தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, August 18, 2011

ஊழல் பொசுங்கட்டும்! லஞ்சம் நசுங்கட்டும்!


இதோ இங்கு புதிய விடியல் பிறக்கும் அறிகுறியாய் வெப்பம் தெரியத் தொடங்கிவிட்டது!

குமுறிய மக்களின் கூக்குரல் கேளாமல் தவறிய சட்டத்தை தந்திட நினைத்தனர்! குடிமக்களை குரங்குகள் என்று நினைத்தனரோ? அரும்மக்களின் அடிவயிறு பற்றி எரியவா அரியாசனத்தில் அமர்ந்தாய்?
மக்கள் வயிற்றில் பற்றவைக்க நினைத்த நெருப்பு, இதோ அவர்களின் சட்டத்தையே இப்போது பற்றி எரிக்கிறது! மக்கள் மடையர்களென்றெண்ணி மந்தமாய் மந்தகாசம் செய்தோர் மண்டையில் நறுக்கென உறைத்தது; கருத்தில்லாத ஒரு சட்டத்தை கருக்கியது.
ஊழ்வினை ஊர்ந்து வந்து ஊட்டியது போதும் என்று, ஊழலின் வினையை விதைத்த நொடியே கொடுக்க முய‌லும் அற்புதமான ஜன் லோக்பால் சட்டததை, தடுக்க நினைத்த தற்குறிகளுக்கு சவுக்கடியை தந்து விட்டது, மக்களின் ஒற்றுமை.
மூவண்ணம் உயரப் பற‌க்க; கை வண்ணம் பொய்யை கருக்க; தீ வண்ணம் கண்ணில் பதித்து, வந்தே மாதரம் உறைத்த வண்ணம் மக்கள் கொடி பிடித்தது கண்கொள்ளா காட்சி.
அன்று வெள்ளையனை விரட்டிய இரு சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஐயா கல்யாணமும், ஐயா லஷ்மிகாந்பாரதியும் இன்று கொள்ளையனை விரட்ட‌ குரல் கொடுத்தது முடவரையும் எழுத்து நிற்கச் செய்யும்.
காலம் மாறினாலும் கோலம் மாறாதவராய் இருக்கும் ஊழல் பேய்களை, கோலம் மாறினாலும் கொள்கை மாறாத இளைஞர் கூட்டம் உலுக்கி எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆன்று ஜன் லோக்பால் நிறுவப்படும், ஊழல் ஒழிக்கப் படும், லஞ்சம் அழிக்கப் படும், குறைகள் களையப்படும், பொய்மை பொசுக்கப் படும், நம் தேசியக் கொடி மட்டும் உயர்த்திப் பிடிக்கப்படும்!
வந்த்தே மாதரம்! வாழ்க பாரதம்!

Tuesday, August 16, 2011

தோழர் R K கைது.

லோக்பால் மசோதாவுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  
தோழர் R K கைது.    
     நமது முன்னாள் சம்மேளனச் செயலர் தோழர் R . K அவர்கள் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக போராடியதால் இன்று கைது செய்யப்பட்டார்.  ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் பிரதமரையும் இணைத்திட வேண்டும் என்று எழுச்சியோடு நடைபெற்ற  தர்மயுத்தத்தில் பங்கேற்றதற்காக இன்று கைது செய்யப்பட்டார். போராட்டம் இல்லாது யாராட்டமும் செல்லாது என்கின்ற கொள்கைவழி நின்று தீரமுடன் போராடிய தலைவர் R.K அவர்களை வாழ்த்திப் பாராட்டுகிறோம்.    அந்தத் திசைவழி செல்ல நாமும் பயணப்படுவோம்.

தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.                   

மாவட்டச் சங்கச் செய்திகள்:

மாவட்டச் சங்கச் செய்திகள்:
     - மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் கிளைகளின் இணைந்த கூட்டம் மன்னையில் நடைபெற்றது. தோழர்கள் நடராஜன் ACS, பன்னீர்செல்வம் DS, கிள்ளிவளவன் DS, TMTCLU ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், கோவையில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சம்மேளனச் செயற்குழுவுக்கு ரூபாய் 5000 நன்கொடை பெறப்பட்டது.  நன்கொடை தந்த கிளைக்கு மாவட்டச் சங்கம் நன்றியையும் , வாழ்த்துகளையும்   தெரிவித்துக்கொள்கிறது .
     - அனைத்து  OUTDOOR  TM தோழர்களுக்கும் சிம் கார்டு 300 இலவச அழைப்புகளுடன் வழங்கப்படுகிறது.
     -ரெயின் கோட்டு   வாங்குவதற்காக ரூபாய் 500 இம்மாத சம்பளத்துடன் வழங்கப்படும்.
     - காரைக்குடியில் நடைபெறும் இளைஞர் மாநாட்டிற்கு தோழர்கள் திரளாய் பங்கேற்க வேண்டுகிறோம்.
     - மாவட்டம் முழுமையும் தோழர்கள் TOP UP கார்டுகளை விற்றுக் கொடுத்து நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம்,
மாவட்டச் செயலர்,
தஞ்சை.      

Friday, August 12, 2011

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள்
     10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 சொசைட்டி உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கீழ்க்கண்ட வாறு சொசைட்டி சார்பில் பரிசளிக்கப்பட விருக்கிறது.  OC, SC/ST என தனித்தனியாக பிரித்து பகிர்ந்தளிக்கப்படுகிறது.
   10 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:
முதல் பரிசு :                          ரூ. 6000
இரண்டாம் பரிசு:                 ரூ. 3000
மூன்றாம் பரிசு:                    ரூ. 2500        
 + 2     ஆம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு:   
முதல் பரிசு :                         ரூ. 6000
இரண்டாம் பரிசு:                 ரூ. 4000
மூன்றாம் பரிசு:                    ரூ. 3000     

விண்ணப்பப் படிவம் DOWN LOAD செய்து கொள்ளவும் அல்லது என்னிடம் பெற்றுக் கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பம் 31 - 08 - 2011 க்குள் சொசைட்டிக்கு வந்து சேர வேண்டும்.

அன்புடன்,

எஸ். சிவசிதம்பரம்,
RGB , பட்டுக்கோட்டை.      
                         

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR