தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, August 25, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி 

இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்: RET/28-79/2014/Vol.I
பணி: Junior Telecom Officers
காலியிடங்கள்: 04 (PWD (HI))
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 31.12.2014 தேதியின்படி Telecommunication, Electronics, Radio, Computer, Electrical, Information Technology, Instrumentation, INdustrial Electronics போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 05.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். போட்டித் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 4 இணைக்க வேண்டும். இதில் இரண்டு புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கான இடங்களில் ஒட்டவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant General Manager (Rect & Estt), O/o The CGM Telecom, BSNL TamilNadu Telecom Circle, Fifth Floor, New Administrative Building, No.16, Greams Road, Chennai - 600006.
மேலும் பயிற்சி நடைபெறும் தேதி, தேர்வு பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www,tamilnadubsnl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கிளை செயலர்கள் கூட்டம்

23-08-2014

கிளை செயலர்கள் கூட்டம் -23-08-2014 அன்று சங்க அலுவலகத்தில் காலை 1100 மணிக்கு மாவட்ட தலைவர்  தோழர் S  .பிரின்ஸ் தலைமையில் நடை பெற்றது.தோழர் ஜான்பீட்டர் SDOP கிளை செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் வைக்கப்பட்ட ஆய்படுபொருள்: 
1.கிளை மாநாடுகள் 
2.மாவட்ட செயற்குழு /மாவட்ட மாநாடு 
3.அகில இந்திய மாநாடு -பங்கேற்பு 
4.WORKS COMMITTEE -ஈரோடு கருத்தரங்கம் 
5.புதிய இணையதளம் தொடக்கம் 

கூட்டத்தில் JCM உறுப்பினர் மேகநாதன் ,  WORKS COMMITTEE members வேதநாயகம், A.சேகர், கிள்ளிவளவன், நீலமேகம், இளங்கோவன், சீனாதானா மற்றும் TMTCLU மாவட்ட தலைவர் நாடிமுத்து, செயலர் கலைசெல்வன் , பொருளர் R.K.ராஜேந்திரன், மாநில துணை செயலர் நடராஜன் மற்றும் கிளைசெயலர்கள், மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதத்தை செழுமை படுத்தினர்.  மாலை 500 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது . விவாதத்தை மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் முடித்துவைத்துபேசினார். 
தோழர் ராஜேஷ் CTMX கிளை செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.கிளை மாநாடுகள் SEP 10 தேதிக்குள்ளாக நடத்துவது 

2.மாவட்ட செயற்குழு செப் 20 தேதிக்குள்ளாக SDOT கிளை பொறுப்பேற்று நடத்தும் .

3.மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மாநாட்டிற்கு தேதியை முடிவு செய்வது ( 21 நாட்கள் முன்னதாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது )

4.மாவட்ட மாநாட்டை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட GM (O) கிளை தஞ்சையில் நடத்தும் .

5.ஜபல்பூர் ALL INDIA CONFERENCE செல்வதற்கு மாவட்ட செயலரிடம் பெயரை பதிவு செய்துகொள்வது.ஏற்கனேவே தோழர் அய்யனார் மற்றும் கூடூர் குணா இவர்களுடன் சேர்த்து 11 தோழர்கள் TICKET BOOK செய்துள்ளனர்.  

6. ஈரோடு  WORKS COMMITTEE - கருத்தரங்கத்திற்கு சென்று பங்கேற்பது .

7. மன்னை கிளைசெயலர் தோழர் C.சேகர் PUNISHMENT CASE நிர்வாகத்துடன் பேசி சரிசெய்வது .

8. தோழர் MTU பழனிவேலு TTA மாற்றல் பெறுவது .

9. புதிய இணையதளத்திற்கு இணைப்பு மாநிலத்தில் பெறுவது  

10.TTA தோழர்களுக்கு Rs 500/ talk value மாநில சங்கத்திடம் கோரிப்  பெறுவது .

No comments:

Sunday, August 24, 2014

TSM ஆக பணிபுரிந்த தோழர்கள் கவனத்திற்கு

BSNL கார்பரேட் அலுவலக உத்திரவின்படி 30-09-2000 க்கு முந்தைய TSM சர்வீஸ் தகவல்களை HRMS மற்றும் சர்வீஸ் புக்கில் UPDATE செய்யப்பட இருப்பதால் தோழர்கள் தங்களிடம் உள்ள TSM STATUS சம்பந்தமான கடிதங்களின் நகல்களை மாவட்ட செயலரிடம் உடனடியாக கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.  இது மிகவும் அவசரம். முக்கியம் 
மதுரை அநீதி களைய

மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்

தோழர்.பட்டாபி 

28/08/2014 முதல் 

காலவரையற்ற  
உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
TELECOM CO-OPERATIVE SOCIETY DIRECTOR க்கான பயிற்சி வகுப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் PUNE ல் AUG-19 TO 22 நடைபெற்றது .  பயிற்சி வகுப்பில் தோழர் மதுரை  இளங்கோவன் ,ஈரோடு குல்சார் அஹ்மத் JTO ,நமது மாவட்டத்தை சேர்த்த தோழர் R.R கலந்து கொண்டனர் ,.இவர்களின்  பணி சிறக்க வாழ்த்துக்கள்

மாநிலச்செயலர் அறப்போர் 

தோழர்.பட்டாபி 

28/08/2014 முதல் 

காலவரையற்ற உண்ணாவிரதம் 

  • மதுரை மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் டென்யூர் முடித்த 3 TM களுக்கு மாற்ற்ல் தர இழுத்தடிக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாற்றுச் சங்கத்திற்கு சாதகமாக தினம் ஒரு கொள்கையை உருவாக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பின்பு இரவு 10மணிக்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்ட 2 TMகளின் மாற்றல் உத்தரவை மறுநாள் மறுக்கும்  மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் 
  • மாற்றல் கொள்கை பற்றி  கருத்துக் கேட்பு கூட்டம் என்று சொல்லி அனைத்துச் சங்கங்களையும் அழைத்து கருத்து திணிப்பு கூட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • பிரச்னையைத் தீர்ப்பதிற்குப் பதில் NFTE சங்கத்தை பழிவாங்க நினைக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • கார்ப்பரேட் உத்தரவு, மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதல் எதையும் மதியாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும்
  • மாநிலச் செயலரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் 
மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி 


28/08/2014 முதல் 

காலவரையற்ற  உண்ணாவிரதம் 

தோழர்களே... அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..

Wednesday, August 20, 2014

சொத்து

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள நிலத்தின் அளவு 48,52,02,459 சதுர அடிகள். 11,128.497 ஏக்கர்.

நமது BSNL நிறுவனத்துக்கு நாடு முழுமையும் உள்ள கட்டிடங்களின் அளவு 13,15,36,259 சதுர அடிகள். 301.6802 ஏக்கர்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்த தகவல்

Friday, August 15, 2014

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR