மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருப்பதாவது:
வரும் காலங்களில் ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அனைத்தும் ஏல முறையில் வழங்கப்படும். உரிமம் வழங்குவதற்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கும் எந்தவித தொடர்பும் இருக்காது. மேலும், அலைகற்றைகளை பகிர்வது தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பை பொறுத்து, உரிமங்கள் 10 வருடங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்படும். 3ஜி ஆப்பரேட்டர்களுக்கிடையே அலைக்கற்றை பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒருமித்த உரிமம் கோரினால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
முந்தைய உரிமக் கொள்கையின்படி மண்டலங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொலைத்தொடர்பு வட்டங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டு வந்தது. இதனால் வோடபோன், பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொலைத்தொடர்பு உரிமங்களை பெற்றிருந்தன.
No comments:
Post a Comment