தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Tuesday, April 29, 2014

பணி நிறைவு வாழ்த்துக்கள்...

NFTE இயக்கத்தின் சொத்து 
 
தொழிற்சங்க முன்னோடி 

தோழர். இல.சந்திரபிரகாஷ் 
       GM, அலுவலகம், தஞ்சை.  

அவர்கள் 30/04/2014 அன்று 
இலாக்காவில் இருந்து
 பணி நிறைவு பெறுகின்றார்.

இன்று 29/04/2014 தஞ்சையில் 
மாஸ் திருமண மண்டபத்தில் 
பணிநிறைவு விழா நடைபெறுகின்றது.

பல்லாண்டு வாழ்ந்திட..
வையகம் பயனுற வாழ்ந்திட.. 
நமது வாழ்த்துக்கள்..

Friday, April 25, 2014

 
தேசியக்குழு கூட்ட  முடிவுகள் 

23/04/2014ல் டெல்லியில்  நடந்த NJCM தேசியக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு 
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
 • JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது  பற்றி பரிசீலிக்கப்படும்.
 • புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர். 
 • JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
 • SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
 • பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
 • புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
 • 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
 • அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS  மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
 • ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
 • TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.

Saturday, April 19, 2014

திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. 

திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார, சமூகரீதியில் திருநங்கைகளை பின்தங்கியவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும்  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC)
இனிமேல் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாவது பாலினம் என்ற அடிப்படையில் திருநங்கைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) கருதி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
6 மாத காலத்திற்குள் சட்டதிருத்தம்
இதன்மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இனியும் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டதிருத்தத்தை இன்னும் 6 மாத காலத்திற்குள் கொண்டுவருவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், சமூக நலத்திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சிறப்பு கழிப்பறைகள்
அத்துடன் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு நபர் தனது பாலினத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டால், அந்த பாலினத்தை பெற அவளுக்கு அல்லது அவனுக்கு உரிமை உள்ளது; அவர்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பு விடுப்பு (CCL)  

மத்திய அரசில் பணி புரியும் பெண்கள் 730 நாள் குழந்தை பராமரிப்பு விடுப்பையும் ஒட்டு மொத்தமாக எடுக்கலாம்
என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. விடுப்பு விதிகளின்படி
2 வருட விடுப்பை ஒட்டு மொத்தமாக எடுக்க இயலாது என்ற கல்கத்தா
உயர்நீதிமன்ற தீர்ப்பு இதன் மூலம் திருத்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவச SIM 

அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM வழங்க வேண்டும் என்பது JCM தேசியக்குழு கூட்டக்கோரிக்கை. இதனை அமுல்படுத்தும் வகையில்
தற்போது வழங்கப்பட்டுள்ள இலவச SIM விவரங்களை மாநில நிர்வாகங்களிடம்  BSNL நிர்வாகம் கேட்டுள்ளது.    
இலவச SIMல்  மாதந்தோறும் ரூ.200/=க்குப்பேசலாம்.

Monday, April 14, 2014


இந்திய அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கர்                  

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14-ம் தேதி ராம்ஜி-பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.

மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒருமுறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போல், வண்டியை கீழே கவிழ்த்து கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் மேல்சாதியின்ர் தொடமாட்டார்கள். 

பாடம் தொடர்பான கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற, உள்ளங்கையில் நீரை ஏந்தித்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பருகவேண்டும். இந்த மாணவர்கள் அமருவதற்கென ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். அவர்கள் வடமொழி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

அம்பேத்கரின் இயற்பெயர், பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பதாகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேகர் என்பதை மாற்றி, தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரது பெயருடன் சேர்த்தார்.

1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்த அம்பேத்கர், தனது கல்வியைச் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.

கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ. இளங்கலைப் பட்டதாரியானார்.

படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். 

பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்தார். அவரதி இந்த உதவியின் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையையும் அம்பேதகர் பெற்றார்.

உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கி, தீண்டாமை ஒழிய பரோடா மன்னருடன் இணைந்து போராடினார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்த அவர், சிறந்த ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார்.

பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற போது 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வர்த்தகம்' என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், 'இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு' என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்' என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை' என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டி.எஸ்.சி. பட்டம் பெற்றார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று மிக தீவிரமாக போராடினார். 

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்' என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை' தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

இதன் விளைவாக செப்டம்பர் 24, 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'புனா ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. 

வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றி சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது. அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத்தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

சவீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அம்பேத்கர் 1948-ல் இருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. 1955-ம் ஆண்டில் அவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதி முடித்த 3 நாட்களுக்கு பிறகு,டெல்லியிலுள்ள வீட்டில் 06-12-1956 தூக்கத்திலேயே அந்த மாமனிதரின் உயிர் பிரிந்தது.

இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ல் இவருக்கு வழங்கப்பட்டது.2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராக பாபா சாகேப் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

’பாரத ரத்னா’ பாபா சாகேப் அம்பேத்கரின் 123-வது பிறந்த தினமான இன்று, ’அவர் முழுமூச்சாக எதிர்த்துப் போராடிய தீண்டாமை மற்றும் சாதி- மத பேதம் ஆகிய சமூக நோய்களை நாட்டை விட்டு விரட்டுவோம்’ என்று வீர சபதம் ஏற்போம்.

வெல்க பாரதம்! வளர்க தமிழகம்! 
அண்ணல் அம்பேத்கரின் பெரும்புகழ் வாழ்வாங்கு வாழ்க !!
 

Wednesday, April 9, 2014

திருவாரூர் SDOT கிளையின் சிறப்புக்கூட்டம்

திருவாரூர் SDOT கிளையின் சிறப்புக்கூட்டம் 7.4.2014 தோழர் KDC பாண்டியன் தலைமையில் நடைபெற்றது .தோழியர் வாசுகி அஞ்சலி உரை நிகழ்த்தினார் .தோழர் கூடூர் குணா கிளைச்செயலர் வரவேற்புரை நிகழ்த்தினர். தோழர் கிள்ளி TMTCLU மாவட்டசெயலர் துவக்கவுரை நிகழ்த்தினர் .நகர தொழிற்சங்கதலைவர்கள்வாழ்த்துரைவழங்கினர்,
TMTCLU மாவட்ட தலைவர் கலை, அண்ணா தொழிற்சங்ககிளைசெயலர்தோழர்செந்தில்மற்றும் அண்ணாதொழிற்சங்கதஞ்சைமாவட்டசெயலர்
தோழர் கஜராஜநிதி, அண்ணா தொழிற்சங்கமாநிலத்துணைசெயலர்தோழர்சுந்தரராஜன்,மகளிர் 
ஒருங்கிணைப்புக்குழுபொறுப்பாளர் லைலாபானு  NFTEமாவட்டபொருளாளர்தோழர் பக்கிரி,GM(O )
கிளைசெயலர் தோழர்சின்னப்பாஆகியோர்கள் 
வாழ்த்துரை வழங்கினார்கள். மற்றும் RGB உறுப்பினர்கள் தோழர் செல்லையன் ,R .R, மதியழகன், கிருஷ்ணமுர்த்தி ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர் .தோழர் சீதாராமன் நிகழ்ச்சியைஒருங்கிணைத்துவழங்கினார்.தோழர் நடராஜன் மா.து.செ வாழ்த்துரை வழங்கினார் மாநிலச்செயலர் தோழர் R .பட்டாபிராமன் நிறைவுரையாற்றினார்.தோழர்D.சேகர்பொருளர்
நன்றிவுரையாற்றினார்.150க்கும்மேற்பட்ட
தோழர்களும்தோழியர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.        TMTCLU
தமிழ் மாநில தொலை தொடர்பு 
ஒப்பந்தத் தொழிலாளர்  சங்கம் 
தஞ்சை மாவட்டம்.

மாநாட்டு அறிவிப்பு 

நாள்: 06-05-2014 செவ்வாய்கிழமை.
இடம்: மங்கை மஹால், திருத்துறைப்பூண்டி.

           செயற்குழு                                        மாவட்ட மாநாடு
காலை 10:00  TO 01:00                        மாலை 03:00 TO 07:00

பங்கேற்போர்:

தோழர் R K,  பட்டாபி, 
தமிழ்மணி, R. செல்வம் ,விஜய் 

மற்றும் 

K. நடராஜன், முரளி ACS/சென்னை, பிரின்ஸ்,  சிவசங்கரன், 
தாமஸ் எடிசன் CL /தஞ்சை  

இவர்களுடன் 

NFTE மாவட்டச் சங்க, கிளைச் சங்க, TMTCLU நிர்வாகிகள்  பங்கேற்கிறார்கள்.

திரளாய் வருக தோழர்களே!

மாநாட்டு அழைப்பிதழுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறோம்!

தோழமையுடன்,

D. கலைச்செல்வன்.    K. கிள்ளிவளவன்.   S. சிவசிதம்பரம்.
      தலைவர்                        செயலர்                     பொருளர்.  

Wednesday, April 2, 2014


NFTE-BSNL
TMTCLU
தமிழ் மாநில தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்  சங்கம் 
மாநில சிறப்பு மாநாடு காரைக்குடி 

           "எல்லோரும் எல்லாம் பெற வேண்டும்" என்று பாடிய கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில்(காரைக்குடி) 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் 100க்கும் மேற்பட்ட நிரந்திர ஊழியர்களும் கலந்து கொண்டு ஒப்பந்த தொழிலாளர் மாநாட்டை சிறப்பித்தனர். தோழர் ஆர் கே தலைமையேற்க, காரைக்குடி TMTCLU  மாவட்ட செயலர் தோழர் P ராமசாமி வரவேற்றிட, தோழர் நாகேஸ்வரன் அஞ்சலியுரையாற்றிட , தோழர் R பட்டாபிராமன் பொருள் பொதிந்த துவக்கவுரை நிகழ்த்தினார்.மாநில பொதுச்செயலாளர் S தமிழ்மணி அறிக்கையை சமர்ப்பித்து அறிமுகவுரையாற்றினார்.
            AITUC-ன் மாநில பொதுச்செயலாளர் தோழர் T.M. மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.  AITUC -ன் மத்திய செயற்குழு உறுப்பினர் தோழியர் மீனாள் சேதுராமன், AITUC -ன் காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் ரத்தினம், AITUC -ன் போக்குவரத்து துறை தோழர் மணவழகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
           தோழர்கள் சேது,லட்சம், முருகேசன்,முரளி (சென்னை), ராபர்ட் (கோவை), நடராஜன்(தஞ்சை), காமராஜ்(புதுவை), இரா ஸ்ரீதர், லோகநாதன்(கடலூர்), மனோகரன்(திருச்சி) மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  பல ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்தது மாநாட்டின் சிறப்பம்சம்.
             தோழர் நல்லுசாமி TM மாவட்ட செயலர் TMTCLU ஈரோடு,தோழர் M S குமார் கடலூர், தோழர் P முருகேசு மன்னார்குடி, தோழர் M இசையரசன் சேலம் ,தோழர் M S  தாளமுருகன் அறந்தாங்கி, தோழர் C வெங்கடேசன் வேலூர், தோழர் S மாடசாமி காரைக்குடி,தோழர் K மணி மதுரை , தோழர் B முத்து வைத்திலிங்கம் கும்பகோணம், தோழர் S ரமேஷ் ஈரோடு, தோழர் கோபால் தஞ்சாவூர் , தோழர் முருகன் தூத்துக்குடி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
         தோழர் ஆர் கே  தனது நிறைவுரையில் மே 17-ல் தீர்மானம் நிறைவேற்றம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் அதனை தொடர்ந்து தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன் பெருந்திரள் தர்ணா போராட்ட அறைகூவல் விடுத்து எழுச்சியுரையாற்றினார்.
            ஒப்பந்த தொழிலாளர் சங்க இணைய தளம் துவங்கவும் முடிவு செய்யப்பட்டது.
            இறுதியில் விழுப்புரம் தோழர் A சுப்பிரமணி நன்றியுரையாற்ற மாநாடு நிறைவு பெற்றது.

நிர்வாகிகள் பட்டியல் :

தலைவர்                        : தோழர்.ஆர்.கே. சென்னை

துணை தலைவர்கள்   : 1. தோழர் M .மாதவன், TM , அறந்தாங்கி.
                                              2. தோழர் S .பிரின்ஸ், தஞ்சாவூர்
                                              3. தோழர் கிருஷ்ணமூர்த்தி, கோவை
                                              4. தோழர் E .கோபாலகிருஷ்ணன்,CL மதுரை
                                              5. தோழியர் R .சக்தி, CL , STR - திருச்சி.

பொதுச் செயலாளர்      : தோழர்.R . செல்வம், Sr TOA     கடலூர்

இணைச் செயலாளர்கள் : 1. தோழர்.S தமிழ்மணி, கடலூர்.
                                                   2. தோழர் S சிவசங்கரன், தஞ்சாவூர்
                                                   3. தோழர் ஜோசப் TM நாகர்கோயில்

துணைச் செயலாளர்கள் :  1. தோழர்.A மோகன், CL ,   தூத்துக்குடி,
                                                    2.தோழர் M.சரவணன், CL,புதுச்சேரி
 

                                                    3. தோழியர்.A.சகாயராணி,  CL ,திருச்சி
                                                    4. தோழர் B முத்துவைத்திலிங்கம்,CL குடந்தை 
                                                    5. தோழர் A சண்முகசுந்தரம், TM ,சேலம்
                                                                                                    6. தோழர் A.சுப்பிரமணியம்,CL விழுப்புரம் 
                                          

பொருளாளர்                          : தோழர்.M விஜய்ஆரோக்யராஜ்,SrTOA 
                                                        குடந்தை

துணை பொருளாளர்         : தோழர் M சையது முகமது CL , STR திருச்சி
                                         

அமைப்புச் செயலாளர்கள் : 1. தோழர் நல்லுசாமி, TM ,  ஈரோடு
                                                       2.  தோழர் C வெங்கடேசன், CL வேலூர்
                                                       3.  தோழர் இளங்கோ,  CL தர்மபுரி
                                                       4.  தோழர் R மாரிமுத்து, CL காரைக்குடி
                                                                                                     5.  தோழர் S தாமஸ் எடிசன், CL தஞ்சாவூர்
                                  
தணிக்கையாளர்                   : தோழர் முனியன், தர்மபுரி.

தீர்மானங்கள் 
1) மத்திய சங்க கோரிக்கை சாசனப்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ 10000/-, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3000/- பெற்றிட அகில இந்திய இயக்கங்களில் பங்கு பெற்று போராட வேண்டும்.
2)ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய வாரவிடுமுறை வழங்கப்பட வேண்டும்.
3) ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதந்தோறும் 5-ம்தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என மாநாடு நிர்வாகத்தை கோருகிறது.
4) ஒப்பந்த பணி தன்மை UNSKILLED /SEMISKILLED /HIGH  SKILLED   என அடையாளப்படுத்தி  சமஊதியம் வழங்கப்பட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
5) ஒப்பந்த ஊழியர்களின் ஊதிய விபரம் / EPF, ESI பிடித்தம் எண் ஆகிய தகவல் அடங்கிய ஊதியப் பட்டியல் வழங்கப் படவேண்டும்..
6) EPF / ESI  பிடித்தம்  குறித்த தகவல்கள் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்கப்படவேண்டும்.
7) ஒப்பந்த ஊழியர்களின் பணிச்சான்று (SERVICE CERTIFICATE ) வழங்கப்பட வேண்டும்.
8) ஆண்டுதோறும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் உத்திரவாதமான (ASSURED) போனஸ் வழங்கப்படவேண்டும்.
9) ஒப்பந்த ஊழியர்களுக்கு நிர்வாகம் / ஒப்பந்தக்காரர் அடையாள அட்டை வழங்க வேண்டும்..
10) மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரர்களின் பட்டியல்,முகவரி, ID விபரம் வெளியிடப்படவேண்டும்.அவர்களின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின்பெயர்ப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும்.
11) ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குரூப்இன்சூரன்ஸ் திட்டம் உருவாக்கிட வேண்டும்.
12) ஒப்பந்த ஊழியர்களுக்கான உத்தரவுகள்,வழிகாட்டல்கள், விளக்க உத்தரவுகள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட மாநில சங்கம் திட்டமிடவேண்டும்.
13) "E-SEWA'  முறையில் EPF கட்டப்படவேண்டும்.பணியாற்றும் மாவட்டத்திலேயே EPF தொகையைஒப்பந்த ஊழியர்களுக்கு கட்டிட நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும்.
14)ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனைகளைகண்காணித்து முறைப்படுத்திட ஒரு தனி பொறுப்புஅதிகாரி நியமித்திட வேண்டும். 
15) பரிவு அடிப்படைப் பணி விண்ணப்பித்து பணிமறுக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த ஊழியர் பணி வழங்கிட மாநில நிர்வாகத்தை இந்தசிறப்பு மாநாடு கோருகிறது..
16) துப்புரவுத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 4 மணிநேரம் பணி வழங்கப்பட வேண்டும்.
        சிறப்பு மாநாட்டை சிறப்பாக நடத்திட்ட மாவட்ட செயலர் தோழர் மாரி , மாவட்ட தலைவர் முருகன் உள்ளிட்ட காரைக்குடி மாவட்ட தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த நன்றி 
ஒன்றுபட்டு போர் புரிந்தே 
உயர்த்துவோம் செங்கொடியை
 இன்றுடன் தீருமடா 
இம்சை முறைகளெல்லாம் 
                                              -தோழர் ஜீவா 

                                                                  தோழமையுள்ள,
தோழர் ஆர் கே             M விஜய்ஆரோக்கியராஜ்                   R செல்வம் 
மாநிலத்தலைவர்             மாநில பொருளாளர்   மாநில பொதுச்செயலாளர் 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR