தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Showing posts with label BONUS 2010. Show all posts
Showing posts with label BONUS 2010. Show all posts

Wednesday, September 29, 2010

போனஸ் கேட்டு பொதுச் செயலாளர் கடிதம்.

    நமது போர்ட் சேர்மனுக்கு அகில இந்திய பொதுச் செயலர் தோழர் சந்தேஸ்வர்சிங் அவர்கள் செப் 27 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.   கடிதத்தில், 

     தசரா பூஜையும், துர்க்கா பூஜையும் நெருங்கி வருகின்ற நிலைமையில் ஊழியர்கள் போனசை எதிபார்த்துக் காத்திருக்கிறார்கள்.  கொடுபடாத ஊதியமே போனஸ் என்கின்றபோது அதில் கம்பெனி லாபம் ஈட்டுகிறதா, இல்லையா என்பதை இணைத்துப் பார்க்கக்  கூடாது.     கோடிக்கணக்கான ரூபாயை வெளிநாட்டுப் பயணத்திற்காக செலவு செய்யும் நிர்வாகம் ஊழியர்களுக்குப் போனஸ் தருவதில் தயக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது.   லாபம் ஈட்டாத பல அரசு அலுவலங்களில் கூட போனஸ் அளிக்கப்படுகிறது என்பதை நிர்வாகம் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, ஊழியர்களுக்கு காலத்தே போனசை  அளித்திட வேண்டும்  என்று நிர்வாகத்தை வேண்டிக் கேட்டு எழுதியுள்ளார்.  
                                                               S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR