தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Monday, November 8, 2010

BSNLEU படுத்தும் பாடு......

      S.சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
     BSNLEU சங்கம்  நமது துறையை, அதில் பணிபுரியும் ஊழியர்களை அங்கீகாரம் என்ற ஒரு கருவியை வைத்துக்கொண்டு  படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.   அதை நாம் நல்வழிப்படுத்த முடியுமா, அக்கறைப்படுத்தவியலுமா அல்லது குறைந்த பட்ச ஒற்றுமையையாவது   கட்ட முடியுமா  என்று சிந்தித்துப் பார்க்கும்போது, அது எவ்வளவு சிரமம் என்பது அதனுடைய சமீபகால நடவடிக்கைகளிலிருந்து  நமக்குப் புரிகிறது. ஆனாலும்  அதை   சிரமம் என்று நாம்  ஒதுக்கிவிட  முடியாது.   
     நம்பிக்கையோடு சென்ற பல தோழர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கை சிதைந்து போயிருந்த போதிலும் கூட, நம்முடன் மீண்டும் அவர்கள் இணைவதற்கு எது தடையாகவிருக்கிறது என்பதை யோசிக்கும்போது BSNLEU சங்கம் செய்திருக்கும் காரியங்களில் தவறானவையாக உள்ளவை என்று நான் கருதுவதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.  அது சரியா தவறா என்று எடைபோட்டுப் பார்ப்பதும் முடிவெடுப்பதும் உங்கள் பொறுப்பு.     
1. ஆண்டு ஒன்றுக்கு 10000 கோடிக்கு மேலே லாபம் ஈட்டிய நமது துறை இன்றைக்கு லாபம் அறவே இல்லை என்ற நிலை மாறி நஷ்டம் என்றாகிவிட்டது. 
2. பல ஆண்டுகள் கையிருப்பில் வங்கியில் வைத்திருந்த தொகை ருபாய் 40000 கோடி இன்றைக்கு கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து முடிவில் இல்லை என்றாகிவிட்டது.  
3.  அரசாங்கத்தின் தனியார் மோகம் காரணமாக தனியார் செல் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் தள்ளுபடி ஒரு புறம்.   BSNL  -க்கு கூடுதல் வருவாய் வந்து கொண்டிருந்த ADC கட்டணம் போன்றவற்றை அரசே ரத்து செய்தது மறுபுறம். 
4.நாடு முழுதும் சம்பள மாற்றம் நடந்து முடிந்து, நமது பகுதியில் அதிகாரிகளும் பெற்று இறுதியில் நாம் கொடுத்ததைப் பெற்றுக்கொண்ட நிலை வந்ததற்கும், கோரிப் பெறாததற்கும் யார் காரணம்.?
5. அதிகாரிகள் பெற்ற மாதிரி நான்கு கட்ட பதவி உயர்வினை  ஏன் நம்மால் பெற முடியவில்லை? 
6. லட்ச ரூபாய்க்கு மேலே செலவானாலும் அத் தொகையினை MRS திட்டம் மூலம் வெகு சுலபமாகப் பெற்று வந்தோமே அது இப்போது பெற முடியாமல் தவிப்பது ஏன்? 
7. 15 நாள் சம்பளத்தை போனசாக பெறத் துவங்கி 75 நாள் சம்பளம் வரை முன்னேறிச் சென்றோமே,  அது இன்றைக்கு எட்டாக்கனியாய்  மாறியிருப்பது ஏன்? 
8. 2G ஏல முறைகேட்டில்  லட்சம் கோடிக்கு மேல் ஊழல்  நடைபெற்றிருப்பது தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே ஏன்? BSNL  -ன் நிதிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் 3G ஏலத் தொகையை 18500 கோடிக்கு மேல் நிர்வாகம் BSNL மீது  சுமத்தியதே அதையும்  ஏன் நம்மால் தடுக்க முடியவில்லை?  
9.    BSNLEU சங்கம் அன்று தொடங்கி இன்று வரை ஒரே காரியத்தில் மட்டுமே கவனமாக உள்ளது. அது உறுப்பினர் சேர்க்கை என்ற ஒற்றை வேலைதான். 
     இதற்காக அது என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறது.  
  1. சங்கங்களை ஒன்றுபடுத்த மறுப்பது.
  2. சங்கங்களுடன் இணைந்து இயக்கம் கட்ட                மறுப்பது.     
  3. மேலாண்மைத் தன்மையில் மிதப்பது. 
  4. உறுப்பினர் என்ன தவறு செய்தாலும் அதை  
      மன்னிப்பது.  
  5. சட்ட நுணுக்கங்களை கற்றுத் தெளிவது 
      இல்லை.    
  6. வாதாடிப் போராடும் வல்லமையை வளர்த்துக்        கொள்வதில்லை.  
  7. குறிப்பாக ஆர்ப்பாட்ட அறிவிப்பைத் தவிர   
      வேறு போராட்டங்களை அறிவிப்பதில்லை. 
  8. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப  
      தம்மை தகவமைத்துக் கொள்வதுமில்லை. 

     இப்படிச்  சொல்லிக் கொண்டே போகலாம்.
  ஊழியர்களை மடை மாற்றம் 
செய்தாக வேண்டும்.  
புதிதாய்ச் சிந்திக்க வைக்க வேண்டும். 

சிந்தித்ததைச் சொல்வது  மட்டுமல்ல கல்வி 
சிந்திக்க வைப்பதுதான் சிறந்த கல்வி.
       

நீயா?  நானா?     விரிசல் வளர்க்கும்.
நீயும் - நானும்    பிரியம் வளர்க்கும்.


No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR