தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Saturday, May 30, 2015

நமது போராட்ட  கோரிக்கைகள் மீது  04/06/2015 ஒப்பந்தகாரர்கள், நிர்வாகம், NFTE-BSNL/BSNLEUசங்கங்களின் சார்பாக மாவட்டச் செயலர்கள் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தைநடைபெறுகிறது.

கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்.

சேலம் மாவட்ட மாநாடு


 மாவட்ட தலைவர்  தோழர் .S .சின்னசாமி 

மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் 

மாவட்ட பொருளர் தோழர்  S .காமராஜ்  


உள்ளிட்ட   புதிய நிர்வாகிகள் தேர்வில்  
ஒருமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்ட 
மாவட்ட சங்க நிர்வாகிகள்அனைவரையும்   தஞ்சை   
வலைதளம் மனதார  பாராட்டுகின்றது 

 • 27-5-15 சேலம் மாவட்ட மாநாடு மிகப் பிரம்மாண்டமான வகையில் 4 மாத திட்டமிடுதலுடன் நடந்தேறியது. இளைஞர் குழாமும் அனுபவம் மிக்க மூத்தவர்களும் கரம் கோர்த்து புதிய வரலாற்றை படைத்தனர். ஊரெங்கும் செந்தோரணங்கள், நமது மாட்சிமை தாங்கிய தட்டிகள், தோழர் குப்தாவின் பேசும்படம்.. தோழமை மற்றும் நகர தொழிற்சங்க தலைவர்கள் ,GM உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்தினர். தோழர்கள் ஆர்.கே, சேது, காமராஜ், சென்னகேசவன், ராபர்ட்ஸ், நடராஜன், ராஜா, மணி, வெங்கட்ராமன்,ஸ்ரீதர், விஜய், எம்.எஸ்,பட்டாபி என தலைவர்கள் கருத்துரை, சிறப்புரையாற்றினர். மாநில சங்க சுற்றறிக்கைகள் 100 புத்தக வடிவில் சேலம் மாவட்ட தோழர்கள் கொணர்ந்து பயன் நிறைந்த பணி ஒன்றை ஏராள பொருட்செலவில் செய்துள்ளனர். தோழர் ஆர்.கே வெளியிட, எம்.எஸ் பெற்றார். தோழர்கள் எஸ். சின்னசாமி, சி.பாலகுமார், எஸ். காமராஜ் மீண்டும் தலைவர், செயலர், பொருளர் பொறுப்புகளை சுமக்கின்றனர். 600க்கும் மேற்பட்ட தோழர்கள் கூடியதும், தோழமை ததும்ப உபசரிப்பு, அமைதியான மாநாடு என்பதும் பாராட்டிற்குரியது. தோழர் பாலகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் டீம் வெல்லட்டும்.எம்.எஸ், கஜேந்திரன், தேவராஜன், வெங்கட், ராஜா என்ற மூத்தோர் குழாம் துணைநின்று தோள் கொடுக்கட்டும்

செப்டம்பர் 2

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் 


                ஒப்பந்த தொழிலாளர்களுக்கான  போராட்டம்

Tuesday, May 19, 2015
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கால தாமதமாக சம்பளம் கொடுப்பதை கண்டித்துதஞ்சையில் ஒப்பந்த தொழிலாளர்கள்சங்கம் TMTCLU/TNTCWU -மற்றும்
NFTE-BSNL/BSNLEU சங்கங்களின் சார்பாக நிர்வாகத்தை வலியுறுத்தி/ஒப்பந்தகாரர்களை எதிர்த்து
16-5-2015 நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்


Friday, May 15, 2015தோழர் ஜெகன் பிறந்த தினம் MAY 17 ல் ...NFTE தமிழ் மாநில சங்கம் இளைஞர் தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்தது ,,,தோழர் ஜெகனின் நினைவலைகள் மோதாத உள்ளங்கள் தொலை தொடர்பில் இல்லை எனலாம் ,,,,,,,அவர் தந்த அனுபவங்கள் ,அரவணைப்பு ,நிர்வாகத்துடன் நடத்திய பேச்சு வார்த்தை ,சகோதர சங்கங்களுடனான தோழமை அணுகுமுறை அதே பாரம்பரியத்துடன் தொடர்கிறது  நமதுசங்கம் ,,,
,,
JCM கூட்டாலோசனைக்குழு  
தேசியக்குழுக் கூட்ட முடிவுகள்
================================= 

நமது JCM தேசியக்குழுக்கூட்டம் 14/05/2015 
அன்று டெல்லியில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

 • 22/07/1997 முதல் 08/09/2000 வரையிலான DOT காலத்தில் நடத்தப்பட்ட இலாக்காத் தேர்வு முடிவுகளை   SC/ST  தோழர்களுக்கு தளர்த்தி வெளியிடுவது சம்பந்தமாக DOPT  ஆள் மாகாண இலாக்காவிடம் வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலைப் பொறுத்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

 • BSNL  வழங்கும் 60:40 ஓய்வூதியப்பங்களிப்பை நிறுத்துவது சம்பந்தமாக BSNLலின் நிலையை வலியுறுத்தி DOTக்கு மேலும் கடிதங்கள் எழுதப்படும். DOT அதிகாரிகள் சாதகமாக உள்ள நிலையில் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.

 • BSNL MRS மருத்துவத்திட்டத்தை மேம்படுத்துவது  சம்பந்தமாக தனி குழு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். 

 • 30/09/2000க்குப்பின் TM ஆகப்பணி நிரந்தரம் பெற்ற TSM தோழர்கள் பலருக்கு BSNLலில் பணி நியமன ஆணை PRESIDENTIAL ORDER வழங்கப்படவில்லை. இது வரை மாநிலங்களில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்கள் DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

 • மாநில அளவில் WORKS COMMITTEE அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.  மாவட்டங்களில் தொடர்ந்து பணிக்குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்படும்.

 • ஊதிய தேக்கநிலை STAGNATION மற்றும் நாலு கட்டப்பதவி உயர்வால் வந்த ஊதிய இழப்பு ஆகிய பிரச்சினைகள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு DOT  ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

 • மகளிர் வன்கொடுமை தடுப்புக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற ஊழியர் தரப்புக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அதிகாரிகள் மட்டத்தில் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

 • MTNL பகுதிகளில் பணி புரியும் BSNL ஊழியர்களுக்கு ரூ.200/= இலவச பேசும் வசதி அளிப்பது  பற்றி சாதகமாக முடிவு செய்யப்படும்.

 • அந்தமான் பகுதிக்கு  சக்தி வாய்ந்த அலைவரிசை  வசதியை புதிய செயற்கைக்கோள்  மூலம் அளிப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 • அந்தமான் பகுதிகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு TTA  கேடரில் புதிய ஆளெடுப்பு நடத்தப்படும்.

 • நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வீட்டு வாடகைப்படி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மத்திய அரசின் முடிவையொட்டியே அமுல்படுத்தப்படும்.

 • காலியாக உள்ள குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவது சம்பந்தமாக மேலும் விதிகளை தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும்.

 • நக்சலைட் பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் படிகளும் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

Sunday, May 10, 2015

Wednesday, May 6, 2015


பிஎஸ்என்எல்-லின் மோசமான சேவைகள்: ஆளும் கட்சி எம்.பி.க்கள் புகார்

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சேவைகள் மோசமாக உள்ளதாக ஆளும் கட்சி உள்பட அனைத்து மக்களவை உறுப்பினர்களும் புதன்கிழமை கடுமையாக குற்றம்சாட்டினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் என்ற மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவைகள் குறித்து புதன்கிழமை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.அப்போது பாஜக உறுப்பினர் சஞ்சய் தோத்ரே பேசியபோது, பிஎஸ்என்எல் மிகவும் மோசமான சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. இதனால் மத்திய அரசில் ஊதியம் பெறும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் தங்கள் உழைப்பை தனியார் சேவைகளுக்கு அளிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் சொந்த சேவைகளை முன்னேற்றுவதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாட்டம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது என்றார் சஞ்சய் தோத்ரே.
ஆளும் கட்சி உறுப்பினரின் இந்த ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும் விதமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.

யார் ... தனியார்க்கு சாதகமாக இருப்பது ?
செல் சேவை உரிமையை BSNLக்கு தாமதமாக தந்தது யார் ?
தனியாரெல்லாம் ... சீனாவில் உபகரணம் வாங்கியபோது ....
BSNL வாங்கிட தடுத்து ... தனியார் உயர்த்தியது யார் ...
உபகரணம் வாங்கிட அனுமதியாது டெண்டர் ஐ தொடர்ந்து ரத்து செய்தது யார் ?
SPECTRUM ஏலத்தில் தனியாரோடு BSNLகலந்து கொள்ளவேண்டும் என தனியார்க்கு சாதக முடிவு சொன்னது யார் ?

Thursday, May 7, 2015


திருச்சி சிவா MP 
                தலைவர் /தோழர் /சகோதரர் என எப்படி சொல்லி அழைத்தாலும் அத்தனைக்கும் பொருத்தமானவர் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள்.
           30 வருடங்களுக்கு முன்பு திருவாரூர் வடக்குவீதியில் ஒரு தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் பேசிய செய்தி.
 "இந்த கூட்டத்தில் மேல் சட்டை அணியாமல் நிற்கிற என் அன்பு ஏழை தொழிலாளிக்கும், உச்ச அதிகாரம் படைத்ததாக கருத கூடிய பிரதமர் /ஜனாதிபதி யாராகிலும் ,,யாவருக்கும்  ஒரு வாக்கு (vote )  தான்.  ஆகவே உங்கள் வாக்கின் வலிமையறிந்து வாக்களிக்க வேண்டுகிறேன்  என்றார் .அவர் பேசிய பேச்சு, அந்த கம்பீரம் எனக்கு இன்றைக்கும் நினைவில் உள்ளது.
    சமீபத்தில் காதலர் தின விழா அன்று vijay tv நீயா?  நானா? நிகழ்ச்சியில் தோழர் திருச்சி  சிவா அவர்கள் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தை அவரே படித்து காட்டி  6 மாதத்திற்கு முன் நான் இதை படித்து இருந்தால் இப்படி உடையாமல் படித்திருக்க முடியாது என்று கூறி விட்டு இளைஞர்களே மனைவியுடன்  மனம் விட்டு பேசுங்கள், மனைவியை காதலியுங்கள் என்று பேசியபோது எனது கண்ணில் நீர் அரும்பியது. கம்பீரமாய் பார்த்த அவரை இப்படி பார்க்க என் மனம் கலங்கியது.
         இப்பொழுது திருநங்கைகளுக்காக குரல் கொடுத்த தோழர் திருச்சி சிவா அவர்களை எண்ணி மனம் மகிழ்கிறது.    

மாறா இப்பணி மேலும் வளர விழைகிறேன்!

நன்றியுடன்,
K. நடராஜன், தஞ்சை.  

செய்திகள்... 

 • நமது போராட்ட  கோரிக்கைகள் மீது இன்று 06/05/2015 தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

 • நமது  JAC கூட்டமைப்புத்தலைவர்கள்  12/05/2015 அன்று டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கின்றார்கள்.

 • கருணை அடிப்படை வேலை வழங்குவதற்கான  உயர்மட்டக்குழு HPC  கூட்டத்தை 31/05/2015க்குள் நடத்திட வேண்டும் என மாநில நிர்வாகங்களை CORPORATE  அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 • MANAGEMENT TRAINEE எனப்படும் நிதி மற்றும் நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வெளியில் இருந்தும் BSNLலில் பணி புரியும் குறிப்பிட்ட கல்வித்தகுதி  உள்ள ஊழியர்களில் இருந்தும் ஆளெடுப்பு நடத்தப்படும். (EXTERNAL  AND INTERNAL CANDIDATES). இதனால் முதலாம் பிரிவு STS பதவிகளில் தற்போதுள்ள பதவி உயர்வு மூலம் நமது அதிகாரிகள் அமர்வது  தடுக்கப்படுகிறது.


GPF - வைப்பு நிதி 

இம்மாதம் GPF வைப்புநிதி விண்ணப்பிக்க விரும்புவோர் 15/05/2015க்குள் ESS எனப்படும் ERP  இணையசேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இணையத்தில் விண்ணப்பித்து விட்டு விண்ணப்பத்தை அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட
 கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும். 


இது சம்பந்தமாக நமக்கு 
இரண்டு  கேள்விகள் எழுவது இயல்பே....

ஆனியிலே சேதி சொல்லி...
 ஆவணியிலே தேதி சொல்லும் மன்னவனைப்போல்... 
மாநில நிர்வாகம் GPF விண்ணப்பிக்க ஒவ்வொரு மாதமும் 
ஒரு தேதி சொல்லி வருகின்றது.  ERP தற்போது இயல்பு நிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில்  ஊழியர்கள் 

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் 
GPF விண்ணப்பிக்க வேண்டும். 
20 தேதிக்குள் GPF  பட்டுவாடா செய்யப்படும்...
 என மாநில நிர்வாகம்  குறிப்பிட்ட   தேதி  சொல்ல வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர  வைப்பு நிதி வேதனை களையப்படும்.

ERP என்பது TOWARDS PAPERLESS WORLD  
என கூறப்படுகின்றது.  
தாட்களற்ற தரமான சேவை.. 
இதுவே ERPயின் தாரக மந்திரம்.

இந்நிலையில் GPF விண்ணப்பிக்கும் தோழர்கள் ERPயிலும் விண்ணப்பித்துவிட்டு அதன் அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அச்சிட்ட விண்ணப்பம் கணக்கு அதிகாரிக்கு வரவில்லையெனில் GPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. சென்ற மாதம் காரைக்குடியில் ஏறத்தாழ 
20 விண்ணப்பங்கள் ESSல் விண்ணப்பித்த பின்னும் PRINTED APPLICATION வரவில்லையென்ற காரணத்திற்காகவே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மாநில நிர்வாகம் நடத்திய WEBINARலும் இதுவே  வலியுறுத்தப்பட்டுள்ளது. நம்முடைய தோழர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணி புரிகின்றனர். அங்கெல்லாம் அச்செடுக்கும் வசதி இல்லை. பெரிய ஊர்களிலே கூட கணிணி வசதி இல்லை.. 
PRINTER அச்சு இயந்திர வசதி இல்லை. பல JCMகளில் மணிக்கணக்கில் இதுவே பெரும் பிரச்சினையாக அலசப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் ESSல் விண்ணப்பித்தாலும் அச்சு எடுத்து மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள் தாமதமாகி விடுகின்றது. 

எனவே நமது கேள்வி...
இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி வந்த பின்னும் 
தாட்களில் அச்செடுத்து அனுப்பும் முறை தொடர வேண்டுமா?

ONLINE திருமணத்திற்கு 
அய்யரும்...
அச்சிட்ட பத்திரிக்கையும் தேவையா?
நிர்வாகம் சிந்திக்க வேண்டும்...

Tuesday, May 5, 2015

லோக்கல் JCM 6-5-2015 நடைபெற உள்ளது ,,
pre JCM இன்று 5-5-2015 தலைவர் பிரின்ஸ் தலைமையில் BSNLEU அலுவலகத்தில் JCM செயலர் சுப்ரமணியன் முன்னிலையில் நடை பெற்றது .
old item தீர்க்கப்படாத பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது ,,,,,

மதியம் 3.00 மணி அளவில் ஹவுஸ் கீபிங் contract காரர்கள் வந்திருந்தனர் ,,
DGM admin chamber ல் அதிகாரிகள் முன்னிலையில் கீழ் கண்ட பிரச்சனைகள் 
குறித்து பேசப்பட்டது .. 
1. மாதம் தோறும் bills முறையாக சமர்பிக்க வேண்டும் .கால தாமதம் தவிர்க்கப்படவேண்டும் .
2. EPF /ESI முறையாக செலுத்திய பின்தான் monthly bill payment செய்யப்படும் .
3. இம்மாதம் 10 தேதிக்குள் payment வலியுறுத்தப்பட்டது 
4. agency 20-5-2015 தேதி கெடு கேட்டது ,,நாம் 14-5-2015க்குள் payment செய்திட வலியுறுத்தியுள்ளோம் .
5. 14-5-2015 payment பட்டுவாடா நடைபெறவில்லை எனில் 15-5-2015 ல் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வது .
 6. AGENCY நிர்வாகத்திற்கும் /தொழிற்சங்கத்திற்கும் பல நேரங்களில் cell லில் 
பதில் பேசுவதில்லை என்பதை சுட்டிகாட்டி எச்சரிக்கப்பட்டது ..
payment 14-5-2015 ல் செய்திட  AGENCY ஒப்புக்கொண்டது எதிர் காலத்தில் கால தாமதம் 
தவிர்த்திடவும் ,,cell அழைப்பிற்கு பதில் தந்திடவும் வலியுறுத்தியுள்ளோம் ....  
DOTயுடனான பேச்சுவார்த்தை 

01/05/2015 அன்று நமது கூட்டமைப்புத்தலைவர்கள் 
DOT  செயலரை சந்தித்து நமது போராட்டக் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தினர். 

DOT செயலரோடு... 
தொலைத்தொடர்பு சிறப்புச் செயலர், 
தொலைத்தொடர்பு இணைச்செயலர்,
USO நிதி நிர்வாகி,
பொதுத்துறை இயக்குநர்,
சேவைகள் மற்றும் நிதி உறுப்பினர்கள் 
BSNL CMD என அதிகாரிகள் பட்டாளம் 
கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

DOT சார்பாக கீழ்க்கண்ட உறுதிமொழிகள் தரப்பட்டுள்ளன.
 • 6700 கோடி அலைவரிசைக் கட்டணத்தில் உடனடியாக 800 கோடி திருப்பித்தரப்படும். பாக்கித்தொகை அடுத்த வருட வரவு செலவு அறிக்கையில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.
 • USO நிதியில் இருந்து வரவேண்டிய 2012-13 ஆண்டிற்கான ADC கட்டணம் 1250 கோடி உடனடியாக வழங்கப்படும்.
 • சரியான கணக்கு வழக்கு இல்லாமல் BSNLலிடம் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட 7000 கோடி வருமான வரியை திருப்பித்தருவதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்தப்பணம் திருப்பி அளிக்கப்படும்.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல் சாதகமாக விரைந்து பரிசீலிக்கப்படும்.
 • ஊதிய திருத்தம் மேற்கொள்ளப்படும்போது  ஓய்வு பெறும் ஊழியர்களின்  ஓய்வூதிய திருத்தம் செய்வது பற்றி அரசுடன் கலந்தாலோசிக்கப்படும்.
 • MTNL - BSNL இணைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
 • BSNLக்கு சொந்தமான சொத்துக்கள் விரைவில் BSNL வசம் ஒப்படைக்கப்படும். BSNL கட்டிடத்தில் இயங்கி வரும் DOT அலுவலகங்களுக்கான வாடகையை DOT  வழங்குவது  பற்றி பரிசீலிக்கப்படும்.
 • ஓய்வூதியப் பங்களிப்பு PENSION CONTRIBUTION வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
ஆக மொத்தத்தில் DOTயுடனான பேச்சுவார்த்தை 
ஓரளவு பலனளிப்பதாக கருதப்பட்டுள்ளது.

நல் வழி காட்டுவது போராட்டம்.. 
நம் வலி தீர்ப்பது போராட்டம்..
ஒன்றுபட்ட போராட்டம்.. 
ஒன்றே நமது துயரோட்டும்...
தாரக மந்திரம் உரத்துச் சொல்வோம்...
ஒன்றாய் நாம் தடம் பதித்துச் செல்வோம்.

நன்றி காரைக்குடி வளைத்தளம் 

Saturday, May 2, 2015மே தின கொடி ஏற்று விழா பாபநாசம் தொலை பேசி நிலையம் DE /SDE மற்றும் நமது தோழர்கள் /தோழியர்கள் (NFTE /BSNLEU )இணைந்து நடத்தியது


 
   
  


Friday, May 1, 2015

மே நாள் போராட்டம் 
    129 மே தின விழா
8 மணி நேர வேலைதோழர்களே CGM அலுவலகத்தில் 29-4-2015 நடைபெற்ற பட்டினி போர்

                                                                                       
 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR