தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 31, 2010

இனிதே துவங்கட்டும்..... 2011

இனிதே துவங்கட்டும்
இரண்டாயிரத்து பதினொன்று!   
 எதிர் வரும்  காலம்  இனி நம்மோடு!!


வாழ்த்துக்களுடன்,
உங்கள் தஞ்சை வலைத்தளம்.

IDA உயர்வு 3.2 %

     
       01 - 01- 2011 முதல் IDA 3.2  % 
                          உயர்ந்துள்ளது.    
                                              ( 39,8 + 3.2 = 43 % )

Thursday, December 30, 2010

உணர்வுகள் மடைமாற்றிக்கொண்ட விழா!

   சிறக்க விழா நடத்த வேண்டுமா!   சேலம் மாவட்டத்தை அழையுங்கள்!! 
     இனி அப்படித்தான்  தலைவர்கள், தோழர்கள் எல்லோருமே சொல்வார்கள்.   அந்தளவுக்கு விழா ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் தோழர் நூருல்லா  தலைமையில் செய்து முடித்திருந்தார்கள்.   கொள்கை விளக்க போர்டுகள், மேடை அமைப்புகள், உணவு ஏற்பாடு, தலைவர்களை கவுரவித்த விதம் அனைத்துமே சிறப்பாக இருந்தது.     உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.  

     நமது தஞ்சை மாவட்டத்திலிருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்களிப்பு செய்தார்கள்.  தஞ்சையிலிருந்து ஒரு வேனும், திருவாரூரிலிருந்து ஒரு வேனும் வந்திருந்தது.   மாவட்டத்திலிருந்து ரூபாய் 2500  துவக்க விழாவுக்கு நிதி அளித்தார்கள்.  தலைவர் தமிழ்மணி அவர்களை கவுரவித்து நினைவுப் பரிசும் வழங்கினார்கள். 

     தலைவர் தமிழ்மணி பாராட்டு விழாவில் பங்கெடுத்துக்கொண்ட தோழர்கள் அனைவருமே தோன்றியதை தயங்காமல் அப்படியே பேசினார்கள் என்பதுதான் என்னைப் பொறுத்தவரை பெரும் சிறப்பு.   தோழர் R.K  அவர்கள் தனக்கும், தமிழ் மணிக்கும் இடையிலான நெருக்கத்தையும் இறுக்கத்தையும் பளிச்சென்று பேசி " நண்பேண்டா " என்றது அனைவரையும் நெகிழ வைத்தது.   
தோழர் ஞானையா அவர்கள் 
திருநெல்வேலி மாநாட்டு நிகழ்வையும் , அதில் பொறுப்பு எடுக்கக் கூடாது என்று சொன்னபொது அதை மனதார  ஏற்றுக்கொண்ட தன்மையை பாராட்டி பல்வேறு செய்திகளையும் உடைத்துப் பேசினார்.  
     குடந்தை ஜெயபால், மாலி, முத்தியாலு, S.S. கோபாலகிருஷ்ணன், CKM,  RV, ஜெயராமன், சகோதரச் சங்கத் தோழர்கள், மாற்றுச் சங்கத் தோழர்கள் , பட்டாபி மற்றும் பொதுச் செயலர் அனைவரின் பங்களிப்பும், 
அனுபவப் பகிர்வும் வெகு அற்புதம். 
அனைத்து மாவட்டச் சங்கமும், பல்வேறு தோழர்களும் தலைவரை மகிழ்ந்து கவுரவித்தார்கள். 
தருமபுரி மாவட்டச் செயலர் தோழர் மணி அவர்கள் 
தமிழ்மணியின் தொழிற்சங்க வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக விழாவில் வெளியிட்டார்.  அதைப் போலவே சேலம் மாவட்டத்  தோழர்கள் மலர் ஒன்றும் வெளியிட்டார்கள்.  
அனைத்து தலைவர்களும் தமிழ்மணியோடு வாழ்ந்த காலத்தில் பழகிய விதம், சிறப்பியல்புகள்
அனுபவங்கள்  ஆகியவைகளை  மலரில்  பகிர்ந்து  கொண்டிருந்தனர்     
உணவு இடைவேளையில் கலைநிகழ்வும் நடைபெற்றது.    

    மாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத் துவக்க விழாவும் தோழர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்தது.  தோழர் ஜெயராமன் அவர்கள் பல்வேறு விபரங்களுடன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.  தோழர் C சிங் அவர்கள் நம்மை பார்த்து உற்சாகமடைந்து பேசினார்.   தோழர் CKM அவர்களும் BSNLEU  க்கு இம்முறை பாடம்   புகட்டியாக வேண்டும் என்பதை விளக்கமாக அதே நேரத்தில் ஆவேசமாகப் பேசினார்.  பட்டாபி அவர்கள்  பொறுமையாக அதே நேரத்தில் அக்கறையோடு விழாவைச் சிறப்பாகக்  கொண்டு சென்று முடித்தார்.   
 அன்புடன்,
S.  சிவசிதம்பரம்                          
பட்டுக்கோட்டை.

கிளைச் செயலர்கள் கூட்டம்.

     நாள்: 07-01-2011         நேரம்: காலை 10 மணி                        இடம்: தஞ்சை CTO வளாகம்.


பொருள்:      தேர்தல் பணிக்குழு அமைத்தல் 
வேண்டல்: தோழர்களின் தவறாத, குறித்த 
                        நேர வருகை. 

                                                  தோழமையுடன், 
S. பிரின்ஸ்    T. பக்கிரிசாமி   T. பன்னீர்செல்வம்  
 தலைவர்           பொருளர்                செயலர்.      
30-12-2010
 

Monday, December 27, 2010

தமிழ் மாநிலத் தலைவனுக்கு சேலத்தில் செவ்வணக்கம்

     ஆம்! நாளை 28-12-2010 காலை தோழர் தமிழ்மணிக்கு பாராட்டு விழா!!
    
     தலைவனை வணங்கி வாழ்த்துச் சொல்ல, தமிழகமெங்கிலும் இருந்து தலைவர்கள் தோழர்கள் இன்றிரவிலிருந்தே இயங்கத் தொடங்கி விட்டார்கள். 

     நீங்கள் ஜெகன், RK, முத்தியாலு, மாலியால் உயர்த்திப் பிடிக்கப்பட்டவர்.  அதனால்தான் மாநிலத் தலைமை கொண்டீர்கள். 

     அடிமட்டத் தொழிலாளியின் ஆகர்ஷ சக்தியாக  நீங்கள் திகழ்ந்ததால்தான் மாவட்டச் செயலர்கள் அதிகப் பட்சம் இன்று டெலிகாம் மேக்கானிக்குகளாய்!
     தலைமைத் தகுதிக்கு அதீத அறிவாற்றல், ஆங்கிலப் புலமை அவசியமில்லை!
     அன்பு, அக்கறை, அனுபவம் இவை அனைத்தையும் தகுதி கொள்ளும். 

     உணர்த்திச் சிவந்த உன்னதத் தலைவனே! உம்மை நாங்கள் வாழ்த்துகின்றோம்!

     தலைவா!   உனக்கு காலையில் விடை கொடு விழா!!
இடையில் ஒரு மணி நேரம் மூச்சு விட்டுக் கொள்!
                                                    மாலையில் தேர்தல் பணி துவக்க விழா!!

     லட்சக் கணக்கில் RTP, மஸ்தூர்களை 
                                                                           அரியணை ஏற்றிய ஆற்றல்!
ஆர்ப்பாட்டத்தோடு அமுங்கிடாது 
                                                           சரண்டருக்கெதிரான அந்தத் துள்ளல்!
     பதவி உயர்வு தந்து, போனஸ் தந்து,
                                                         40 % ஊதிய உயர்வும் தந்த துடிப்பு!
     உபரியும் ஆக்கிட மாட்டேன்!  உதவாக்கரையும் 
                                   ஆக்கிடமாட்டேன் என்ற உயரிய அக்கறை வெடிப்பு!

இப்படி நம் 
     ஊனோடும், உயிரோடும் கலந்த NFTE பேரியக்கமே!!

உன்னை உயர்வு கொள்ள, தேர்வு கொள்ள 
தலைவனோடு  நாங்களும் கரைகிறோம்!

எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.

Sunday, December 26, 2010

BSNLEU வில் பிளவு.

26-12-2010
    குஜராத்தில் மூத்த தலைவர் தோழர் R.T. சர்மா தலைமையில் 2500 க்கு மேற்பட்ட  தோழர்கள் நமது NFTE-BSNL சங்கத்தில் இணைந்தனர்.
     சம்பள மாற்றத்தில் 78.2 % DA வினைக் கோட்டை விட்டதால் கடந்த 2007 லிருந்து இன்றுவரை அரை லட்ச ரூபாயை இழந்ததோடு மட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரத்தை இழந்து வருவதையையும், அதன் விளைவால் HRA 20 % to 30 % வரையிலான  இழப்பையும்  அவர் சுட்டிக்காட்டினார். 
     மேலும், பதவி உயர்வுத் திட்டத்தில் உள்ள குழப்பம், போனசை இழந்தது போன்ற அம்சங்கள் BSNLEU மீதான நம்பிக்கையை நாடு முழுவதும் சிதைத்து விட்டது.     கண்டிப்பாக நாடு முழுவதும் இந்த அதிருப்தி எதிரொலிக்கும் என்றும் கூறினார். 

 
Friday, December 24, 2010

சொசைட்டி செய்திகள்

     
     சென்னை சொசைட்டியின் RGB மீட்டிங் கடந்த 22-12-2010 அன்று தலைவர் வீரராகவன் தலைமையில் சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது. 
      - டிசம்பர் மாத சம்பளத்திலேயே  டிவிடென்ட்   
       வழங்கப்படும்.  
     - சாதாரணக் கடன் ரூபாய் 4 லட்சமாக  
       உயர்த்தப்படும். 
     - சொசைட்டி ஊழியர்களுக்கு வழக்கம் 
       போலவே போனஸ் (அதிகப் பட்சம் 
       ரூபாய் 20000 /-)   வழங்கப்படும்.
     - சொசைட்டியில் ஏற்கெனவே வாங்கப்பட்ட
        நிலம் விற்பனை சம்பந்தமாக அனைத்து      
        உறுப்பினர்களிடமும் கருத்து கேட்டு  
        முடிவு எடுக்கப்படும். 

S. சிவசிதம்பரம்,
RGB, பட்டுக்கோட்டை.

   

வேலை நிறுத்த காலத்திற்கான சம்பள பிடித்தம்

     வேலை நிறுத்த காலத்திற்கான  சம்பள பிடித்தம் இம்மாதம் இல்லை.   கார்பொரேட் அலுவலகத்தில் வேலை நிறுத்த காலத்திற்கு சம்பள பிடித்தம் கூடாது என்று குறிப்பு கொடுக்கப்பட்டு அது சம்பந்தமாக எந்த முடிவும் வெளிவராத நிலைமையில் சம்பள கட்டு கூடாது என்று நமது மாநில தலைவர் தமிழ்மணி சென்னை CGM இடம் நேற்று பேசினார்.             அதனடிப்படையில் இம்மாதம் சம்பள வெட்டு கிடையாது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.    
   நமது மாவட்டச் செயலரும் உடனேயே தஞ்சை பொது மேலாளரிடம் பேசி சம்பளபிடித்தம் இல்லாத நிலைமையை 
உறுதிப்படுத்தி விட்டார்.  

Thursday, December 23, 2010

NFTE உடன் கூட்டணி

     நமது சங்கத்துடன் 7 சங்கங்கள் தேர்தல் கூட்டணி வைத்திருக்கிறது.  
 SNATTA, ATM, BSNLES, SEWA, BSNLWRU and PEWA   ஆகிய சங்கங்கள் கையெழுத்து போட்டு உடன்பாடு கண்டுள்ளன.

தஞ்சை மாவட்டச் செயற்குழு

     கடந்த 10-12-2010 அன்று மாவட்டச் செயற்குழு  மாவட்டத் தலைவர் பிரின்ஸ் தலைமையில் நடைபெற்றது.   தஞ்சை SDOP கிளை பொறுப்பேற்று நடத்தித் தந்தது. 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
     1.  மாவட்டத் துணைச் செயலர் தோழர் தஞ்சை பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்டச் செயலராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
     2. மறைந்த மாவட்டச் செயலர் தோழர் கேசவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 
     3. தஞ்சை SDOP கிளைத் தோழர் R. ஜோதிவேல் அவர்கள் மாவட்டத் துணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
     4.டிசம்பர் 28 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்  துவக்க விழாவுக்கும் நமது மாநிலத் தலைவர் தோழர் தமிழ்மணி அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவுக்கும் மாவட்ட முழுமையும் இருந்து வேன் பிடித்துச் சென்று திரளாக பங்கேற்பது என்றும் முடிவு  செய்யப்பட்டது.                                                                                                     

Sunday, December 19, 2010

Tuesday, December 14, 2010

Sunday, December 12, 2010

டிச 1, 2 வேலைநிறுத்தம் குறித்த தெளிவான கட்டுரை.

     நடந்து முடிந்த  வேலை நிறுத்தம் என்ற தலைப்பில் நமது மாநிலச் செயலர் விளக்கமாக கட்டுரை எழுதியுள்ளார்.   கிளைச் செயலர்கள் அதைக் கண்டிப்பாக தகவல் பலகையில் எடுத்து ஒட்டவும்.    பல்வேறு கேள்விகளுக்கு ஒரே  கட்டுரையில் விளக்கம் கிடைக்கின்றது.   தவறாது பயன்படுத்த வேண்டுகிறேன்.
  

Thursday, December 9, 2010

சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனமாகும்.

1945 -ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. . ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தையடுத்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ‘மனித உரிமை ஆணைக் குழு” உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக ‘சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் (Universal Declaration of Human Rights) பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
டிசம்பர் 10, 1948-ஆம் ஆண்டு பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள “பலேடு சாயிலோற்’ என்ற மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது.
இந்த புனித நாள் 1950 -ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதி ‘சர்வதேச மனித உரிமைகள் தினமாக” (International Human Rights Day) கொண்டாடப்பட்டு வருகிறது. ‘சகல மனிதப் பிரஜைகளும் சமத்துவமானதும், விட்டுக் கொடுக்க முடியாததுமான உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுடனேயே பிறக்கின்றனர்” என்ற உண்மையை உணர்த்தும் வகையிலான நிகழ்வுகளும், செயற்திட்டங்களும் இத்தினத்தில் முழு உலகிலும் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று மனித உரிமைகளைப் பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான உலகளாவிய ஒரு நியமமாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது.
இந் நிகழ்வுகளின் பிரதான நிகழ்ச்சி இத்தினத்தில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறும். அதே நேரத்தில் உலகளாவிய ரீதியில் அரசுகளும், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளையொட்டி பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இத்தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கென தொனிப் பொருள் ஒன்று நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டுக்கான தொனிப்பொருள் “எங்கள் எல்லோருக்குமான கௌரவமும் நீதியும்’ (dignity and justice for all of us) என்பதாகும்.
1776 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப்பிரகடனத்தின், ‘எல்லாப் பிரஜைகளும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்கள் வாழும் உரிமை, சுதந்திரம், மகிழ்ச்சியை நாடும் உரிமை போன்றன அவர்களிடமிருந்து பிரிக்கமுடியாத உரிமைகளாகும்.” என கூறப்பட்டிருந்தது. எனவே மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது.
மனித உரிமைகளின் சுருக்க வரலாறு.
மனித உரிமையின் வரலாறு பல நூறு ஆண்டுகளைக் கொண்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் இது விரிவு படுத்தப்பட்டுள்ளது. கிமு 539 இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட ‘நோக்கப் பிரகடனமும்,” கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியாவின் அசோகப் பேரரசனால் வெளியிட்ட ‘அசோகனின் ஆணையும்”; கிபி 622 இல் முகமது நபி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘மதீனாவின் அரசியல் சட்டமும்” விதந்து கூறக்கூடியவை. ஆங்கிலச் சட்ட வரலாற்றில் 1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்” (Magna Carta Libertatum) முக்கியத்துவம் பெறுகின்றது.
மறுமலர்ச்சிக் காலத்தில் 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜெர்மனியில் வெளியிடப்பட்ட “கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்” (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் மனித உரிமை தொடர்பான முதல் பதிவு எனக் கூறப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘பிரித்தானிய உரிமைகள் சட்டமூலமும்”, 1789 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிரான்சின் தேசியசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனிதர்களுக்கும், குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும்”. 1776 ம்ஆண்டு ஐக்கிய அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தை அடுத்து முன்வைக்கப்பட்ட ‘ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கையும்”, 1789ம்ஆண்டு பிரான்ஸியப் புரட்சியை அடுத்து ‘மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள்” அறிக்கையும். முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் அனைத்துல செஞ்சிலுவைச் சங்கக் குழு நிறுவப்பட்டமை, 1864 ஆம் ஆண்டின் “லீபர் நெறிகள்” 1864 ஆம் ஆண்டின் முதலாம் ஜெனீவா மாநாடு என்பன அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்ததுடன் இரண்டு உலகப் போர்களுக்குப் பின்னர் அச் சட்டங்கள் மேலும் வளர்ச்சி பெற உதவின.
முதலாம் உலகப் போரின் பின்னர் உருவான வொர்சாய் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1919 ஆம் ஆண்டில் ‘சர்வதேச சங்கம்” உருவானது. இச்சங்கம், மீண்டும் ஒரு உலக மகா யுத்தம் நடைபெறக்கூடாது, என்பதைக் குறிக்கோலாகக் கொண்டிருந்தது. இந்த அடிப்படையில் ஆயுதக் களைவு, கூட்டுப் பாதுகாப்பு மூலம் போரைத் தவிர்த்தல்; நாடுகளிடையேயான முரண்பாடுகளை; கலந்துபேசுதல், இராஜதந்திர வழிமுறைகள், உலக நலன்களை மேம்படுத்துதல் என்பவற்றின் மூலம் தீர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இம்முயற்சிகள் பூரண வெற்றியினைத் தரவில்லை. ஆனாலும், மனித உரிமைகளுடன் இத்திட்டங்கள் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. இவை இன்றைய உலக மனித உரிமைகள் அறிக்கையிலும் உள்வாங்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
1948ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘சர்வதேச மனித உரிமை சாசனம்” 30 உறுப்புரைகளைக் கொண்டது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் அரசியல் திட்டங்கள் மனித உரிமைகள் பற்றிய உறுப்புரைகளை ஐ.நா.வின் மனித உரிமைகள் சாசனத்துக்கு இசைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இவ்வுறுப்புரைகள் தற்போது விரிவான செயற்பாடுகளை மையமாகக் கொண்டு காலத்துக்குக் காலம் விரிவுபடுத்தப்பட்டதாக பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளன. உதாரணமாக 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான உலக மாநாட்டுப் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம். மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் எனக் கூறப்படுகின்றது.
மனித உரிமை பிரகடனம் முப்பது உறுப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது உறுப்புரை சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது உறுப்புரை இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. உறுப்புரை மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 – 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது. அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தியேழு வரையானவை (22 – 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது.
சர்வதேச மனித உரிமை சாசனம் 30 உறுப்புரைகளும் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
உறுப்புரை 1
சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
உறுப்புரை 2
ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்து என்பன எத்தகைய வேறுபாடுகளுமின்றி இப்பிரகடனத்தில் தரப்பட்டுள்ள அனைத்து உரிமைகளுக்கும், சுதந்திரங்களுக்கும் அனைவரும் உரித்துடையவராவர். அதாவது நிறத்தில், பாலினத்தில், மதத்தில், மொழியில் வேறுபாடு இருப்பினும் அனைவரும் சமமே!
உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் ஆளெவருக்குமான உரிமை. அதாவது சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு
உறுப்புரை 4
அடிமை நிலை, அடிமை வியாபாரம் அவற்றில் எல்லா வகையிலும் விடுபடுவதற்கான சுதந்திரம். அதாவது உங்களை அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை. அதேபோல ‘யாரையும் அடிமையாக நடத்த உங்களுக்கும் உரிமை இல்லை”.
உறுப்புரை 5
சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடாத்துகைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
உறுப்புரை 6
சட்டத்தின் முன் ஆளாக கணிக்கப்படுத்துவதற்கான உரிமை. அதாவது சட்டத்தால் சமமாக நடத்தபடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு
உறுப்புரை 7
சட்டத்தின் முன் அனைவரும் சமன். பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் உரித்துடையவர்கள்.
உறுப்புரை 8
ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலமைப்பினால், அல்லது சட்டத்தினால் அவர்களுக்கு அளி்க்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயல்களுக்காக தகுதியான நியாய சபை முன் பரிகாரம் பெறுவதற்கான உரிமை. அதாவது ஒருவரது உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
உறுப்புரை 9
சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடுகடத்தல் ஆகியவற்றுக்கு எவரும் ஆட்படுத்தப்படலாகாது. அதாவது நீதிக்கு புறம்பாக உங்களை காவலில் வைக்கவோ, உங்கள் தேசத்தில் இருந்து நாடு கடத்தவோ உரிமை இல்லை.
உறுப்புரை 10
நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
உறுப்புரை 11
1. தண்டனைக்குரிய தவறுக்குக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளோர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை சுத்தவாளியென ஊகிக்கப்படும் உரிமை. அவ்விளக்கத்தில் அவர்களது எதிர்வாதங்களுக்கு அவசியமான எல்லா உறுதிப்பாட்டு உத்தரவாதங்களும் அவர்களுக்கிருத்தல் வேண்டும்.
2. தேசிய, சர்வதேசிய நாட்டிடைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் செயல் அல்லது செய்யாமை புரியப்பட்ட நேரத்தில் அச்செயல் அல்லது செய்யாமை தண்டணைக்குரிய தவறொன்றாக அமையாததாகவிருந்து அச்செயல் அல்லது செய்யாமை காரணமாக, எவரும் ஏதேனும் தண்டணைக்குரிய தவறுக்குக் குற்றவாளியாகக் கொள்ளப்படலாகாது. அத்துடன், தண்டணைக்குரிய தவறு புரியப்பட்ட நேரத்தில் ஏற்புடையதாகவிருந்த தண்டத்திலும் பார்க்கக் கடுமையான தண்டம் விதிக்கப்படலாகாது.
உறுப்புரை 12 .
அந்தரங்கத்துவம், குடும்பம், வீடு, அல்லது தொடர்பாடல்களில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம். அனைவருக்கும் நமது அந்தரங்கத்தை காத்துக்கொள்ள உரிமை உண்டு.
உறுப்புரை 13
1. ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கான, நாட்டை விட்டு வெளியேற, திரும்பி வருவதற்கான உரிமை
உறுப்புரை 14
ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு
1. வேறு நாடுகளுக்குச் செல்வதன் மூலம் துன்புறுத்தலிலிருந்து புகலிடம் நாடுவதற்கும், துன்புறுத்ததலிலிருந்து புகலிடம் வழங்குவதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அரசியற் குற்றங்கள் அல்லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும், நெறிகளுக்கும் முரணான செயல்களிலிருந்து உண்மையாக எழுகின்ற வழக்குத் தொகுப்புகள் சம்பந்தமாகவும் இவ்வுரிமை கேட்டுப் பெறப்படலாகாது.
உறுப்புரை 15
1. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒரு தேசிய இனத்தினராகவிருக்கும் உரிமை உண்டு.
2. எவரினரும் தேசிய இனத்துவம் மனப்போக்கான வகையில் இழப்பிக்கப்படுதலோ அவரது தேசிய இனத்துவத்தை மாற்றுவதற்கான உரிமை மறுக்கப்படுதலோ ஆகாது.
உறுப்புரை 16
விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொள்ள குடும்ப பாதுகாப்பிற்கான உரிமை
1. பராய வயதையடைந்த ஆண்களும், பெண்களும், இனம், தேசிய இனம் அல்லது சமயம் என்பன காரணமாக கட்டுப்பாடெதுவுமின்றி திருமணம் செய்வதற்கும், ஒரு குடு்ம்பத்தை கட்டியெழுப்புவதற்கும் உரிமை உடையவராவர். திருமணஞ் செய்யும் பொழுதும் திருமணமாகி வாழும் பொழுதும், திருமணம் கலைக்கப்படும் பொழுதும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சம உரிமையுண்டு.
2. திருமணம் முடிக்கவிருக்கும் வாழ்க்கைத் துணைவோரின் சுதந்திரமான, முழுச் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் முடிக்கப்படுதல் வேண்டும்.
3. குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.
உறுப்புரை 17
சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை
1. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
2. எவரினதும் ஆதனம் ஒருதலைப்பட்ச மனப்போக்கான வகையில் இழக்கப்படுதல் ஆகாது.
உறுப்புரை 18
மதம் மற்றும் நம்பிக்கையை பின்பற்றுவதற்கான சுதந்திரம்
சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் என்பவற்றுக்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையினுள் ஒருவர் தமது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரமும், போதனை, பயிலல், வழிபாடு, அநுட்டானம் என்பன மூலமும் தத்தமது மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவும், வேரொருவருடன் கூடியும், பகிரங்கமாகவும் தனி்ப்பட்ட முறையிலும் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும் அடங்கும்.
உறுப்புரை 19
கருத்து, தகவலிற்கான சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்துக்கும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எவருக்கும் உரிமையுண்டு. இவ்வுரிமையானது தலையீடின்றிக் கருத்துக்களைக் கொண்டிருப்பதற்கும், எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகளைப் பொருட்படுத்தாமலும், தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.
உறுப்புரை 20
எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள, சங்கத்தில் உறுபினராக உரிமை உண்டு
1. சமாதான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு.
2. ஒரு சங்கத்தில் சேர்ந்தவராகவிருப்பதற்கு எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
உறுப்புரை 21
அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபற்றவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
3. மக்களின் விருப்பே அரசாங்க அதிகாரத்தின் எல்லையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பானது, குறித்த காலத்தில் நீதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 22
சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் கூடிய உரிமை -
உறுப்புரை 23 தொழில் புரியவும், ஊதியத்தைப் பெறுவதற்குமான உரிமை
1. ஒவ்வொருவரும் தொழில் செய்வதற்கான, அத்தொழிலினைச் சுதந்திரமான முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், தொழிலின்மைக்கெதிரான பாதுகாப்பு உடையோராயிருப்பதற்கான உரிமையை உடையர்.
2. ஒவ்வொருவரும் வேறுபாடெதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவராவர்.
3. வேலை செய்யும் ஒவ்வொருவரும் தாமும் தமது குடும்பத்தினரும் மனித மதிப்புக்கிணையவுள்ள ஒரு வாழ்க்கையை நடத்துவதனை உறுதிப்படுத்தும் நீதியாவதும் அநுகூலமானதுமான ஊதியத்திற்கு உரிமையுடையோராவர். அவசியமாயின் இவ்வூதியம் சமூகப் பாதுகாப்பு வழிமுறைகளினால் குறை நிரப்பபடுவதாயிருத்தல் வேண்டும்.
4. ஒவ்வொருவருக்கும் தத்தம் நலன்களைப் பாதுகாப்பதற்கெனத் தொழிற் சங்கங்களை அமைப்பத்தற்கும். அவற்றில் சேர்வதற்குமான உரிமையுண்டு.
உறுப்புரை 24
இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை -
இளைப்பாறுவதற்கும், ஓய்விற்கும் ஒவ்வொருவரும் உரிமையுடையவர். இதனுள் வேலை செய்யும் மணித்தியால வரையறை, சம்பளத்துடனான விடுமுறைகள் அடங்கும்.
உறுப்புரை 25
நல்ல வாழ்க்கை தரத்திற்கான உரிமை
1. ஒவ்வொருவரும் உணவு, உடை, உரையுள், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் என்பன உட்பட தமதும் தமது குடும்பத்தினாலும் உடனலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்புக்கும் உரிமையுடையவராவர்.
2. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேட கவனிப்பிற்கும் உதவிக்கும் உரித்துடையன. சகல குழந்தைகளும் அவை திருமண உறவிற் பிறந்தவையாயினுஞ்சரி அத்தகைய உறவின்றிப் பிறந்தவையாயினுஞ்சரி, சமமான சமூகப் பாதுகாப்பினைத் அனுபவிக்கும் உரிமையுடையன.
உறுப்புரை -26
கல்விக்கான உரிமை
1. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமானதாயிருத்தல் வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயப்படுத்தல் வேண்டும். தொழில் நுட்பக் கல்வியும் உயர் தொழிற் கல்வியும் பொதுவாகப் பெறப்படத்தக்கனவாயிருத்தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமையடிப்படையின் மீது சமமான முறையில் கிடைக்கக் கூடியதாக்கப்படுதலும் வேண்டும்.
2. கல்வியானது மனிதனின் ஆளுமையை முழுதாக விருத்தி செய்யுமுகமாகவும் மனிதவுரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதையை வலுப்படு்த்துமுகமாகவும் ஆற்றப்படுத்தப்படல் வேண்டும்.
உறுப்புரை 27
தங்கள் சமூகத்தின் பண்பாட்டு அறிவியல் வளர்சியை பகிர்ந்து கொள்ளும்
உரிமை -
1. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலைகளைத் தூய்ப்பதற்கும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
2. அறிவியல், இலக்கிய, கலைப் படைப்பின் ஆக்கியற் கர்த்தா என்ற வகையில் அப்படைப்புகள் வழியாக வரும் ஒழுக்க நெறி, பருப்பொருள் நலங்களின் பாதுகாப்பிற்கு அத்தகையோர் ஒவ்வொருவருக்கும் உரிமை உடையவராவர்.
உறுப்புரை 28
மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக முறைமையில் பங்குபற்றும் உரிமை
இப்பிரகடனத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் முழுமையாக எய்தப்படக்கூடிய சமூக, சர்வ தேசிய நாட்டிடை அமைப்பு முறைக்கு ஒவ்வொருவரும் உரித்துடையவராவர்.
உறுப்புரை 29
ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்
1. எந்த ஒரு சமூகத்தினுள் மாத்திரமே தத்தமது ஆளுமையின் கட்டற்ற பூரணமான வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ அந்தச் சமூகத்தின்பால் ஒவ்வொருவருக்கும் கடமைகள் உண்டு.
2. ஒவ்வொருவரும் அவரது உரிமைகளையும் சுதந்திரங்களையும் பிரயோகிக்கும் பொழுது இன்னொருவரின் உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் மதி்ப்பையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், சனநாயக சமுதாயமொன்றின் ஒழுக்கசீலம், பொது மக்கள் ஒழுங்கமைதி, பொது சேமநலன் என்பவற்றுக்கு நீதியான முறையில் தேவைப்படக் கூடியவற்றை ஏற்படுத்தல் வேண்டுமெனும் நோக்கத்துக்காகவும் மட்டுமே சட்டத்தினால் தீர்மானிக்கப்படும் வரையறைகளுக்கு மாத்திரமே கட்டுப்படுவராயாமைதல் வேண்டும்.
3. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்களுக்கும் நெறிகளுக்கும் முரணாக எவ்விடத்திலேனும் பிரயோகிப்படலாகாது.
உறுப்புரை 30
இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் நீக்கும் உரிமை கிடையாது
இப்பிரகடனத்திலுள்ள எவையும். இதன்கண் எடுத்துக்காட்டப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றிலுள்ள எவற்றையும் அழிக்கும் நோக்கத்தையுடைய ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் அல்லது செயலெதனையும் புரிவதற்கும் எந்த ஒரு நாட்டுக்கோ குழுவுக்கோ அல்லது ஒருவருக்கோ உட்கிடையாக யாதேனும் உரிமையளிப்பதாகப் பொருள் கொள்ளப்படுதலாகாது.
மனித உரிமை என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.
தற்கால உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ, எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும், மனித உரிமைகள் என்பதே பிரதான அம்சமாகத் திகழ்கிறது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே. இவ்விடத்தில் 1998 மார்ச் 18ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அன்னான் நிகழ்த்திய உரை மனித உரிமைகள் தொடர்பான புதிய விளக்கத்தை வழங்குகின்றது. அதாவது ‘ சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப்பிடியிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்.”
1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்பொடியா, ஹெயிட்டி, ருவண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜுன் 14 இல் வியட்னாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது. இலங்கையில் யுத்த நிலையின் போது உரிமை மீறல்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்தது.
இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பலதை உதாரணப்படுத்தலாம்.
மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ. நா. தாபனம இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற வேளையிலே குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் இருபத்தியோராம் உறுப்புரையை மீறியது. அதாவது மலையகத் தோட்டத் தொழிளாலர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மீறப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன. இவ்வாறு அடிக்கிக் கொண்டு போகலாம். இந்நிலை யுத்தகாலத்தில் மிகைத்திருந்தது. இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற் போதல், தடுப்புக்காவல் தண்டனைகள், சிறைக்குள் படுகொலை, ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர் நாடி, அது சகலராலும் மதிக்கப்பட அது பற்றிய விழிப்புணர்வு தேவை.

Wednesday, December 8, 2010

2 G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடவடிக்கை தீவிரம்!

     2 G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் வீட்டில் ஒரே நேரத்தில் 11 இடங்களில்  டெல்லியிலும், சென்னையிலும் CBI ரைடு நடைபெறுகிறது.  அவரின் முக்கிய கூட்டாளிகள் R.K. சண்டோலியா ( ராசாவின் பர்சனல் செக்ரட்டரி) மற்றும் பெகூரியா ( 2008 - ல் இருந்த டெலிகாம் செக்ரட்டரி)     வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.    
     முன்னாள் டெலிகாம் மெம்பர் SRIDHAR, DOT DY. டைரக்டர் SRI VATSAVA வீட்டிலும் ரெய்டு. 
   DOT டைரக்டர்கள் R.K. குப்தா மற்றும் வினோத் குமார் அதோடு முன்னாள் DOT DDG 
P.K. மிட்டல் வீட்டிலும் ரெய்டு. 
    

சிறந்த தொழிற்சங்கத்தை எவ்வாறு தேர்வு செய்வது?

     01-02-2011 அன்று 5 -வது சங்க அங்கீகாரத்  தேர்தல் நடைபெறவிருக்கிறது.    அறிவிப்பு வெளியாகி விட்டது.  
     15 சங்கங்கள் களத்தில் நிற்கின்றன.   
     விலக விரும்பும் சங்கங்கள் 13-12-2010 க்குள் தங்கள் ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.
 
    எனவே தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான  தேர்தல் வெற்றிக்கு திட்டமிடவேண்டும்.   அது பற்றி நமது ஆய்வைத் துவங்குவோம்! 

     தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும்!    யாரால் நல்லது நடக்கும்?

     இக் கேள்வியை ஒவ்வொரு சங்கமும் உங்களிடம் கேட்டு சில பாராக்களை, பட்டியலை வெளியிடப் போகிறது.    அதை சிலர் படிப்பார்கள், சிலர் படிக்க நினைப்பார்கள், இன்னும் சிலர் படிக்கவே மாட்டார்கள்.    

     நமது நினைவாற்றலுக்கு, பகுத்தறியும் பாங்குக்கு, தேர்வுத் திறமைக்கு இது ஒரு சோதனை.    இச் சோதனையில் நாம் பங்கு பெறுகிறோமோ, இல்லையோ 4-02-2011 அன்று அங்கீகாரம் பெற்ற சங்கம் எது என்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவு. 

     ஒரு நல்ல தொழிற்சங்கத்துக்கு குறைந்த பட்ச 
இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும்?
    
       * தொழிலாளியை, தொழிற்சங்கங்களை ஒன்றுபடுத்துதல்!
       * அங்கம் வகிக்கும் துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருத்தல்!
       * காலத்தே போராடுதல், கருத்தோடு போராடுதல்!
       * சக தொழிற்சங்க உள் விவகாரங்களில் தலையிடாது இருத்தல்!
       * தொழிலாளி பெற்று வரும் உரிமைகள், பலன்களை எந்தச் சங்கம்
          பெற்றுத்  தந்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுதல். 
      * கட்சி சாராது இருத்தல்.  
      * கர்வம் கொள்ளாது இருத்தல்.   சகிப்புத் தன்மை வளர்த்தல். 
      * தெளிவான கொள்கை இருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்கு 
        அதிகபட்சம் முரண்படுபவர்களுடன் கூட்டு சேராதிருக்க வேண்டும்.
     * அரசியலில் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு வென்ற பின் 
        தொகுதிப் பக்கமே தலை காட்டாத தலைவர்களைப் போல் 
        தொழிற்சங்கம் இருக்கக் கூடாது. 
     * வாக்குறுதிகள் அள்ளித் தெளித்த கோலம் போல் இருக்கக் கூடாது.       
        தொழிலாளிக்கு வீணான ஆசைகளைக் கிளப்பி விட்டு 
        நிறைவேறாதபோது அதற்கான காரணத்தை நேர்மையுடன் 
        விளக்க வேண்டும், அல்லது தவறை  ஒப்புக்கொள்ள வேண்டும். 
     * தொழிற்சங்க அரசியலை ஊழியர்களிடம் வளர்க்க வேண்டும்.   
     * விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், நேர்மையோடு விளக்கம் 
         அளிப்பதும் பண்பாக இருக்க வேண்டும். 

     மேற்கண்ட குணாம்சத்தோடு இருப்பவைதான் ஒரு நல்ல தொழிற்சங்கத்துக்கு அடையாளம் என்றும், நல்ல தொழிற்சங்கம் எது என்று அடையாளம் காட்டுவதற்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான்  தொழிற்சங்க தேர்தல் என்றும் கருதுகிறேன். 

     கிடைத்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்துவோம்.  நாமெல்லாம் விபரமறிந்தவர்கள் மட்டுமல்ல, உழைத்துக் களைத்து முன்னேறியவர்கள்.   நமக்காக தியாகம் செய்த, செய்யும் தலைவர்களைப் பெற்றவர்கள்.   விழிப்புடன் இருப்போம்!
கொஞ்சம் அயர்ந்தாலும் மீண்டும் சைத்தானின் ஆட்சிதான்!   


     தொழிற்சங்கம், துறை  அன்று இருந்த நிலைமைக்கும், இன்று இருக்கும் நிலைமைக்கும் வித்தியாசம் புரிகிறதா? 
     புரிந்தவர்கள் -  புரிந்தும் புரியாமல் இருப்பவர்களை சந்தித்து விளக்கினால் வெற்றி நிச்சயம்.

உங்களின் அழுத்தம் திருத்தமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்!


தோழமையுடன், 
எஸ். சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர், 
பட்டுக்கோட்டை.

நிகழ்வுகள்:

10-12-2010
 தஞ்சையில் மாவட்டத் தலைவர் தோழர் பிரின்ஸ் தலைமையில் மாவட்டச் செயற்குழு.
  
17,18,19-12-2010 
       சிலிகுரியில் விரிவடைந்த செயற்குழு.

28-12-2010                
சேலத்தில் நமது மாநிலத் தலைவர் 
தோழர்  தமிழ்மணிக்கு பாராட்டு விழா 
மற்றும் 
தேர்தல் பிரசார துவக்க விழா. 

போராட்டம் தரும் பாடம்!

     2    நாட்கள்      நடத்திய   போராட்டம்   பெரிய      அளவுக்கு வெற்றியைத் தேடித்    தரவில்லை என்றாலும்     ஊழியர் நலனில்,    துறை நலனில் முன்னேற்றத்தை    நோக்கிச் சென்றுள்ளது. 
       ஆனாலும் தலைவர்கள் தங்களது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் 3 நாட்கள் போராட்டத்தை அறிவித்திருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது.    token strike என்று சொன்னால் 1 நாள் போராட்டமாக இருக்க வேண்டும்.  இல்லையெனில் காலவரையற்ற போராட்டமாக இருக்க வேண்டும்.  எப்படியோ  உறுப்பினர் மனநிலை    தேசம்    முழுதும்    எப்படி இருக்கிறது என்பதை அறிந்து    கொள்ளும் வாய்ப்பாக வேண்டுமானால் கருதலாம். 
     மாநிலச் செயலர்    பட்டாபி   அவர்கள் சம்பள   வெட்டு   வராத நிலைமைக்கு முயன்று வருகிறார்.  பொதுச் செயலருக்கும், கன்வீனர் நம்பூதிரிக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
    ஆனால் இழக்காமல் எதையும் பெற முடியாது என்ற நிலையை எல்லோருமே ( தலைவர்கள் உள்பட ) எடுத்தாக வேண்டும்.   
     
     JAC கன்வீனர் தோழர் VAN. நம்பூதிரி.   முன்பு  போனஸ் போரில்       கோட்டை       விட்டதைப்     போல்     இதிலும் பின்வாங்கல்தான்.  என்ன செய்வது! போராட்ட பாரம்பரியம், வாதாடும் திறமை இல்லாதவர்களிடம் அங்கீகாரத்தை கொடுத்துவிட்டோம்! 
     அங்கீகாரத்திற்கு  ஆள் பிடிப்பதில் இருக்கும் அக்கறை, வேகம் தெருவில் இறக்கி விடப்பட்ட ஊழியர்கள் மீதும் வந்திருக்க வேண்டும்.  வராமல் இருப்பது அனைவரின் துரதிர்ஷ்டம். இனி, பதவிக்கு, சந்தாத் தொகைக்கு ஆசைப்படுபவர்கள் குறைந்தபட்சம் போராட்டம் என்று வரும்போது தலைமை தாங்காமலாவது இருக்கட்டும். அல்லது அவர்கள் தலைமையில் நாமாவது போராடாமல் இருப்போம்! 

     தேர்தல்   பிரச்சாரத்திற்காக  மட்டும் இதை எழுதவில்லை.  உண்மை என்றும் கருதுகிறேன்.  மாற்றுக் கருத்து இருந்தால் தயவு செய்து மறுதலியுங்கள்!

     மாற்றம் ஒன்றுதான் இப்போதைக்கு நமக்கு மாமருந்து.  மீண்டும் சந்திப்போம்.

தோழமையுடன்,
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.     


 

Monday, December 6, 2010

குடந்தைத் தந்தைக்கு குதூகல விழா!

    விழாவினைப் பார்த்து ரசித்து வந்த பின் இந்தத் தலைப்புதான் தோன்றியது.  ஆம் குடந்தையின் இளம் சிங்கங்கள் எல்லா வகையிலும் திறம்பட நடத்திக் காட்டிய விழா என்றால் மிகையாகாது. 
     தமது பணியினை மிக நிறைவாக, மிக, மிக நிறைவாக செய்து (முடித்து) ஓய்வு பெறுகிறார் என்பதை விழா  மெய்ப்பித்தது. 
     அனைத்துக் கட்சி நண்பர்கள், பல்வேறு இயக்கத் தோழர்கள் உவகையோடு பங்கேற்றுப் பேசினார்கள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்  நல்லக்கண்ணு,  AITUC பொது செயலாளர் S.S. தியாகராஜன், தலைவர் A.M. கோபு ஆகியோர் சிறப்புக்களைச் சொல்லி வாழ்த்தினார்கள். நமது தலைவர்கள் ஏறக்குறைய அனைவருமே பங்கேற்றார்கள். RK, பட்டாபி, தமிழ்மணி, N. வீரபாண்டியன்,   G. ஜெயராமன், S.S. கோபாலகிருஷ்ணன், K.S.K, குடந்தை மாலி ஆகியோரின் பேச்சுக்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.   
     தோழர் ஜெயபால் அவர்கள்  மகளின் பேச்சு கருத்து மிகுந்த பேச்சு. ( மீன் குஞ்சுக்கு  நீந்தக்  கற்றுக் கொடுக்கவா  வேண்டும்).   R.K அவர்கள் குறைந்த நேரத்தில் நிறைவான  உரையினைத் தந்தார்.  அறக்கட்டளைப் பணியினைத் துவக்கிட ஜெயபால் அவர்களை கேட்டுக் கொண்டு  ரூபாய் 1001 கொடுத்து துவக்கி வைத்தார்.   ரூபாய் ஒரு லட்சத்திற்கு தானே பொறுப்பேற்பதாக உறுதி அளித்தார்.
     அற்புதமான வரவேற்பு, உபசரிப்பு, விருந்து. இன்னும் எவ்வளவோ.

     தலைவரின் ஓய்வுக் காலம் அவருக்கு மேலும் மன மகிழ்ச்சியை, நல்ல உடல் நலத்தை பெற்று சிறப்புடன் வாழ நமது தஞ்சை வலைத  தளமும்  வாழ்த்தி மகிழ்கிறது. 

தோழமையுடன்,
K. நடராஜன், S. சிவசிதம்பரம் 
தமிழ் மாநில சங்கப்  பொறுப்பாளர்கள். Saturday, December 4, 2010

Friday, December 3, 2010

ஒன்றுபட்ட போராட்டம் வெற்றியை நோக்கி! வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

     இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் நேற்று இரவு 09:30 மணிக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.  எனவே போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
     நமது தஞ்சை மாவட்டத்தில் 60 % ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.   தலைமைக்கு 30 % தான் என்று தவறான தகவலை எவரோ கொடுத்துள்ளனர்.  நேற்று நிர்வாகத்திடம் கேட்டு உண்மை அறியப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

     போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

     நிர்வாகத்தோடு சளைக்காது பேசி ஒப்பந்தம் கண்ட அனைத்து சம்மேளனத் தலைவர்களே!  உங்களுக்கு எமது  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     போராட்ட காலம் துவங்கி விட்டது.   தொடர்ந்து நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,  துறையை, துறைத் தொழிலாளியை காவு கொடுக்க எண்ணும்  நிர்வாகத்துக்கு சம்மட்டி அடியாக மாற வேண்டும்!!

     நன்றி தோழர்களே!!    ஒப்பந்த விபரங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம்!

தோழமையுடன்,
S . சிவசிதம்பரம் -  K . நடராஜன்.
மாநிலச் சங்க நிர்வாகிகள் - தஞ்சை.

 

Thursday, December 2, 2010

மூன்றாம் நாள் வேலை நிறுத்தம் தொடர்கிறது!

      இன்று காலை DOT உடன் நடந்த பேச்சு வார்த்தையில் 78.2  DA இணைப்பு என்று உடன்பாடு கண்டபோதிலும் அது BSNL போர்டிலிருந்து அப்ரூவல் பெற்றாக வேண்டும் என்று கூறியதை நாம் ஏற்கவில்லை.    மீண்டும் இன்று மாலை CMD உடன் பேச்சு வார்த்தை நடந்தது.   அதிலும் மீண்டும் அதையே நிர்வாகம் வலியுறுத்தியது.   ( ஏற்கனவே BSNL BOARD நம்மிடம் BSNL ன் நிதியாதாரம் மேம்பட்ட பிறகு பரிசீலிக்கலாம் என்று  கூறியிருக்கிறது.  எனவே மீண்டும் போர்டு அப்ரூவலுக்கு வைப்பது தேவையில்லாதது ).   இந்த இணைப்பு BSNL BOARD APPROVAL க்கு பிறகுதான் முடியும் என்று கூறுகிறது.  முடியும் என்பதை மினிட்சில் (ஒப்பந்தத்தில்) குறிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்துகிறோம்.

     இதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததால் நாம் போராட்டத்தை தொடர்கிறோம்.


     தேசம் முழுதும் திரண்டு நின்று  இரண்டு நாளாய் நடத்திய போராட்டம் மூன்றாம் நாளில் முடிவுக்கு வரும்!       இன்றேல்  வரவைப்போம்! 

     போராட்டக் களத்தில் முனை முகத்து நிற்கும் தோழர்களே உங்களுக்கு எமது புரட்சிகர  வாழ்த்துக்கள். 

தோழமையுடன், 
S . சிவசிதம்பரம், 
மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை. 

Wednesday, December 1, 2010

போராட்டம் தொடர்கிறது!

ஒற்றுமையைக் கட்டும் நேரமிது
      முதல் நாள் போராட்டத்தில் முனைப்போடு பங்கேற்ற தோழர்களே!    உங்களுக்கு நமது புரட்சிகர வாழ்த்துக்கள்!

    கூட்டுப்  போராட்டக்  குழுவின் சார்பில் வைத்த கோரிக்கைகள் மீது இன்று RLC மற்றும் CMD உடன் விவாதிக்கப்பட்டது.   அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.  போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர நமக்கும்    வேறு வழியில்லை.

   நாளைய வேலை நிறுத்தத்தில் இன்று பங்கேற்காதவர்களையும்  ஈடுபடுத்துவோம். .   அவர்களிடம் எதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லுவோம்.
   
         போராட்டமில்லாமல்  யாராட்டமும் செல்லாது என்பதை மீண்டும் உணர்த்திடும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது!   அதிகாரிகள் முதல் அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் போராட்டமல்லவா!   அதோடு,   இது  வாழ்வாதாரத்துக்கான போராட்டம் என்பதையும்  உணரச் செய்துவிட்டால் இன்க்ரிமென்ட் டேட், சம்பள வெட்டு என்பதெல்லாம்  பெரிதாகத் தோன்றாது.  

      வெற்றியைப்  பார்த்தே பழகிவிட்டதால்  இப்பொழுதைய பின்னடைவுகள் சற்று  துவளத்தான் செய்யும்!  
     ஆனால், வெற்றியைக் கண்டு துள்ளுவதும்,      தோல்வியைக் கண்டு துவளுவதும் போராளிக்கு அழகல்லவே!.  ஒன்றுபடும் வாய்ப்பு எப்பொழுது கிடைத்தாலும் நழுவ விடாதவன்தான்  நமது தோழனும் இயக்கமும்!  விடலாமா தோழர்களே!

     தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரனா!  
      உலகத்துச் செல்வமெல்லாம்
      உருவாக்கும் பிதாமகன் அல்லவா! 
     அவன் ஏழையல்ல! 
     அவனுக்கு உரிமை உண்டு! உணர்வு உண்டு!!

என்று சொன்ன தாரபாதாவை நெஞ்சில் நிறுத்துவோம்.  
     உரிமையை நிலை நாட்டும் இப் போரை உணர்வோடு நடத்துவோம்.
                      வெற்றி நிச்சயம்!

                                      வாழ்த்துகளுடன், S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 


    

Tuesday, November 30, 2010

திட்டமிட்டபடி போராட்டத்தைத் துவக்கிடுவீர்!

     இன்று 30-11-2010 மாலை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் யாதொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.   எனவே வேலை நிறுத்தத்தை  திட்டமிட்டபடி நடத்திடுவோம்.  டிசம்பர்  1, 2, 3 மூன்று நாட்களும்  போராட்டத்தை நாம் எழுச்சியோடு நடத்தினால் பழிவாங்கல் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. 

     நமது முழுமையான போர்க்குணம்தான் நிர்வாகத்தை புரிய வைக்கும். 
அன்புடன், S . சிவசிதம்பரம், மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை.

ஒய்வு பெரும் தலைவர்களை வாழ்த்துகிறோம்!

     நமது மாநிலத் தலைவர் தோழர் S. தமிழ்மணி அவர்களும், மாநிலத் துணைத் தலைவர்  தோழர்  குடந்தை  ஜெயபால்  அவர்களும்  இன்று  ( 30-11-2010 ) அலுவலகப் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்கள்.   

     அலுவலகத்திலும், தொழிற்சங்கத்திலும்  நிறைவான பணியாற்றி ஒய்வு பெரும் தலைவர்களே உங்களை NFTE தஞ்சை மாவட்டச் சங்கம் வாழ்த்திப் பெருமை கொள்கிறது. 
 
     நெருக்கடியான காலகட்டங்களில் நம்மோடு இயைந்து வாழ்ந்தவர்கள்.   உழைத்துக் களைத்தவர்கள்.   வியக்கத்தக்க முன்னேற்றங்களை நமக்குப் பெற்றுத் தந்தவர்கள்.  பணி நிறைவுக்  காலம் அவர்களுக்கு ஓய்வைத் தரட்டும்.     

     நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அளவின்றி பெற்று சிறப்புடன்  வாழ  வாழ்த்துகிறோம்.  

                           அன்புடன், S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர், தஞ்சை. 

Sunday, November 28, 2010

செயற்குழுவில் செயலரின் உரையில் தெறித்தவை!

     பிப்ரவரி 1 ஆம் தேதி  தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்.   
     இதில் NFTE ஏன் ஜெயிக்க வேண்டும்?   
     இது ஒரு தேடல்.  தேடல் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
     தமிழ்நாட்டில் 98% வாக்குகள் கிடைத்திருக்கிறது.    ஒவ்வொரு தேர்தலிலும் 17000 வாக்காளர்கள் குறைகின்றனர்.     
நம்மை,  பொதுத்துறைக்கான விறுவிறுப்பும், அழுக்கும் இறுக்குகிறது!   15 சங்கங்கள் களத்தில்!    ரயிலின் எஞ்சின் ஆக யார் இருப்பது?   டிரைவர் ஆக யார் இருப்பது?  இணைக்கப்பட்டிருக்கும் வேகன் ஆக யார் தொடர்வது?   Post Poll Alliance ல் குப்தா அதைச் செய்தார். 
     BSNLEU தொடர்ந்து இருந்தால் தொழிற்சங்கங்களின் மீதே  அவ நம்பிக்கை உண்டாகும். 
     தொழிலாளிக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டாமா?  டிசம்பருக்குள் NEPP Arrears வந்துவிடும்.   இதனால் போனஸ் வேதனையைத் தணித்துக் கொள்வார்கள்.
     Anamoly என்பதை அனைத்து கேடருக்கும் பொதுவாக்கி அலவன்ஸ் ஆக மாற்றியது EU.
     78.2 % DA  என்பதுக்குப்  பதில் 68.8 % வாங்கியதால் மாதா மாதம் ரூபாய் 1000 இழக்கிறோமே யாரால் தோழர்களே? 
     குருப் இன்சுரன்ஸ் திட்டத்தை மாற்றியமைத்ததால் ஊழியருக்கு   எவ்வளவு நஷ்டம்?
     Leave Encashment  தொகை ரூபாய் 4385  கோடியை Outsourcing க்கு விட்டது EU என்பதை எத்தனை பேர் நினைவில் வைத்துள்ளனர்?  இதனால் LIC க்கு வியாபாரம் கூடி விட்டதுதான் மிச்சம்.  

     BSNL நஷ்டமடையக் கூடிய துறையா!  அது செயற்கையாக  உருவாக்கப்பட்டிருக்கிறது! 
     75000 கோடி வரவு செலவு செய்யும் ரயில்வேக்கு 7000 கோடி தேய்மானம் என்று கணக்கு போடுகிறார்கள்.   ஆனால் 30000 கோடி வரவு செலவு செய்யும் BSNL க்கு 9000 கோடி தேய்மானம் என்று கணக்கு காண்பிக்கப்படுகிறது.     
     நிர்வாகச் செலவை விட ஊழியர்க்கான செலவு கூடுதல் என்றும்  சொல்லப்படுகிறது. 
     Rural Telephone Service ஆல் ஏற்படும் நஷ்டத்திற்கு ஊழியரா காரணம்?   

     PENSION க் காத்திடவும், துறையின் நிதியாதாரத்தைக் காத்திடவும், ஊழியர் நலனைக் காத்திடவும்  NFTE  ஜெயிக்க வேண்டும்?   

     ( 24-11-2010 அன்று ஈரோட்டில் நடைபெற்ற தமிழ் மாநில செயற்குழுவில் மாநிலச் செயலர் பட்டாபி ஆற்றிய உரையிலிருந்து சில).
                                தொகுப்பு: S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
    
    

மாலி துவக்கி வைத்த மாநிலச் செயற்குழு!

     ( 24-11-2010  அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர் மாலி ஆற்றிய துவக்க உரையின்  ஒரு பகுதி. )

ஒற்றுமையும், போர்க்குணமும் மிக்க நமது NFPTE க்கு இன்று பிறந்த நாள்.  அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  கிளைச் சங்கங்கள்  ஒவ்வொரு தொழிலாளியையும் சந்திக்க வேண்டும்.   TTA க்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும்.  அவர்கள்தான் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
நமது மாநிலச் சங்கக் கட்டிடம் ' ஜெகன் நினைவகம் ' பட்டாபி காலத்தில் திறக்கப்படவுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.   எமது ஈரோடு பகுதி தந்தை பெரியார் பிறந்த மண்.   மத, இன, சாதீய உணர்வு மேலோங்காத பகுதி.  இங்குள்ள கருங்கல்பாளையத்தில்தான்  மகா கவியின் கடைசிச் சொற்பொழிவு நடைபெற்றது.  முதல் நாள் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில்.   இரண்டாம் நாள் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில்.   அதைப்போல் நமது எதிர்காலம், துறையின் எதிர்காலம் குறித்த திட்டமிடலுக்காக கூடியிருக்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன்.  இந்த மண்ணில் நடைபெறும் மாநிலச் செயற்குழு இம் முறை மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.  ஏனெனில் ஏற்கெனவே தேர்தலில் வென்று வெற்றி விழாவினை இங்குதான் நடத்தியிருக்கிறோம். 
     அங்கீகாரத்தை வென்றெடுக்க, வாக்குகளைச் சேகரிக்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருகிறீர்கள்?    மாநிலச் சங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?  வாருங்கள்! எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவோம்!  
     ஒவ்வொரு      SC, ST தோழர்களையும்  சந்தித்து அவர்களுக்கு சமீபத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துச் சொல்லி மாற்றத்துக்கு உதவுங்கள் என்று கேட்க வேண்டும். 
     முயல் ஜெயித்துவிடும்.  சில நேரங்களில் ஆமையும் ஜெயித்து விடும்.  ஆனால் முயலாமை ஒருபோதும் ஜெயிக்காது.  
     நம்பிக்கையும், கூட்டு  முயற்சியும்தான் வெற்றியைத்  தரும் என்று கூடி உங்களை வாழ்த்தி முடிக்கிறேன்.  
                                                                           தொகுப்பு: S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

Tuesday, November 23, 2010

ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24-11-1954


சம்மேளன  தினம் 
        NFPTE சம்மேளனம் நவம்பர் 24, 1954 அன்று  கூடிய   பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் Fedaral Council தொடர்ந்தது.   கடுமையான விவாதம்.   தோழர் K. ராமமூர்த்தி - தாதாகோஷ் போட்டி. 45  வாக்குகள் வித்தியாசத்தில் தாதாகோஷ் வெற்றி பெற்றார்.  S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி   தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  
     சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய செயலர்.   
     தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது.  அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.    

     9 சங்கங்களை ஒன்றிணைத்து சம்மேளனத்தை உருவாக்கி மிகப் பெரிய சக்தியாக விளங்கியது NFPTE.   அடைந்த  சாதனைகளை அளவிட முடியாது. 
   அப்பேர்ப்பட்ட சங்கத்தை உடைத்து வெளியேறிய சங்கம் BSNLEU இன்று கையறு நிலையில் உள்ளது.  
     தொலைத் தொடர்புத் துறையில் இது மாதிரி ஒரு சங்கம் அங்கீகாரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் அலைக்கழித்தது போதும்.  
     இயலாதவர்கள் வெளியேற வேண்டும்.  இன்றேல் வெளியேற்றப்பட வேண்டும். 
  சம்மேளன தினத்தை கொடியேற்றி கொண்டாடுங்கள்.   NFPTE ன் தியாகத்தை,  செயல்திறத்தை எடுத்துச் சொல்லுங்கள். 
                            S. சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.

Saturday, November 20, 2010

தமிழ் மாநில செயற்குழு

     ஈரோட்டில் நவம்பர் 24 அன்று நமது தமிழ் மாநில செயற்குழு கூடுகிறது.
                                    பொருளாய்வு
ஜலந்தர் முடிவுகள்    -   தொழிற்சங்க தேர்தல்   - 
கோர் கமிட்டி வழிகாட்டல்   -   கட்டிட நிதி -- திறப்பு விழா
தலைவர்கள் பணி ஒய்வு விழா  -  தல மட்ட நிலைமைகள்
இதர ஊழியர் பிரச்சினைகள்

தோழர் தமிழ்மணி தலைமை தாங்குகிறார்
அகில இந்திய பொறுப்பாளர்கள் G. ஜெயராமன் மற்றும்
S.S. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை
ஆற்றுகிறார்கள்.
மாநிலச் செயலர் பட்டாபி அவர்கள் தொகுத்து செயலாக்கம் தருகிறார். 
Friday, November 19, 2010

Monday, November 15, 2010

மாவட்டத்தின் தலைமை இன்று மறைந்தது!


     தஞ்சை மாவட்டத்தின் தன்னேரில்லா தலைவனாக மிளிர்ந்த நமது மாவட்டச் செயலர்  தோழர் கேசவன் இன்று 15-11-2010 மாலை 6 மணிக்கு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.   அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறோம்.   புரியவில்லை. நம்மாலேயே தாங்க முடியவில்லையே, அவர் குடும்பம் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா.  யாராலும் ஈடு செய்ய முடியா இழப்பு.  

     மாவட்டச் செயலராய் கடந்த   19-06-2010 ஆம் தேதிதான் பொறுப்பேற்றார்.    5 மாதங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை.    பொறுப்பேற்ற  இந்த குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.  தீர்க்கப்பெற்ற பிரச்சினைகள் ஏராளம். கட்டிய இயக்கங்கள் ஏராளம்.  பொது மேலாளரை சந்திக்காத நாளில்லை எனலாம்.   இந்த இணையதளம் கூறும் அவரின் செயலாற்றலை. 

     தோழனே ஏன் பிரிந்தாய்  எங்களை விட்டு.   எங்களுக்கு என்ன செய்தியை விட்டுச் செல்கிறாய்!  எங்களின் ஊனோடும், உயிரோடும் கலந்த உன்னைப் பிரிந்து எப்படி வாழப் போகிறோம்? 

     எப்படியோ என் தலைவன் இறந்த செய்தியைச் சொல்லிவிட்டேன்!

                                                 சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.
     

Friday, November 12, 2010

R.K. கோஹ்லி, அகில இந்திய அமைப்பு செயலர் விலகல்.

     நமது அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் R.K. கோஹ்லி, NFTE -ல் இருந்து விலகி தனியாக ஒரு சங்கத்தைத் துவங்கி BSNLEU வுடன் கூட்டு வைத்துள்ளார்.

     இந் நடவடிக்கையைத் தொடர்ந்து பொதுச் செயலர் G. சிங், அவர்கள் அவரை சங்கத்திலிருந்து நீக்கி விட்டார். 

     இது மாதிரி சில வெற்றுப் புரட்சிகள் தோன்றத்தான் செய்யும்.  இதைக் கொண்டு சாதிக்கத் தெரியாதவர்கள், தோல்வியைத் தோழனுக்கு விட்டுச் சென்றவர்கள் வேண்டுமானால் மகிழ்ந்து கொள்ளலாம்.    நாம் அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை.  துறைக்காக, தொழிலாளிக்காக கடமையாற்றுவதில் கவனமாய் இருப்போம். 
     
இதுவும் கடந்து போகும். 

- S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை. 

Thursday, November 11, 2010

தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு....

அதிகாரப் பூர்வ சங்க அங்கீகாரத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   15  தொழிற்சங்கங்கள் களத்தில் உள்ளது.   
     * 15-11-2010 க்குள் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அனைத்து மட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 
     * 22-11-2010 க்குள் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் அளித்திட வேண்டும்.
     * 29-11-2010 க்குள் திருத்தப்பட்ட  வாக்காளர் பட்டியல் நிர்வாகத்தால்    அறிவிக்கப்படும். 
     * 06-12-2010 க்குள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்ட  பட்டியலில் மறுப்பு இருந்தால் தெரிவித்திட வேண்டும். 
     * 13-12-2010 க்குள் அதிகாரப் பூர்வ இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

எந்த  முறையில் தேர்தல் வரினும் எதிர்கொள்வோம். 
                         அன்புடன், 
G. கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சாவூர். 


    

Monday, November 8, 2010

BSNLEU படுத்தும் பாடு......

      S.சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
     BSNLEU சங்கம்  நமது துறையை, அதில் பணிபுரியும் ஊழியர்களை அங்கீகாரம் என்ற ஒரு கருவியை வைத்துக்கொண்டு  படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.   அதை நாம் நல்வழிப்படுத்த முடியுமா, அக்கறைப்படுத்தவியலுமா அல்லது குறைந்த பட்ச ஒற்றுமையையாவது   கட்ட முடியுமா  என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது எவ்வளவு சிரமம் என்பது அதனுடைய சமீபகால நடவடிக்கைகளிலிருந்து  நமக்குப் புரிகிறது. ஆனாலும்  அதை   சிரமம் என்று நாம்  ஒதுக்கிவிட  முடியாது.   
     நம்பிக்கையோடு சென்ற பல தோழர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை சிதைந்து போயிருந்த போதிலும் கூட, நம்முடன் மீண்டும் அவர்கள் இணைவதற்கு எது தடையாகவிருக்கிறது என்பதை யோசிக்கும்போது BSNLEU சங்கம் செய்திருக்கும் காரியங்களில் தவறானவையாக உள்ளவை என்று நான் கருதுவதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  அது சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்கள் பொறுப்பு.     
1. ஆண்டு ஒன்றுக்கு 10000 கோடிக்கு மேலே லாபம் ஈட்டிய நமது துறை இன்றைக்கு லாபம் அறவே இல்லை என்ற நிலை மாறி நஷ்டம் என்றாகிவிட்டது. 
2. பல ஆண்டுகள் கையிருப்பில் வங்கியில் வைத்திருந்த தொகை ருபாய் 40000 கோடி இன்றைக்கு கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து முடிவில் இல்லை என்றாகிவிட்டது.  
3.  அரசாங்கத்தின் தனியார் மோகம் காரணமாக தனியார் செல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் தள்ளுபடி ஒரு புறம்.   BSNL  -க்கு கூடுதல் வருவாய் வந்து கொண்டிருந்த ADC கட்டணம் போன்றவற்றை அரசே ரத்து செய்தது மறுபுறம். 
4.நாடு முழுதும் சம்பள மாற்றம் நடந்து முடிந்து, நமது பகுதியில் அதிகாரிகளும் பெற்று இறுதியில் நாம் கொடுத்ததைப் பெற்றுக்கொண்ட நிலை வந்ததற்கும், கோரிப் பெறாததற்கும் யார் காரணம்.?
5. அதிகாரிகள் பெற்ற மாதிரி நான்கு கட்ட பதவி உயர்வினை  ஏன் நம்மால் பெற முடியவில்லை? 
6. லட்ச ரூபாய்க்கு மேலே செலவானாலும் அத் தொகையினை MRS திட்டம் மூலம் வெகு சுலபமாகப் பெற்று வந்தோமே அது இப்போது பெற முடியாமல் தவிப்பது ஏன்? 
7. 15 நாள் சம்பளத்தை போனசாக பெறத் துவங்கி 75 நாள் சம்பளம் வரை முன்னேறிச் சென்றோமே,  அது இன்றைக்கு எட்டாக்கனியாய்  மாறியிருப்பது ஏன்? 
8. 2G ஏல முறைகேட்டில்  லட்சம் கோடிக்கு மேல் ஊழல்  நடைபெற்றிருப்பது தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே ஏன்? BSNL  -ன் நிதிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் 3G ஏலத் தொகையை 18500 கோடிக்கு மேல் நிர்வாகம் BSNL மீது  சுமத்தியதே அதையும்  ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை?  
9.    BSNLEU சங்கம் அன்று தொடங்கி இன்று வரை ஒரே காரியத்தில் மட்டுமே கவனமாக உள்ளது. அது உறுப்பினர் சேர்க்கை என்ற ஒற்றை வேலைதான். 
     இதற்காக அது என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறது.  
  1. சங்கங்களை ஒன்றுபடுத்த மறுப்பது.
  2. சங்கங்களுடன் இணைந்து இயக்கம் கட்ட                மறுப்பது.     
  3. மேலாண்மைத் தன்மையில் மிதப்பது. 
  4. உறுப்பினர் என்ன தவறு செய்தாலும் அதை  
      மன்னிப்பது.  
  5. சட்ட நுணுக்கங்களை கற்றுத் தெளிவது 
      இல்லை.    
  6. வாதாடிப் போராடும் வல்லமையை வளர்த்துக்        கொள்வதில்லை.  
  7. குறிப்பாக ஆர்ப்பாட்ட அறிவிப்பைத் தவிர   
      வேறு போராட்டங்களை அறிவிப்பதில்லை. 
  8. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப  
      தம்மை தகவமைத்துக் கொள்வதுமில்லை. 

     இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.
  ஊழியர்களை மடை மாற்றம் 
செய்தாக வேண்டும்.  
புதிதாய்ச் சிந்திக்க வைக்க வேண்டும். 

சிந்தித்ததைச் சொல்வது  மட்டுமல்ல கல்வி 
சிந்திக்க வைப்பதுதான் சிறந்த கல்வி.
       

நீயா?  நானா?     விரிசல் வளர்க்கும்.
நீயும் - நானும்    பிரியம் வளர்க்கும்.


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR