தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Showing posts with label NECESSITY OF LAND LINE PHONE. Show all posts
Showing posts with label NECESSITY OF LAND LINE PHONE. Show all posts

Sunday, October 1, 2017

NFTE - BSNL
தஞ்சை மாவட்டம்.
01-10-2017
பொதுத்துறை நிறுவனமாக 
BSNL உருவாக்கப்பட்ட தினம். 

S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
==================================================
BSNL லேண்ட் லைனை 
பெருக்கிடுவோம் எந்நாளும்.!
==============================================
எத்தனையோ செலவுகளை 
தாங்கிச் செல்லும்  நமது துறை 
வற்றாத ஜீவநதியாய் 
வளம் கொழித்த காலம் உண்டு!.

வளம் பெற்ற BSNL 
வற்றிப் போக விடலாமா!
நலம் பயக்கும் மாற்றங்களெல்லாம் 
நம்மால் முடியும் தோழர்களே!

தொழிநுட்ப மாற்றத்தினால் 
தோன்றும் தொல்லை கொஞ்சமல்ல!
கேபிள் ரூட், பவர் பிளாண்ட்டு 
எக்கச்சக்கம் இங்கு உண்டு! 
பெருமளவில் செலவு பிடிக்கும் 
பெரிய பெரிய என்ஜின்கள்
பேட்டரி ரூமோடு .

MDF ம், AC பிளாண்ட்டும்,
ஏற்றிச் செல்லும் வாகனமும், 
எண்ணிலடங்கா ஊழியரும், 
எல்லாவற்றையும் தாண்டி விடும். 

இவ்வளவுச்  செலவைத் தாங்கி 
இதுக்கும் கீழே  கட்டணத்தை 
குறைத்திடும் நம்ம BSNL ஐ 
கோயில் கட்டி கும்பிடலாம்!.

தக்காளி, வெங்காயம் விலை 

தாறுமாறா ஏறும், இறங்கும். 
தாறுமாறா ஏறும்போதும்  
BSNL மட்டும்தாங்க 
மேலும் மேலும் விலையைக் குறைக்கும். 

GST வரிய நீங்க

எங்க கணக்குல சேக்காதீங்க!
வசூல் செய்த பணத்தையெல்லாம்
 வச்சுக்கமாட்டோம்,  கட்டிடுவோம்!  

நாடு பூரா லேண்ட் லைன் போன்

 நாம மட்டுந்தான்  வச்சிருக்கோம்!
நல்லாயிருக்கு என்பதால்தான் 
மீண்டும்  ஒங்கள நாடுறோம்! 

நாளொன்றுக்கு பத்து ரூபா 
செலவினிலே கெடைக்குதுங்க!  
பத்து ரூபா காசினிலே 
பல மணி நேரம் பேசிடலாம்! 


வீட்டுக்குள்ள லேண்ட் லைன் போனு 
வேலைக்காரப் பொண்ணு போல! 
மூவாயிரம் ரூபா சம்பளச் செலவு  
இனி முன்னூரிலே முடிந்துவிடும்! 

லேண்ட்  லைனில் பேசும்போது 
காது  சூடாய்  ஆகாது,  
கையும்     கனத்துப்  போகாது! 
ஹாலுக்குள்ளே லேண்ட் லைன் போனு 
கவுரவம் என்று சொல்லுங்க!

அன்பான  பெரியம்மாவின் 
அளவு கடந்த பேச்சாலே 
மனசெல்லாம் நெறஞ்சிடுமே,
நெஞ்சு  பாரம் கொறஞ்சிடுமே!

குதூகலமாய் குழந்தைகள் இங்கே 
அக்கா, தங்கை,  தாயுடனே 
தாராளமாய் பேசி மகிழ 
தடையில்லா இணைப்புதனை 
தந்திடும் நம்ம லேண்ட் லைனு.


அதிவேகப் பாய்ச்சலிலே 
அளவற்ற டவுன்லோடு! 
ஆயிரம் ரூபா திட்டத்திலே 
மாதம் பூரா எறக்கிடலாம், 
மகிழ்வாய்ப் பலவும் பார்த்திடலாம்!

இந்தக் குறைந்த வாடகையில் 
இவ்வளவு பெரிய சலுகைகளா 
 கணக்குப் போட்டுப் பாருங்க, 
கண்டிஷன் போட மாட்டீங்க!


அற்புதமான இந்தத் துறை 
அரசுத் துறை அல்லவா! 
அதனால்தானே வாழுகின்றோம்! 
அதனை உயர்த்த வேண்டாமா!!  

பெருகட்டும்! பெருகட்டும்!!
லேண்ட் லைன் போன் பெருகட்டும்!!
மீண்டும் அந்த வெற்றி சகாப்தம் 
தேசம் முழுதும் துவங்கட்டும்!

=============================================================

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR