தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, March 29, 2014


TMTCLU
ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி VDA உயர்வு 
                  ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி  
VDA உயர்ந்துள்ளது.
விலைவாசிப்படி உயர்வு 01/04/2014ல் 
இருந்து அமுலுக்கு வரும்.
A பிரிவு நகரத்தில் ரூ.329/=
B பிரிவு நகரத்தில் ரூ.273/=
C பிரிவு நகரத்தில் ரூ.220/=

இது ஒரு நாள் கூலியாகும்.

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், தஞ்சை.


Friday, March 28, 2014

TMTCLU

தமிழ் மாநில தொலைத்தொடர்பு 

ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் 

தமிழ் மாநில சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்பு 

தோழர் TM. மூர்த்தி 

AITUC  - தமிழ்மாநில பொதுச்செயலர் 

தோழர் S. குணசேகரன், MLA 

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

தோழர் PL. இராமச்சந்திரன்
 
தலைவர் - சிவகங்கை AITUC 

தோழர் R. பட்டாபிராமன் 

NFTE - தமிழ் மாநிலச்செயலர் 

தோழர் ஆர்.கே 

TMTCLU  - தமிழ்மாநிலத்தலைவர் 

தோழர் S.தமிழ்மணி 

TMTCLU  - தமிழ்மாநிலச்செயலர் 

தோழர் K .சேது 

NFTE - மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

தோழர்களே.. வருக..
RGB தேர்தலில் (27-3-2014)NFTE மற்றும் அண்ணா தொழிற்சங்கங்களின் சார்பில் போட்டியிட்ட  6 தோழர்களையும் வெற்றி பெற செய்த அனைத்து தோழமையுள்ளங்களுக்கும் நன்றி ,,,நன்றி,,, நன்றி......   

1 .  S .இளங்கோவன்     411  74.1%

2 .  A .செல்லையன்      387  69.8%

3.   R .ராஜேந்திரன்        373  67.3%

4.   P .மதியழகன்           365  65.8%
                                                                                 
5.   S .கிருஷ்ணமூர்த்தி 350  63.1%

6.   P .முத்து                        347  62.6% 

மொத்த வாக்குகள்     602
பதிவானவை                559    92%
செல்லாதவை                  5   0.89%
செல்லத்தக்கவை       554    99% 
                                                                   நன்றி தோழர்களே ,

Wednesday, March 26, 2014

NFTE - BSNL 
பட்டுக்கோட்டை கிளை மாநாடு 

     பட்டுக்கோட்டை கிளை மாநாடு 17-03-2014 அன்று மாலை 5:00 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.  இப் பகுதியில் உள்ள அதிராம்பட்டிணம், பேராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய கிளைகளை இணைத்து ஒரே கிளையாக பட்டுக்கோட்டைக் கிளை துவக்கப்பட்டது.   கூட்டத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள்  உள்ளிட்ட  100 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். 
    தோழர்கள் M. புனிதசெல்வம் மற்றும் எஸ். சிவசிதம்பரம் தலைமை வகித்தனர்.   தோழர்கள் S. கிருஷ்ணமூர்த்தியும், S. சுப்பையன் அவர்களும்  முன்னிலை வகித்தனர். 
    வரவேற்புரையை தோழர் M. பிரபாகரனும், அஞ்சலியுரையை தோழர். R. செல்வகுமாரும் நிகழ்த்தினர்.   
   முன்னதாக தோழியர் D.  கீதா TTA அவர்கள் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார்.                               
      TMTCLU மாவட்டச் செயலாளர் தோழர் K. கிள்ளிவளவன் அவர்கள் கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். 
     மாவட்டத் தலைவர் தோழர். S. பிரின்ஸ், மாவட்டச் செயலர் தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டப் பொருளர் தோழர். T. பக்கிரிசாமி, TMTCLU மாவட்டத் தலைவர் தோழர். D. கலைச்செல்வன் FNTO மாவட்டச் செயலர் தோழர். AMF. ஜெயசீலன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.   இவர்களோடு அனைத்துக் கிளைகளின் செயலாளர்களும் வாழ்த்துரை வழங்கினர். 
    இறுதியில்  AIBSNLEA மாநிலச் செயலர் தோழர். N. வீரபாண்டியன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரோடு மாநில துணைச் செயலாளர் தோழர். K. நடராஜன் மற்றும் மகளிர் அணி மாநில அமைப்பாளர் தோழியர். லைலாபானு  ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.   
      தோழர் ஜெகன், குப்தா நினைவாக உடல் ஊனமுற்ற தோழர் ஒருவருக்கு மூன்று சக்கர மிதி வண்டியும் விழாவில்  வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டாக இந்த உதவியை முன்கையெடுத்து செயலாற்றிய தோழர். R. செல்வகுமார் அவர்கள் தலைவர் வீரபாண்டியன் அவர்களால் சால்வை அணிவித்து பாராட்டப்பட்டார்.
          தோழர். கே. விஜயராகவன் அவர்கள் நன்றியுரையுடன் கிளை மாநாடு நிறைவுற்றது. 

 புதிய பொறுப்பாளர்கள் 

தலைவர்                                    : தோழர். C. சுந்தரராஜன் PTK 

துணைத் தலைவர்கள்         : தோழர். V. தனராஜ்         PTK 
                                                               ,,         M. பிரபாகரன்.  PTK 
                                                               ,,         K . பழனியப்பன் SVL 
                                                       
செயலாளர்                              : தோழர். S. சிவசிதம்பரம். PTK 

துணைச் செயலர்கள்          : தோழர். R செல்வகுமார்  PTK 
                                                              ,,         S. கிருஷ்ணமூர்த்தி KAS  
                                                              ,,         N. ரவிச்சந்திரன்  PVN         

பொருளாளர்                          : தோழர். K. விஜயராகவன்  PTK 

துணைப் பொருளர்கள்     :  தோழர். K. சந்தானகோபாலன் ARP 
                                                            ,,          K. அய்யாவு PVN  

செயற்குழு                             : தோழர். C. நாடிமுத்து  PVN 
உறுப்பினர்கள்                             ,,         A. குணசேகர் AGM
                                                            ,,         R. ரவிச்சந்திரன் PTK 
                                                           ,,          P. மதனகோபால் PTK     
                                                      தோழியர். V. விஜயலட்சுமி PTK 

அமைப்புச் செயலர்கள்  : தோழர். M. சேக்தாவுது PTK 
                                                          ,,         S. தமிழ்ச்செல்வன் PTK 

தணிக்கையாளர்              : தோழர். V. ராஜ்குமார் MKR
NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.

சென்னை கூட்டுறவு சொசைட்டி RGB தேர்தல் 
தேர்தல் நாள்: 27-03-2014
சொசைட்டியில் நடந்தது என்ன?  நடப்பது என்ன? 
இதில் வாக்காளர்களாகிய நமது பங்கு என்ன?

     நமது சொசைட்டி என்பது  உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுக்கவும், அவர்களிடம் இருந்தும் பங்கு தொகை  பெற்று சொசைட்டியை திறம்பட நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் டிவிடென்ட் வழங்கவும் தான் உருவாக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தி அதன் மூலம் லாபம் சம்பாதித்து உறுப்பினர்களுக்கு பங்கு வைப்பது என்ற முறையெல்லாம் கிடையாது.   பின் எப்படி சொசைட்டிக்கு 95.5 ஏக்கர் நிலம் வந்தது? அந்த கதையைப் பார்ப்போம்.  
      15 ஆண்டுகளுக்கு முன்னர் சொசைட்டியை  தனி அதிகாரிகள் நிர்வாகம் செய்த காலத்தில் இந்த நிலம் வாங்கப்பட்டது. 6 கோடி கூட பெறுமானமில்லாத நிலம்  16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்த 16 கோடியும் வங்கியில் கடன் பெற்றுத்தான்  வாங்கப்பட்டது. இன்று அது வட்டியுடன்  சேர்த்து 30 கோடியாக உயர்ந்துள்ளது.    அதன் பின்னர்தான் RGB யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கையில் நிர்வாகம் மாறியது.         
       இந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.     
   மீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10% பொதுப் பயன்பாட்டுக்காகவும் (பார்க் போன்றவை களுக்காக), 
          10% கமர்சியல்/இண்டஸ்ட்டரியல்  பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்படுகிறது.
       10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு (Economically Weaker Section)                ஒதுக்கப்படுகிறது.  680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.   
       மற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில்  நிலம் பிரிக்கப்படும்.     இப்படிச் செய்தால் 2500 ப்ளாட்டுகள் போடலாம். 
இந்த 2500 பிளாட்டுக்கும் 2500 பேரை, நம்மிடம் இருக்கின்ற 19,500 உறுப்பினர்களில், விருப்பம் தெரிவித்த  நபர்களிடமிருந்து, உயர் நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் தேர்வு செய்திட வேண்டும். பின்னர் தேர்வு செய்யப்பட்ட  சொசைட்டி உறுப்பினர்களிடம் அந்த நிலத்தை முறையான விலையில் விற்று அந்தத் தொகை முழுமையும் சொசைட்டியில் வரவு வைக்கப்பட வேண்டும்.     சொசைட்டி அந்தத் தொகையால் நிலம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து அடைக்கும்.  மீதமுள்ள தொகையை உறுப்பினர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தும். 
     குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரிய காலத்தில் நான்கைந்து லட்சத்திற்குள்  தங்களது சொந்தப் பணத்தை கொடுத்து   நிலத்தை வாங்கி குறித்த காலக் கெடுவுக்குள் ரிஜிஸ்தர் செய்து கொள்ள வேண்டும். 
     இதில் தலைவர், இயக்குனர்கள் மற்றும் RGB க்கள் எவருக்கும் யாதொருவிதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ கிடையாது. எல்லோரும் ஓர் நிலைதான்.   ( இங்குதானே இடிக்கிறது) . 
     இப்படித்தான் முடிவுகள் 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்டது. மார்க்கெட் வேல்யு அடிப்படையில் இந்த நிலத்தை 100 கோடிக்கு விற்க முடியும். அதிகாரப்பூர்வமற்ற வகையில் அதன் மதிப்பு 250 கோடிக்கும் மேல்.   என்ன செய்வது.  மனம் வரவில்லை. எனவேதான்,   அதற்குப் பின் முடிந்துள்ள 2 ஆண்டுகளும் இந்த முடிவு நிறைவேறா வண்ணம் BSNLEU தலைமை பார்த்துக்கொண்டது.  அதற்கு தலைமைப் பொறுப்பும் வருமானமும் இருந்தால் போதும்.  யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் காவு கொடுக்கும். 
         அதனால்தான் மீண்டும் இந்த முறை தேர்தலிலும் நியாயமான, சாத்தியமான அதே கோரிக்கையை  முன் வைத்துள்ளது. அதோடு நிலம் வாங்காதவர்களுக்கு ரூபாய் 40000/- என்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதியும் அளித்துள்ளது. சரியான ஜவ்வு பார்ட்டியான BSNLEU தலைமை வகித்தால் மீண்டும் குழப்பம்தான். 
    தோழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.   தேவையில்லாத வாக்குறுதிகளை NFTE எப்போதுமே அளிப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை இருக்கின்ற நிலைமைக்கேற்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன  முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியுமோ அதைக் கொண்டு வருவோம். 
        வட்டி குறைப்புக்கு பெரு முயற்சி  எடுப்போம். சொசைட்டி நிர்வாகத்தை முறைப்படி நடத்த உண்மையாக போராடுவோம்.   தனியார் வங்கி தவிர்த்து பொதுத் துறை வங்கியில்தான் கடன் வாங்கவேண்டும் என்பதை நிலை நிறுத்துவோம்.  இவைகளை எல்லாம்  மற்றவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.   NFTE  தோழர்களின் வெற்றி இவைகளை நிச்சயம் சாத்தியமாக்கும். 
                  நன்றி தோழர்களே! 

                                                                                                                        அன்புடன்,

26-03-2014                                                           எஸ். சிவசிதம்பரம்,
                                                                               RGB, பட்டுக்கோட்டை

Sunday, March 23, 2014

மாவீரன் பகத்சிங் நினைவு தினம்

                                   
பகத் சிங்
Bhagat Singh
ਭਗਤ ਸਿੰਘ
بھگت سنگھ
Bhagat Singh 1922.jpg
சிறையில் பகத்சிங்
பிறப்பு:செப்டம்பர் 271907
பிறந்த இடம்:லயால்பூர்பஞ்சாப்இந்தியா
இறப்பு:மார்ச் 231931
இறந்த இடம்:லாகூர், பஞ்சாப், இந்தியா
இயக்கம்:இந்திய விடுதலைப் போராட்டம்
முக்கிய அமைப்புகள்:நாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும்இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு

Tuesday, March 18, 2014
NLC யில்  ஒப்பந்த ஊழியர் ராஜ்குமார்  பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பாபநாசத்தில் NFTE ,BSNLEU தோழர்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் 

  • IROM SHARMILA IS TOP WOMAN ICON: MSN POLL
  • M

On International Women’s Day, we turned the spotlight on India’s women achievers who’ve leaned in, shattered glass ceilings and made their way in spheres as diverse as activism, business, politics and sport and asked you to vote for the top icon among these women. Irom Sharmila, the Iron Lady of Manipur, was the one most readers voted for as a symbol of woman power in today’s India.
Previous1 of 30Next
The results of the poll for top woman icon have put the Iron Lady of Manipur on the top of the list with 12% of the votes. It’s proof that unshakeable resolve and dedication to a cause are valued above success in business or politics when choosing our icons. Irom Sharmila has been on a fast for 13 years, demanding that the Armed Forces (Special Powers) Act of 1958 be repealed. She had seen firsthand the tyranny of the Act when she witnessed innocent bystanders being shot down by security personnel after an ambush by insurgents.
More recently, the Aam Aadmi Party sent out feelers to Sharmila, asking her to stand in the upcoming elections. She declined saying she did not believe the voice of a politician could be heard, when a citizen’s could not. Such is this woman’s unwavering commitment to her cause.


Monday, March 17, 2014

ஒலிக்கதிர் பொன்விழா நிகழ்ச்சியை வெற்றி பெற செய்த தோழர்களுக்கும்/தலைவர்களுக்கும் நன்றி பாராட்டு விழா .
தலைமை தோழர்           செல்வம் மா .தலைவர் ,
அறிமுகவுரை  தோழர்   ஸ்ரீதர் மாவட்ட செயலர் ,
துவக்கவுரை    தோழர்   சேது மதுரை 
வாழ்த்துரை  தோழர்கள் தஞ்சை நடராஜன் ,
குடந்தை விஜய்ஆரோக்கியராஜ் ,,
சிறப்புரை தோழர்கள் பட்டாபிராமன் மாநில செயலர் ,தமிழ்மணி TMTCLU மாநில செயலர் ,
R .K TMTCLU மாநில தலைவர் ஆகியோர்கள் 
கலந்துகொண்டு சிறப்பித்தனர் .200 க்கும் மேற்பட்ட தோழர்களும் /தோழியர்களும் கலந்து கொண்டனர் ,, 


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR