தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, February 26, 2012

போராட்ட விளக்கக் கூட்டம்

     பிப். 28 போராட்ட விளக்கக் கூட்டம் 24-02-12 அன்று தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   மாவட்ட முழுவதிலுமிருந்தும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.  TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கிள்ளி வரவேற்புரையுடன்  கூட்டம் துவங்கியது.     NFTE , BSNLEU , SEWA , BEOA ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் NFTE மாநிலத் தலைவர் தோழர். தமிழ்மணி அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.   பிப். 28 போராட்டம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை பல எடுத்துக்காட்டுகளுடன் பேசியது தோழர்களை உற்சாகமடையச் செய்தது.       BSNLEU மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரமேஸ்வரன் மற்றும் நடராஜா அவர்களும், BEOA மாவட்டச் செயலர் தோழர் G.K.S அவர்களும்   போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள். திருச்சியிலிருந்து மாநில துணைச் செயலர் தோழர் சுந்தரம் மற்றும் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தோழர்கள் பிரின்ஸ் மற்றும் P.பக்கிரிசாமி அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற   இக் கூட்டம் இரவு 8 மணிவரை நடைபெற்றது.   

தோழமையுடன், 
T . பன்னீர்செல்வம்.
மாவட்டச் செயலர், தஞ்சை.  

Saturday, February 25, 2012

வாய்மொழி சிகிச்சை

வாய்மொழி சிகிச்சை 

     இதைக் கேள்விப்பட்டிராதவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.  கோவை பாஸ்கரால் வழங்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவைக்  கண்டிப்பாக பாருங்கள். நீங்கள் பெறப் போகும் புத்துணர்ச்சிக்கு எனது மகிழ்வான வாழ்த்துக்கள்.    

     நமது உடல், உடலில் உள்ள செல் என்பது மிகப் பெரிய ஞானி. அவர் எல்லாவற்றையும் தாமே சரி செய்து கொள்வார்.   மருத்துவர் வந்து சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.   நாம்தான் அவசரப்பட்டு அவருடைய அறிவைக் கெடுத்து விடுகிறோம். தமது உடலுக்குள்ளே எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ள வேண்டிய காரணிகள் அனைத்தும் மிகச் சரியாகவே உருவாக்கப் பட்டிருக்கிறது.  அதை நீங்கள் சரியாக புரிந்து, இதைக் கேட்டபின்  முழுமையாக  நிறைவடையப் போகிறீர்கள் என்பதை எண்ணும்போது பெரிதும் உவகை கொள்கிறேன்.  

     வாருங்கள் தோழர்களே!  வீடியோவைப் பார்ப்போம். 

அன்புடன், 
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.    

Sunday, February 19, 2012

உடல் தானம் தந்த உத்தமர்.

உத்தமரைப் போற்றுவோம்.

     தோழர் சி. ராஜகோபால் அவர்கள் கடந்த 14-02-2012 அன்று தமது 75 ஆவது வயதில் மறைந்தார்.    இவர் அம்மாப்பேட்டை TM தோழர் காமராஜ் அவர்களின் தந்தையாரும், திருச்சி TTA தோழர் சரவணன் அவர்களில் தாத்தாவுமாவர்.   இவர் தன்னுடம்பை 15 -02 -2012 அன்று தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தந்தார்.  
     பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு தமது இறுதி மூச்சு வரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்தவர். சாதி, சடங்கு மறுப்பாளரான இவர் அனைத்து மதத் தோழர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பதோடு குடும்ப நண்பராகவும் திகழ்ந்தவர். 1969 முதல் 1979 வரை திருவாரூர்  புதுத் தெருவில்  கவுன்சிலராகப் பணியாற்றியவர்.   இவர் பல குடும்பங்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வேலை  வாய்ப்புக்களையும்  பெற்றுத் தந்திருக்கிறார். 
     15-02-2012 அன்று அவருடம்பு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டபோது டாக்டர்கள் அனைவரும் வந்து வணங்கி உடலைப் பெற்றுச் சென்றது அனைவரையும் நெகிழ வைத்தது. 
     இருந்தவரை தனது செயலால் பிறருக்கு உதவியாக வாழ்ந்தவர், தான் இறந்த பின்னும் தனது உடலால் மருத்துவத் துறைக்கு உதவுகிறார்.
     அவரது தியாகத்துக்கு தலைவணங்கி,  அவர்தம் குடும்பத்தாருக்கு நமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

தகவல்: 
தோழர். K . நடராஜன்,
மாநிலத் துணைச் செயலர், தஞ்சை.

மண்ணுக் குள்ளே மக்கி மறைய
தன னுடம்பை தந்திட மறுத்து
மருத்துவத் துறைக்கு தந்து உயர்ந்த 
மானுட நேயம் வாழ்த்திப் போற்றுவோம்!

                              -கவிஞர். இக்பால், தஞ்சை.  
                                                 

Thursday, February 16, 2012

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஏல முறையில் வழங்கப்படும் - கபில் சிபல்


மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:
வரும் காலங்களில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அனைத்தும் ஏல முறையில் வழங்கப்படும். உரிமம் வழங்குவதற்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. மேலும், அலைகற்றைகளை பகிர்வது தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பை பொறுத்து, உரிமங்கள் 10 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்படும்.             3ஜி ஆப்பரேட்டர்களுக்கிடையே அலைக்கற்றை பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒருமித்த உரிமம் கோரினால் அதற்கு தனியாக கட்டணம்  செலுத்த வேண்டும்.


முந்தைய உரிமக் கொள்கையின்படி மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் வோடபோன், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொலைத்தொடர்பு உரிமங்களை பெற்றிருந்தன.

புதிய கொள்கையின்படி அந்த நிறுவனங்கள் மைக்ரேஷன் கட்டணம் செலுத்தி தேசிய சமச்சீர் உரிமம் பெறலாம்.2008-ம் ஆண்டு வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளநிலையில் புதிய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என கூறியுள்ளார்.

Saturday, February 4, 2012

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உயர்வான உச்சநீதிமன்ற தீர்ப்பு 

     2 G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடாக ஏலம் எடுத்து தொலைதொடர்பு இலாக்காவுக்கு  மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்திய தனியார் கம்பெனிகளின் உரிமம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.    50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை 122 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.        
     இவ்வளவுக்குப் பிறகும் நமது பிரதமர் அவர்கள், இதனால் வெளிநாட்டு முதலீடு பாதிக்கும் அபாயம், அது, இது என்று அங்கலாய்த்து மத்திய அரசின் சார்பில் மேல் முறையீடு  செய்ய முயற்சிக்கிறார் என்ற செய்தியைக் காணும் போது பெரிதும் வேதனைப்படுகிறோம்.   இவர்களை நாம் என்ன செய்ய?
     உரிமம் ரத்து செய்யப்படவிருக்கும் 122 கம்பெனிகளைச் சார்ந்த செல் சேவை பெரும் வாடிக்கையாளர்களை MNP மூலம் நமது BSNL -ல் இணைக்கும் பணியில் ஈடுபடுவோம். 

     வெளிப்படையான பில்லிங் சிஸ்டம், நேர்மையான கட்டண விகிதம் அதோடு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நமது BSNL ல் அந்த வாடிக்கையாளர்கள்  மாறிட  மக்களைச் சந்திப்போம்.  அனைத்து CSC க்களிலும் தட்டி வைத்து விளம்பரப்படுத்துவோம்.   

எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை. 

சொசைட்டி செய்திகள்

சொசைட்டி செய்திகள் 

     ஏற்கெனவே நாம் நம் வலைதளத்தில் அறிவித்தது போல் நிலம் வாங்குவதற்கான விண்ணப்ப படிவ மாதிரி சொசைட்டி வெப்சைட்டில் சில காரணங்களால் போடப்படவில்லை.    தற்போது அந்த விண்ணப்பக் கடிதம்  அருகாமையில் உள்ள சொசைட்டி கிளை அலுவலகங்களில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.   ஒரு படிவம் 10 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.    ஒருவரே எத்தனை படிவம் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம்.     அதேபோல் ஒருவரே பூர்த்தி செய்த படிவங்களையும் மொத்தமாக எடுத்துச் சென்று கொடுத்து, அனைத்து படிவத்திற்கும், அலுவலரிடம் கையெழுத்து பெற்று acknowledgement  வாங்கி வரலாம். 
    படிவம் வாங்காதவர்கள் உடன் வாங்கிச் செல்லவும்.  
    படிவம் வாங்கியவர்கள் உடன் பூர்த்தி செய்து அனுப்பவும். 
    பூர்த்தி செய்து படிவம் கொடுத்து  acknowledgement பெற்றவர்கள்   
    அதைப் பத்திரமாக வைத்திருக்கவும். 
     இவை எல்லாவற்றையும்  முடித்தவர்கள் இந்த விபரங்களை           
     தெளிவாக மற்றவர்களுக்கு  எடுத்துச் சொல்லவும். 

மீண்டும் நிலம் பற்றி:   95 ஏக்கர் நிலம் சொசைட்டியின் சொத்து.  இன்று அந்த நிலத்தை சொசைட்டி உறுப்பினர்களிடம் முறையான விலையில் விற்று அந்தத் தொகை சொசைட்டியில் வரவு வைக்கப்படும்.    சொசைட்டி அந்தத் தொகையால் நிலம் வாங்குவதற்காகப் பெறப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து அடைக்கும்.  மீதமுள்ள தொகையை உறுப்பினர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தும். 
     குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உரிய காலத்தில் லட்சக்கணக்கில் தங்களது சொந்தப் பணத்தைக் கொடுத்து  வாங்கி  நிலத்தை குறித்தக் காலக் கெடுவுக்குள் ரிஜிஸ்தர் செய்து கொள்ள வேண்டும். 
     குலுக்கலில்  பெயர் வராதவர்கள் பேசாமல் போக வேண்டியதுதான். அவர்களுக்கு எந்த பங்கும் ( SHARE ) சொசைட்டியிலிருந்து கிடையாது. 
     இதில் தலைவர், இயக்குனர்கள் மற்றும் RGB க்கள் எவருக்கும் யாதொருவிதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ கிடையாது. எல்லோரும் ஓர் நிலைதான்.     

     சொசைட்டி அதிக அளவிலான கடனை உறுப்பினர்களுக்கு வங்கியிலிருந்து கடன் வாங்கித்தான் நமக்கு அளிக்கிறது.  அதிலிருந்து வரும் லாபத்தை விதிக்குட்பட்டு அதிக பட்ச அளவான 12 சதவீதத்தை  டிவிடெண்டாக நமக்கு ஆண்டு தோறும் வழங்குகிறது.   இப்போது நமக்கு கடனுக்கான வட்டியை குறைத்திடவும், THRIFT FUND க்கான வட்டியை உயர்த்திடவும் முயற்சித்து வருகிறது. 
     உறுப்பினர்களிடையே பல கற்பனைகள் ( கருத்துகள் ) நிலவுகின்ற காரணத்தினால்தான் இந்த விளக்கம்.
       
அன்புடன்,
எஸ். சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.   
                                  

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR