Wednesday, May 6, 2015
பிஎஸ்என்எல்-லின் மோசமான சேவைகள்: ஆளும் கட்சி எம்.பி.க்கள் புகார்
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சேவைகள் மோசமாக உள்ளதாக ஆளும் கட்சி உள்பட அனைத்து மக்களவை உறுப்பினர்களும் புதன்கிழமை கடுமையாக குற்றம்சாட்டினர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிஎஸ்என்எல் என்ற மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவைகள் குறித்து புதன்கிழமை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.அப்போது பாஜக உறுப்பினர் சஞ்சய் தோத்ரே பேசியபோது, பிஎஸ்என்எல் மிகவும் மோசமான சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. இதனால் மத்திய அரசில் ஊதியம் பெறும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் தங்கள் உழைப்பை தனியார் சேவைகளுக்கு அளிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் சொந்த சேவைகளை முன்னேற்றுவதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் நாட்டம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது என்றார் சஞ்சய் தோத்ரே.
ஆளும் கட்சி உறுப்பினரின் இந்த ஆணித்தரமான குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும் விதமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
செல் சேவை உரிமையை BSNLக்கு தாமதமாக தந்தது யார் ?
தனியாரெல்லாம் ... சீனாவில் உபகரணம் வாங்கியபோது ....
BSNL வாங்கிட தடுத்து ... தனியார் உயர்த்தியது யார் ...
உபகரணம் வாங்கிட அனுமதியாது டெண்டர் ஐ தொடர்ந்து ரத்து செய்தது யார் ?
SPECTRUM ஏலத்தில் தனியாரோடு BSNLகலந்து கொள்ளவேண்டும் என தனியார்க்கு சாதக முடிவு சொன்னது யார் ?
No comments:
Post a Comment