பிப். 28 போராட்ட விளக்கக் கூட்டம் 24-02-12 அன்று தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட முழுவதிலுமிருந்தும் 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். TMTCLU மாவட்டச் செயலர் தோழர். கிள்ளி வரவேற்புரையுடன் கூட்டம் துவங்கியது. NFTE , BSNLEU , SEWA , BEOA ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய இக்கூட்டத்தில் NFTE மாநிலத் தலைவர் தோழர். தமிழ்மணி அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார். பிப். 28 போராட்டம் வெற்றி பெற வேண்டியதன் அவசியத்தை பல எடுத்துக்காட்டுகளுடன் பேசியது தோழர்களை உற்சாகமடையச் செய்தது. BSNLEU மாநிலத் துணைத் தலைவர் தோழர் பரமேஸ்வரன் மற்றும் நடராஜா அவர்களும், BEOA மாவட்டச் செயலர் தோழர் G.K.S அவர்களும் போராட்டத்தை விளக்கிப் பேசினார்கள். திருச்சியிலிருந்து மாநில துணைச் செயலர் தோழர் சுந்தரம் மற்றும் பட்டுக்கோட்டை சிவசிதம்பரம் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தோழர்கள் பிரின்ஸ் மற்றும் P.பக்கிரிசாமி அவர்களின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டம் இரவு 8 மணிவரை நடைபெற்றது.
தோழமையுடன்,
T . பன்னீர்செல்வம்.
மாவட்டச் செயலர், தஞ்சை.
No comments:
Post a Comment