தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, November 5, 2010

நெஞ்சுரத்தை அளித்த தீபாவளி!

போனஸ் என்ற ஒன்று  - இன்று 
இல்லை என்று இருந்த துறைக்கு 

இருக்குடா உனக்கு போனஸ் 
என்று சொல்லி வாங்கித் தந்தான்.


துவங்கும்போது குறைவுதான் - அது
தூண்டத் தூண்ட வளரும் என்றான். 

என்னத்தைக் கிழிச்சீங்க! - ஏறித் 
தாவிப் பாய வேணாம்!! - சீறினான் ஓர்  தலைவன்.

பேரியக்கப் பங்காளியே   - சிறுபிள்ளைத்தனம்   கூடாது.  
நிதானமாய் இருப்பாயப்பா! நிறைய உனக்குப் பெற்றுத்  தருவேன்!


யாரைப்பார்த்து என்ன வார்த்தை! உலகுக்கே தத்துவத்தை 
உணர்த்தும் வல்லமை படைத்தவர்கள்  நாங்கள். 

நாங்கள் உம்மை நகற்றி வைத்து -நகர்வலம் 
வரப்போகின்றோம் - நாளும் குறித்தாயிற்று என்றான். 

கற்றுத் தெளிவது நல்லது தோழா!  - சிலநேரம் 
அனுபவத் தெளிவு  அழிவையும் கொடுக்கும் !

எங்களின் வேகத்தின் முன் நில்லாது உங்கள் விவேகம் - சற்றே 
ஒதுங்கி நில்லும், இன்றேல் சாமர்த்தியத்தால் உமை வெல்வோம். 

காலமும்  கடந்து, கையில் இருந்ததும்  கரைந்து,
வளர்ந்த நிறுவனம் இன்று விழி பிதுங்கி!


அன்று வளர்ந்ததும், இன்று வீழ்ந்ததும்  யாராலே?
தாத்தன் கேட்கிறான்? பதில் சொல்ல  முடியுமா!

அவ்வளவு சீக்கிரம் அடங்குபவர்களா இவர்கள்!
காவு கொடுக்க இன்னும் எவ்வளவோ இருக்கையில்!  


பெங்களூரில் 207 இணைப்பு, வெள்ளூரில் FNTO கலைப்பு
என்ற பழைய உத்திகள் இன்று செல்லாது. 

உமது புரட்சி வேஷம் அம்பலமாகிறது..  -  துறையைக் 
கொள்ளையடித்தவரோடு  தொடர்ந்து

எந்த வரலாற்றிலும் புரட்சிக்காரன் பூச்சான்டியோடு 
சேர்ந்து புரட்சி செய்ததாய் வரலாறில்லை !


அங்கீகார போதை அவர்களை அலைக்கழிக்கிறது! 
புதிய பயிற்சியை கையிலெடுப்போம். 


புதிய சகாப்தம் படைப்போம். 

வரும் ஆண்டு வளமாய் மாறும் !   போனசில் மட்டுமல்ல!!!


யாவற்றிலும் முன்னேறுவோம் தோழர்களே!

தீபாவளியை ஜாலியாய்  கொண்டாடுங்க! நாளை சந்திப்போம்!
                                         அன்புடன், S . சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.

2 comments:

  1. வெள்ளு்ா ல் FNTO கலைப்பு என்பதற்கு கடலுர் இணைய தளத்தில் தக்க பதில் கொடுத்துள்ளேன் என்று தகவல் உங்களுக்கு கூறுகிறேன். ஜெயராமன் FNTO Cuddalore 94432 89765.

    ReplyDelete
  2. உங்கள் கோபம் ஊர் கோபமாக மாறட்டும் அன்பன் பட்டாபி

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR