நமது தஞ்சை மாவட்டத்தில் Cable Contract ல் பணியாற்றும் தோழர்களுக்கு ரூபாய் 2000/- போனசாக பெற்றுத் தந்திருக்கிறோம். House Keeping ல் பணியாற்றும் தோழர்களுக்கு ரூபாய் 1500/- ஐ போனசாக பெற்றுத் தந்திருக்கிறோம். இவையெல்லாமே தீபாவளிக்கு முன்பாகவே பெற்றுத் தரப்பட்டது. போனஸ் பேச்சு வார்த்தையில் பெரிதும் ஒத்துழைத்த நமது தஞ்சை போது மேலாளர் Raja reddy அவர்களுக்கும், ஒப்பந்ததாரருக்கும், தமிழ் மாநில துணைச் செயலர் நடராஜன் அவர்களுக்கும், மாவட்டச் செயலர் தோழர் கிள்ளி, மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மாவட்டப் பொருளாளர் சிவசிதம்பரம், NFTE மாவட்டத் தலைவர் பிரின்ஸ், மற்றும் DGM அய்யர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
மறைந்த மாமனிதன் ஜெகனை நினைவில் நிறுத்தி செயலாற்றும் தோழர்களே! உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்! இதுதான் வர்க்கக்கடமை! இருப்பதையும் இழந்தால் அது வர்க்கக் கொடுமை.
லட்சக்கணக்கான மஸ்தூர் தோழர்களுக்கு RM என்ற புது பெயரிட்டு இலாக்காவில் உள் நுழைத்தாயே தலைவா! மடியும் வரை மறப்போமா உம்மை! உமது ஆசி எமக்கு இருக்கும் வரை எமது மாவட்டத்துக்கு எக் குறையும் இல்லை!
எழுச்சியோடு தொடர்வோம் பயணத்தை!
எழுச்சியோடு தொடர்வோம் பயணத்தை!
அன்புடன்,
G . கேசவன், மாவட்டச் செயலர், தஞ்சை.
No comments:
Post a Comment