( 24-11-2010 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் தோழர் மாலி ஆற்றிய துவக்க உரையின் ஒரு பகுதி. )
ஒற்றுமையும், போர்க்குணமும் மிக்க நமது NFPTE க்கு இன்று பிறந்த நாள். அனைவருக்கும் சம்மேளன தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிளைச் சங்கங்கள் ஒவ்வொரு தொழிலாளியையும் சந்திக்க வேண்டும். TTA க்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும். அவர்கள்தான் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்கள்.
நமது மாநிலச் சங்கக் கட்டிடம் ' ஜெகன் நினைவகம் ' பட்டாபி காலத்தில் திறக்கப்படவுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. எமது ஈரோடு பகுதி தந்தை பெரியார் பிறந்த மண். மத, இன, சாதீய உணர்வு மேலோங்காத பகுதி. இங்குள்ள கருங்கல்பாளையத்தில்தான் மகா கவியின் கடைசிச் சொற்பொழிவு நடைபெற்றது. முதல் நாள் ' மனிதனுக்கு மரணமில்லை ' என்ற தலைப்பில். இரண்டாம் நாள் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில். அதைப்போல் நமது எதிர்காலம், துறையின் எதிர்காலம் குறித்த திட்டமிடலுக்காக கூடியிருக்கும் உங்களை நான் வாழ்த்துகிறேன். இந்த மண்ணில் நடைபெறும் மாநிலச் செயற்குழு இம் முறை மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஏனெனில் ஏற்கெனவே தேர்தலில் வென்று வெற்றி விழாவினை இங்குதான் நடத்தியிருக்கிறோம்.
அங்கீகாரத்தை வென்றெடுக்க, வாக்குகளைச் சேகரிக்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருகிறீர்கள்? மாநிலச் சங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? வாருங்கள்! எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவோம்!
ஒவ்வொரு SC, ST தோழர்களையும் சந்தித்து அவர்களுக்கு சமீபத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துச் சொல்லி மாற்றத்துக்கு உதவுங்கள் என்று கேட்க வேண்டும்.
ஒவ்வொரு SC, ST தோழர்களையும் சந்தித்து அவர்களுக்கு சமீபத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துச் சொல்லி மாற்றத்துக்கு உதவுங்கள் என்று கேட்க வேண்டும்.
முயல் ஜெயித்துவிடும். சில நேரங்களில் ஆமையும் ஜெயித்து விடும். ஆனால் முயலாமை ஒருபோதும் ஜெயிக்காது.
நம்பிக்கையும், கூட்டு முயற்சியும்தான் வெற்றியைத் தரும் என்று கூடி உங்களை வாழ்த்தி முடிக்கிறேன்.
தொகுப்பு: S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment