தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, September 19, 2018

மத்திய அரசு ஊழியர்களின் 
1968 போராட்டத்தின் பொன்விழா ஆண்டு..
போராட்ட தியாகிகளை நினைவு கூர்வோம்...1968 ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசு ஊழியர்களின் நாடு 
தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நாடு சுதந்திரம் அடைந்த 
பிறகு நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.நாடே 
போர்க்களமாக காட்சியளித்ததுபோராட்டத்தின் முக்கிய 
கோரிக்கை என்பதுவாழ்க்கைத்
தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்கு என்பது
இக் கோரிக்கை15 வது இந்திய     தொழிலாளர்    மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வடித்தெடுக்கப்
பட்டதுமேலும்  2வது ஊதியக்குழு பரிந்துரைகளை மேம்படுத்துவதுமற்றும் திருத்துவது ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாக 
இருந்தனஇரண்டாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு 
ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதிய கோரிக்கை
முற்றிலுமாக புறந்தள்ளப்பட்டிருந்தது.

இக்கால கட்டத்தில்தான் ஊழியர்களின் பிரச்சினைகளை பேசித் 
தீர்ப்பதற்காக முதன்முதலில் தேசிய கூட்டாலோசனைக்குழு 
அமைக்கப்பட்டதுமுதல் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம்… 
விலைவாசியை ஈடுகட்டுதல்வேலைநீக்கத்தை கைவிடுதல்ஒப்பந்தமுறையை ஒழித்தல்….விலைவாசிப்படியை அடிப்படைச்
சம்பளத்துடன் இணைத்தல்..25 வருட சேவை முடித்தால் ஓய்வு என்ற நிலையைக் கைவிடுதல்… ஆகியவை முக்கிய கோரிக்கையாக 
வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுஆனால் தீர்வு ஏதும் 
ஏற்படவில்லைஅதனால் ஊழியர்கள் போராட்டத்திற்கு 
தள்ளப்பட்டனர்போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே தலைவர்
களும் தொண்டர்களும் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை
எதிர் கொண்டனர்திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் ஆரம்பமானதுவேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில மணி          நேரங்களிலேயே  நாடு ஸ்தம்பித்ததுஅரசு போராட்டத்தைஒடுக்க எஸ்மா  சட்டத்தை பிரயோகித்ததுஅரசு இப்போராட்டத்தை உள்நாட்டு கிளர்ச்சி என அறிவித்ததுபோராட்டத்தை ஒடுக்க மத்திய , மாநில காவல் 
படையினர் ஏவி விடப்பட்டனர்.    போராட்டம்    நயவஞ்சமாக    ஒடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட 64000 ஊழியர்களுக்கு வேலை நீக்க கடிதம் கொடுக்கப்பட்டது , 12000  ஊழியர்கள்  சிறைவாசம் அனுபவித்தனர், 8000 ஊழியர்கள் மேல் வழக்கு 
பாய்ந்தது…7000 ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்...4000 ஊழியர்கள் கட்டாய வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.நாடு 
முழுவதும்   17 ஊழியர்கள் துப்பாக்கி சூட்டில் மரணம்அடைந்தனர்மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம் இந்திய தொழிலாளிகளின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

போராட்டம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்த நிலையிலும்  அன்றைய கோரிக்கையான வாழ்க்கைத் தேவைக்கான குறைந்தபட்ச ஊதியம் கோரிக்கை இன்றும் கனவாகவே உள்ளது.

இத்தகைய பின்னணியில் 1968 போராட்டத்தின் நினைவுகளை , போராட்டத் தியாகிகளை நாம் நினைவு கூர்கிறோம். தியாகிகளின் லட்சியம் நிறைவேற தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்க இத்தருணத்தில் உறுதியேற்போம்.

Tuesday, September 18, 2018

காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது!

NFTE  -  BSNLEU  மற்றும் இரு சங்கங்களின் இணைப்பில் உள்ள ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் TMTCLU - TNTCWU  ஆகியவை இணைந்து காத்திருப்புப் போராட்டத்தை
17, 18-09-18 இரு நாளும் நடத்தினார்கள்.

திரளான தோழர்கள் மாவட்ட   முழுமையிலிருந்தும் பங்கேற்றிருந்தார்கள்.
 மாதமாக சம்பளம் வராத சூழ்நிலையில்
தமிழகமெங்கும் ( நம் பகுதியில் இந்த மாதம் மட்டும்தான், அதுவும் தாமதம்தான்) திரட்சியாக இப் போராட்டம் நடைபெற்றது.   
நேற்று வரை முடிவு எட்டாததால் இன்றும் போராட்டம் தொடர்ந்தது. 

இரு சங்கத்தின் மாநிலச் செயலரும் இன்று காலை CGM மிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 
Repair and maintenance க்கு வந்த 9 கோடி ரூபாயை housekeeping க்கு payment செய்ய நிர்வாகம் ஒத்துக்கொண்டது.  

எனவே, நமது போராட்டத்தை தற்போது 
ஒத்தி வைக்கிறோம்.
இரண்டு நாட்களும் எழுச்சியோடு
பங்கேற்ற தோழர்களுக்கு 
நன்றியும், பாராட்டும்.

குறிப்பாக பெருந்திரளாக வந்திருந்த
மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சை SDOT, திருவாரூர் SDOT மற்றும் அம்மாப்பேட்டை  தோழர்களுக்கு கூடுதல் வாழ்த்தும், பாராட்டும்.

சங்கங்களிடையே ஒற்றுமையை மேலும் 
பலப்படுத்துவோம். 
ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒப்பற்ற துணையாவோம்!

வாழ்த்துக்கள் தோழர்களே!
தோழமையுடன், 
கே. கிள்ளிவளவன்  -  D. கலைச்செல்வன்.

போராட்டக் காட்சிகள்:
பட்டுக்கோட்டை கிளைத்தலைவர் 
தோழர். N. ரவிச்சந்திரன் TT /PVN அவர்களின் 
பணி நிறைவு பாராட்டுவிழா.
===============================================
15-09-18 மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டையில் 
நடைபெற்ற பாராட்டு விழாவில் 
மாநிலச்  செயலர் தோழர். நடராஜன், 
மாவட்டச் செயலர்கள்  
தோழர் கிள்ளிவளவன், கலைச்செல்வன் 
மற்றும் பல தோழர்கள் பங்கேற்று வாழ்த்தினர். 

மாவட்டச் சங்கத்திற்கு நிதியாக ரூபாய் 2000/- ஐ 
தோழர். ரவிச்சந்திரன் கலைச்செல்வனிடம் வழங்கினார்.

பாராட்டு விழா காட்சிகள்:செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR