தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, March 26, 2014

NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.

சென்னை கூட்டுறவு சொசைட்டி RGB தேர்தல் 
தேர்தல் நாள்: 27-03-2014
சொசைட்டியில் நடந்தது என்ன?  நடப்பது என்ன? 
இதில் வாக்காளர்களாகிய நமது பங்கு என்ன?

     நமது சொசைட்டி என்பது  உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுக்கவும், அவர்களிடம் இருந்தும் பங்கு தொகை  பெற்று சொசைட்டியை திறம்பட நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் டிவிடென்ட் வழங்கவும் தான் உருவாக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தி அதன் மூலம் லாபம் சம்பாதித்து உறுப்பினர்களுக்கு பங்கு வைப்பது என்ற முறையெல்லாம் கிடையாது.   பின் எப்படி சொசைட்டிக்கு 95.5 ஏக்கர் நிலம் வந்தது? அந்த கதையைப் பார்ப்போம்.  
      15 ஆண்டுகளுக்கு முன்னர் சொசைட்டியை  தனி அதிகாரிகள் நிர்வாகம் செய்த காலத்தில் இந்த நிலம் வாங்கப்பட்டது. 6 கோடி கூட பெறுமானமில்லாத நிலம்  16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்த 16 கோடியும் வங்கியில் கடன் பெற்றுத்தான்  வாங்கப்பட்டது. இன்று அது வட்டியுடன்  சேர்த்து 30 கோடியாக உயர்ந்துள்ளது.    அதன் பின்னர்தான் RGB யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கையில் நிர்வாகம் மாறியது.         
       இந்த 95 .5 ஏக்கரில் 7 .5 ஏக்கர் நிலம் 4 வழிப் பாதைக்காக கொடுக்கப்பட்டு இழப்பீடாக ரூபாய் 1244015 /- பெறப்பட்டுள்ளது.     
   மீதி உள்ள 88 .2 ஏக்கரில் CMDA வழிகாட்டுதல்படி 10% பொதுப் பயன்பாட்டுக்காகவும் (பார்க் போன்றவை களுக்காக), 
          10% கமர்சியல்/இண்டஸ்ட்டரியல்  பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்படுகிறது.
       10 % பொருளாதார நிலையில் தாழ்ந்த பிரிவுக்கு (Economically Weaker Section)                ஒதுக்கப்படுகிறது.  680 sq. ft. என்ற அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.   
       மற்றவை 1200, 1500, 1800, 2400 sq. ft. என்கின்ற அளவில்  நிலம் பிரிக்கப்படும்.     இப்படிச் செய்தால் 2500 ப்ளாட்டுகள் போடலாம். 
இந்த 2500 பிளாட்டுக்கும் 2500 பேரை, நம்மிடம் இருக்கின்ற 19,500 உறுப்பினர்களில், விருப்பம் தெரிவித்த  நபர்களிடமிருந்து, உயர் நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் தேர்வு செய்திட வேண்டும். பின்னர் தேர்வு செய்யப்பட்ட  சொசைட்டி உறுப்பினர்களிடம் அந்த நிலத்தை முறையான விலையில் விற்று அந்தத் தொகை முழுமையும் சொசைட்டியில் வரவு வைக்கப்பட வேண்டும்.     சொசைட்டி அந்தத் தொகையால் நிலம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து அடைக்கும்.  மீதமுள்ள தொகையை உறுப்பினர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தும். 
     குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரிய காலத்தில் நான்கைந்து லட்சத்திற்குள்  தங்களது சொந்தப் பணத்தை கொடுத்து   நிலத்தை வாங்கி குறித்த காலக் கெடுவுக்குள் ரிஜிஸ்தர் செய்து கொள்ள வேண்டும். 
     இதில் தலைவர், இயக்குனர்கள் மற்றும் RGB க்கள் எவருக்கும் யாதொருவிதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ கிடையாது. எல்லோரும் ஓர் நிலைதான்.   ( இங்குதானே இடிக்கிறது) . 
     இப்படித்தான் முடிவுகள் 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்டது. மார்க்கெட் வேல்யு அடிப்படையில் இந்த நிலத்தை 100 கோடிக்கு விற்க முடியும். அதிகாரப்பூர்வமற்ற வகையில் அதன் மதிப்பு 250 கோடிக்கும் மேல்.   என்ன செய்வது.  மனம் வரவில்லை. எனவேதான்,   அதற்குப் பின் முடிந்துள்ள 2 ஆண்டுகளும் இந்த முடிவு நிறைவேறா வண்ணம் BSNLEU தலைமை பார்த்துக்கொண்டது.  அதற்கு தலைமைப் பொறுப்பும் வருமானமும் இருந்தால் போதும்.  யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் காவு கொடுக்கும். 
         அதனால்தான் மீண்டும் இந்த முறை தேர்தலிலும் நியாயமான, சாத்தியமான அதே கோரிக்கையை  முன் வைத்துள்ளது. அதோடு நிலம் வாங்காதவர்களுக்கு ரூபாய் 40000/- என்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதியும் அளித்துள்ளது. சரியான ஜவ்வு பார்ட்டியான BSNLEU தலைமை வகித்தால் மீண்டும் குழப்பம்தான். 
    தோழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.   தேவையில்லாத வாக்குறுதிகளை NFTE எப்போதுமே அளிப்பதில்லை. நம்மைப் பொறுத்தவரை இருக்கின்ற நிலைமைக்கேற்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன  முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியுமோ அதைக் கொண்டு வருவோம். 
        வட்டி குறைப்புக்கு பெரு முயற்சி  எடுப்போம். சொசைட்டி நிர்வாகத்தை முறைப்படி நடத்த உண்மையாக போராடுவோம்.   தனியார் வங்கி தவிர்த்து பொதுத் துறை வங்கியில்தான் கடன் வாங்கவேண்டும் என்பதை நிலை நிறுத்துவோம்.  இவைகளை எல்லாம்  மற்றவர்கள் செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.   NFTE  தோழர்களின் வெற்றி இவைகளை நிச்சயம் சாத்தியமாக்கும். 
                  நன்றி தோழர்களே! 

                                                                                                                        அன்புடன்,

26-03-2014                                                           எஸ். சிவசிதம்பரம்,
                                                                               RGB, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR