற்கு அவர்களுக்கு 7500கோடி ரூபாய் அரசுக்கு சேவை கட்டணமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது இது பாதிக்கும் அதிகமாக குறைந்து விட்டப்படியால் இனிமேல் அவர்களுக்கு வருடத்திற்கு 3000கோடி ரூபாய் மிச்சமாகும். அவர்களுக்கு மிச்சமாகுமென்றால் அரசுக்கு கிடைத்துக் கொண்டிருந்த வருவாயில் 3000கோடி ரூபாய் இழப்பு எற்படுமென்று பொருள்.

இந்த 3000கோடி ரூபாய் என்பது ரிலையண்ஸ் என்ற ஒரு நிறுவனத்திற்கு மட்டும் கிடைக்கப்பெறப்போகிற லாபம். இந்தியாவில் இதுபோல இருக்கிற எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்தால் எவ்வளவு பணத்தை இந்த அரசு கார்ப்ரேட்களுக்காக இழக்கிறது என்று பாருங்கள். இந்த பணம் மட்டும் அரசுக்கு கிடைத்திருந்தால் நாடெங்கும் விவசாயிகள் படுகிற கஷ்டத்திற்கு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கியிருக்க முடியும். இல்லை வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தற்போது ஏற்பட்டிருக்கிற பெருவெள்ளத்தில் சிக்கியிருக்கிற மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்க முடியும். ஆனால் அவர்களுக்காகவெல்லாம் மோடியின் 56’இஞ்ச் மார்பு ஒருநாளும் துடிக்காது. அதானி அம்பானிகளுக்கென்றால் அந்த மார்பு வேகமாக துடிக்க ஆரம்பித்து விடும். ஏனென்றால் அந்த மார்பை மோடிக்குள் செலுத்தியது இந்த கார்ப்ரேட் கும்பல்கள் தான்.

இப்போது இன்னொரு கேள்வி உங்களுக்கு எழுகிறதா? இவ்வளவு கோடிகள் இழப்பு எற்பட்டால் இதை இந்த அரசு எப்படி சரிகட்டுமென்று. அதுதான் இருக்கவே இருக்கோமே அடிமை மக்களாகிய நாம். நம்மிடமிருந்து தான் பறிப்பார்கள். அது நேரடியாக இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதிக வரி கொண்ட GST போன்றவற்றின் மூலம் அரசு அதை ஈடுகட்டிவிடும். அப்போ நாம் என்ன நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு கேட்கிறது. நாம் பொருளாதாரத்தில் நலிவுற்று சாக வேண்டியது தான்.

 3000/-
தஞ்சையில் நடைபெறும் 
தமிழ்மாநில செயற்குழு சிறக்க 
தாமாக முன்வந்து  ரூ. 3000/- 
நன்கொடை அளித்த அன்புத் தோழரை  
வணங்கி வாழ்த்துகிறோம்!
=========================
23-09-2017
தோழர். பாப்பா. நாகராஜ் அவர்கள்,
டெலிகாம் டெக்னீஷியன், ஒரத்தநாடு. 


இவண், 
 தஞ்சை மாவட்டச் சங்கம். 

கிளைச் செயலர்கள் கூட்டம் 
=====================================================
26-09-2017 காலை 11 மணி 
சங்க அலுவலகம், 
CTO காம்பௌண்ட், தஞ்சாவூர்.
தலைமை 
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர். 
பொருள்
அக்டோபர் 06
தமிழ் மாநிலச் செயற்குழு பற்றி...
மாநிலச்  செயற்குழு நிதி
வேண்டல் 
குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்று 
தக்க ஆலோசனை தந்திடுதல்.
அன்புடன் அழைப்பது,
தோழர். K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர். 
தோழர். A. சேகர், மாவட்டப் பொருளர். 

============================================================NFTE
TMTCLU 
 ஆர்ப்பாட்டம் 
26-09-17 மாலை    4 மணி 
தஞ்சை மேரிஸ் கார்னர் இணைப்பகம். 


கோரிக்கை 

தமிழ் மாநில நிர்வாகமே!
நமது நிறுவனத்தில் பணிபுரியும்  
ஒப்பந்த ஊழியர்களுக்கு 
இந்த ஆண்டிற்கான 
போனஸ் தொகையாக ரூ. 7000/- ஐ 
உடனடியாக  வழங்கிடு.

தலைமை 
தோழர். C. நாடிமுத்து, மாவட்டத் தலைவர்.

முன்னிலை 
தோழர். பாஸ்டின் அமலநாதன் GM ஆபீஸ்.
தோழர். N. கார்த்திகேயன் GM ஆபீஸ். 

சிறப்புரை 
தோழியர் A. லைலாபானு அவர்கள், 
மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்.

தோழர். P. பாலமுருகன், மாநில அமைப்புச் செயலர்.

தோழர். D. கலைச்செல்வன், மாவட்டச் செயலர்.

தோழர். K. கிள்ளிவளவன், மாவட்டச் செயலர், NFTE

தோழர். S. சிவசிதம்பரம், 
முன்னாள் மாவட்டப் பொருளர். 

தோழர். R.K. ராஜேந்திரன், மாவட்டப் பொருளர். 

தோழர். S. சிவசங்கரன், மாநில துணைத் தலைவர்.

தோழர். தாமஸ் எடிசன்,மாநில அமைப்புச் செயலர்.

நன்றியுரை 
தோழர். K. சின்னப்பா அவர்கள்,
GM ஆபீஸ் கிளைச்    செயலர்.

திரண்டு வருக தோழர்களே!!
============================================

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR