உயர்வான உச்சநீதிமன்ற தீர்ப்பு
2 G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடாக ஏலம் எடுத்து தொலைதொடர்பு இலாக்காவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்ப்படுத்திய தனியார் கம்பெனிகளின் உரிமம் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை 122 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவுக்குப் பிறகும் நமது பிரதமர் அவர்கள், இதனால் வெளிநாட்டு முதலீடு பாதிக்கும் அபாயம், அது, இது என்று அங்கலாய்த்து மத்திய அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய முயற்சிக்கிறார் என்ற செய்தியைக் காணும் போது பெரிதும் வேதனைப்படுகிறோம். இவர்களை நாம் என்ன செய்ய?
உரிமம் ரத்து செய்யப்படவிருக்கும் 122 கம்பெனிகளைச் சார்ந்த செல் சேவை பெரும் வாடிக்கையாளர்களை MNP மூலம் நமது BSNL -ல் இணைக்கும் பணியில் ஈடுபடுவோம்.
வெளிப்படையான பில்லிங் சிஸ்டம், நேர்மையான கட்டண விகிதம் அதோடு மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நமது BSNL ல் அந்த வாடிக்கையாளர்கள் மாறிட மக்களைச் சந்திப்போம். அனைத்து CSC க்களிலும் தட்டி வைத்து விளம்பரப்படுத்துவோம்.
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment