கிளை செயலர்கள் கூட்டம்
23-08-2014
கிளை செயலர்கள் கூட்டம் -23-08-2014 அன்று சங்க அலுவலகத்தில் காலை 1100 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் S .பிரின்ஸ் தலைமையில் நடை பெற்றது.தோழர் ஜான்பீட்டர் SDOP கிளை செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் வைக்கப்பட்ட ஆய்படுபொருள்:
கூட்டத்தில் வைக்கப்பட்ட ஆய்படுபொருள்:
1.கிளை மாநாடுகள்
2.மாவட்ட செயற்குழு /மாவட்ட மாநாடு
3.அகில இந்திய மாநாடு -பங்கேற்பு
4.WORKS COMMITTEE -ஈரோடு கருத்தரங்கம்
5.புதிய இணையதளம் தொடக்கம்
கூட்டத்தில் JCM உறுப்பினர் மேகநாதன் , WORKS COMMITTEE members வேதநாயகம், A.சேகர், கிள்ளிவளவன், நீலமேகம், இளங்கோவன், சீனாதானா மற்றும் TMTCLU மாவட்ட தலைவர் நாடிமுத்து, செயலர் கலைசெல்வன் , பொருளர் R.K.ராஜேந்திரன், மாநில துணை செயலர் நடராஜன் மற்றும் கிளைசெயலர்கள், மாவட்ட சங்கநிர்வாகிகள் கலந்து கொண்டு விவாதத்தை செழுமை படுத்தினர். மாலை 500 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது . விவாதத்தை மாவட்ட செயலர் தோழர் பன்னீர்செல்வம் முடித்துவைத்துபேசினார்.
தோழர் ராஜேஷ் CTMX கிளை செயலர் நன்றி கூறி முடித்து வைத்தார்.
கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1.கிளை மாநாடுகள் SEP 10 தேதிக்குள்ளாக நடத்துவது
2.மாவட்ட செயற்குழு செப் 20 தேதிக்குள்ளாக SDOT கிளை பொறுப்பேற்று நடத்தும் .
3.மாவட்ட செயற்குழுவில் மாவட்ட மாநாட்டிற்கு தேதியை முடிவு செய்வது ( 21 நாட்கள் முன்னதாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுப்பது )
4.மாவட்ட மாநாட்டை ஏற்கனவே ஏற்றுக்கொண்ட GM (O) கிளை தஞ்சையில் நடத்தும் .
5.ஜபல்பூர் ALL INDIA CONFERENCE செல்வதற்கு மாவட்ட செயலரிடம் பெயரை பதிவு செய்துகொள்வது.ஏற்கனேவே தோழர் அய்யனார் மற்றும் கூடூர் குணா இவர்களுடன் சேர்த்து 11 தோழர்கள் TICKET BOOK செய்துள்ளனர்.
6. ஈரோடு WORKS COMMITTEE - கருத்தரங்கத்திற்கு சென்று பங்கேற்பது .
7. மன்னை கிளைசெயலர் தோழர் C.சேகர் PUNISHMENT CASE நிர்வாகத்துடன் பேசி சரிசெய்வது .
8. தோழர் MTU பழனிவேலு TTA மாற்றல் பெறுவது .
9. புதிய இணையதளத்திற்கு இணைப்பு மாநிலத்தில் பெறுவது
10.TTA தோழர்களுக்கு Rs 500/ talk value மாநில சங்கத்திடம் கோரிப் பெறுவது .
No comments: