JCM கூட்டாலோசனைக்குழு
தேசியக்குழுக் கூட்ட முடிவுகள்
=================================
நமது JCM தேசியக்குழுக்கூட்டம் 14/05/2015
அன்று டெல்லியில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
- 22/07/1997 முதல் 08/09/2000 வரையிலான DOT காலத்தில் நடத்தப்பட்ட இலாக்காத் தேர்வு முடிவுகளை SC/ST தோழர்களுக்கு தளர்த்தி வெளியிடுவது சம்பந்தமாக DOPT ஆள் மாகாண இலாக்காவிடம் வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலைப் பொறுத்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
- BSNL வழங்கும் 60:40 ஓய்வூதியப்பங்களிப்பை நிறுத்துவது சம்பந்தமாக BSNLலின் நிலையை வலியுறுத்தி DOTக்கு மேலும் கடிதங்கள் எழுதப்படும். DOT அதிகாரிகள் சாதகமாக உள்ள நிலையில் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.
- BSNL MRS மருத்துவத்திட்டத்தை மேம்படுத்துவது சம்பந்தமாக தனி குழு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.
- 30/09/2000க்குப்பின் TM ஆகப்பணி நிரந்தரம் பெற்ற TSM தோழர்கள் பலருக்கு BSNLலில் பணி நியமன ஆணை PRESIDENTIAL ORDER வழங்கப்படவில்லை. இது வரை மாநிலங்களில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்கள் DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
- மாநில அளவில் WORKS COMMITTEE அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். மாவட்டங்களில் தொடர்ந்து பணிக்குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்படும்.
- ஊதிய தேக்கநிலை STAGNATION மற்றும் நாலு கட்டப்பதவி உயர்வால் வந்த ஊதிய இழப்பு ஆகிய பிரச்சினைகள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு DOT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
- மகளிர் வன்கொடுமை தடுப்புக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற ஊழியர் தரப்புக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அதிகாரிகள் மட்டத்தில் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
- MTNL பகுதிகளில் பணி புரியும் BSNL ஊழியர்களுக்கு ரூ.200/= இலவச பேசும் வசதி அளிப்பது பற்றி சாதகமாக முடிவு செய்யப்படும்.
- அந்தமான் பகுதிக்கு சக்தி வாய்ந்த அலைவரிசை வசதியை புதிய செயற்கைக்கோள் மூலம் அளிப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- அந்தமான் பகுதிகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு TTA கேடரில் புதிய ஆளெடுப்பு நடத்தப்படும்.
- நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வீட்டு வாடகைப்படி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மத்திய அரசின் முடிவையொட்டியே அமுல்படுத்தப்படும்.
- காலியாக உள்ள குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவது சம்பந்தமாக மேலும் விதிகளை தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும்.
- நக்சலைட் பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் படிகளும் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.
No comments:
Post a Comment