தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, December 30, 2018

தலைநகரில் AUAB கூட்டம்
===================
27-12-18 அன்று AUAB கூட்டம்  சென்னை 
CGM அலுவலகத்தில் நடைபெற்றது. 
டெல்லியிலிருந்து தலைவர்கள் 
C. சிங், அபிமன்யு, சிவகுமார் 
ஆகியோர் பங்கேற்றனர். 
அகில இந்திய தமிழக தலைவர்களும், 
மாநிலச் செயலர் நடராஜன் உள்ளிட்ட 
மாநிலச் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து 
மாவட்டச் செயலர்களும் பங்கேற்றனர்.Wednesday, December 26, 2018

 நமது AUAB யும் பங்கேற்கும் 
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்.

Monday, December 24, 2018கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நோக்கமே 
ஏழைகளுக்கு உதவுதல் தான். 
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் 
என்ற வாக்குக்கு ஏற்ப 
பலருக்கும் உதவி செய்து 
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் 
இந் நன்னாளில் அனைவரையும் 
NFTE தஞ்சை வாழ்த்தி மகிழ்கிறது!

Wednesday, December 19, 2018

 
திரு. வருண் சக்கரவர்த்தி
மிகச் சிறந்த ஸ்பின் பௌலர்
==========================================
நமது தஞ்சை PGM திரு. சி.வி. வினோத் அவர்களின் மகன்
 இந்திய IPL 20  20 மேட்ச் பஞ்சாப் டீமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மிக அதிகமாக  8.41 கோடி மதிப்பில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மிகச் சிறந்த ஸ்பின் பௌலர்.
27 வயது நிரம்பிய இவர் 9 மேட்ச்களில் 22 விக்கெட்களை 
வீழ்த்திய சாதனையாளர்.

Top Wicket Taker என்று பெயர் பெற்ற 
திருவாளர் வருண் 
மிகப் பெரிய ஜாக்பாட்டை வென்றிருக்கிறார்.

நமது தஞ்சையின் முதன்மை பொது மேலாளர் திரு. C.V. வினோத் அவர்களின் மகன்தான் திரு. வருண் சக்கரவர்த்தி என்று அறியும் போது பெரும் மகிழ்ச்சி. விருது பெற்ற வருண் அவர்களையும், வருணைப் பெற்ற நமது பொது மேலாளர் அவர்களையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்!
'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை    
எந்நோற்றான்கொல் எனும் சொல்.’
என்ற வள்ளுவன் குறளுக்கேற்ப 
தவம் செய்த தந்தையை, தாயை  பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்!

இவண்,
K. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர், NFTE, தஞ்சை.Friday, December 14, 2018


AUAB கூட்ட முடிவுகள்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 11/12/2018 அன்று டெல்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

நமது வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணங்களையும், நமது போராட்ட அறைகூவலால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் விளக்கி மாநில, மாவட்ட மட்டங்களில் டிசம்பர் 26 முதல் 29 வரை அனைத்துச் சங்க கூட்டமைப்பு சார்பாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படவேண்டும்.

நமது கோரிக்கைகள் பற்றித் தொடர்ந்து விவாதிக்கவும், கோரிக்கைகளின் முன்னேற்றம் பற்றிக் கண்காணிக்கவும் 
DOT கூடுதல் செயலர் மற்றும் மூத்த அதிகாரிகளை  
அனைத்து சங்க கூட்டமைப்பு விரைவில் சந்திப்பது.

இலாக்கா அமைச்சரின் உத்தரவின்படி சங்கப்பிரதிநிதிகள் 
DOT அதிகாரிகளை  சந்திப்பதற்கு  ஏதுவான ஒரு அமைப்பை 
DOT கூடுதல் செயலர் தலைமையில் உருவாக்கிட  
விரைவில் நடவடிக்கை எடுப்பது.

போராட்ட அறைகூவலால் கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் போராட்டத்தை ஒத்திவைப்பதற்கான சூழல் ஆகியவற்றை விளக்கி அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக விரிவான விளக்கமான சுற்றறிக்கையை விரைவில் வெளியிடுவது.

 CMD அவர்களை சந்தித்து BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பங்களிப்பை உயர்த்துவதற்கான 
உத்திரவை விரைவில் வெளியிடச்செய்வது.
மாவட்ட செயலர்கள் கூட்டம் -11/12/2018
மாவட்ட செயலர்கள் கூட்டம் தோழர்.ப.காமராஜ்,மாநிலத் தலைவர் தலைமையில் சென்னை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு, உறுதிமொழி அதன்பின் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தோழர்கள் பட்டாபி, ஆர்.கே, முத்தியாலு, சுப்பராமன் கலந்து கொண்டு போராட்ட களத்தின் பின்புலம், களநிலை, கோரிக்கை தன்மை, முன்னேற்றம், ஊழியர்களின் விழைவு, ஆகியவை குறித்து வழிகாட்டல் உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள்,  அ.இ.சங்க நிர்வாகிகள் பழனியப்பன், செம்மல் அமுதம், எஸ்.எஸ்.ஜி. உள்ளிட்ட தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். மாநில செயலர், மாநில தலைவர் போராட்ட தயாரிப்பு, பேச்சுவார்த்தை குறித்து விளக்கினர். ஊடகங்களில் பல்வேறு தகவல்களை தோழர்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். மத்திய சங்க முடிவுகளை ஏற்பதுடன், போராட்டம் குறித்த நமது எதிர்பார்ப்புகள், கருத்துகளை மத்திய சங்கத்திற்கு தெரிவிக்கவும்  முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட, மாநில சங்கத்திற்கு தெரிவிக்காமல், ஒப்புதல் பெறாமல் வேறு மாநிலச் செயலரை அழைக்க கூடாது என்ற மத்திய சங்க முடிவுகளை மீறக்கூடாது என திருச்சி மாவட்ட ஆட்டோ கிளைக்கு மாவட்ட செயலர் மூலம்  அறிவுறுத்த முடிவுசெய்யப்பட்டது. திருச்சி ஆட்டோ கிளை செயலர் கூட்டத்தை நட்த்திடும் முடிவை தவிர்க்க வேண்டும் என்வும்  கோரப்பட்டுள்ளது.
மாநில செயற்குழு முடிவு அடிப்படையில் கஜா புயல் நிவாரணம், மிகச்  சிறப்பாக நன்கொடை பெறப்பட்டு, பாதித்த இடங்களில் தோழர்கள் ஆர்.கே., சேது. நடராஜன், மாநில செயலர், செல்வம், பொதுசெயலர், விஜய், கிள்ளி வளவன், பாலமுருகன் உள்ளிட்ட தோழர்கள் வழங்கினர். நன்கொடை அளித்த அனைவருக்கும் மாநில சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும் தொடர்ந்து உதவிட அனைவரையும் வேண்டுகிறது.

Saturday, December 8, 2018

தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் 
புயல் நிவாரண நிதியளிப்பு 
===========================

கடந்த 02-12-18 அன்று கஜா புயலுக்கு ஆளான பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு லட்சம் ரூபாய் நிதியினை வேலூர் மாவட்டச் சங்கம் வழங்கியது. 

திருவாரூர் மாவட்டப் பகுதிக்கு நம்மால் வழங்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை தோழர் கிள்ளி ஆர்.கே யிடம் வெளிப்படுத்திய போது தலைவர் ஆர்.கே வேலூரிடம் வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட தோழர்கள் அல்லிராஜா, சென்னகேசவன், மற்றும் வேலூர் தோழர்கள் புயல் வேகத்தில் இந்த 1 லட்சம் நிதியையும், தோழர் ஆர்.கே ஈரோட்டிலிருந்து 120 போர்வையையும் 
வாங்கி அனுப்பி வைத்தார்.

இம் முயற்சியில் ஈடுபட்ட தலைவர் ஆர்.கே, வேலூர் தோழர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.  
இத் தொகை ரூபாய் 1 லட்சத்தை CPI திருவாரூர் மாவட்டச் செயலர் தோழர். சிவபுண்ணியம் அவர்களிடம் புயல் பாதித்த ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அங்குள்ள  பயனாளிகளுக்கு  முறையாக கொண்டு சேர்ப்பதற்காக   நிதியாக வழங்கினோம்.

இந் நிகழ்ச்சியில்  மாநிலச் செயலர் நடராஜன், மாநில அமைப்புச் செயலர் பாலமுருகன், மூத்த தலைவர்  சேது, மற்றும் மாவட்டச் செயலர் தோழர். கிள்ளிவளவன், கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டச் சங்கத்தின் சார்பாக 
புயல் நிவாரண நிதியளிப்பு 
=============================

மன்னையில் கஜா புயல் நிவாரண நிதி வழங்க  15 ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிவாரணப் பொருட்களும், தலா 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. முதல் கட்ட உதவியாக இந் நிகழ்வு மன்னை தொலைபேசியகத்தில் கடந்த 02-12-18 அன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை மன்னை கிளைச் செயலர் தோழர். மோகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு மாநிலச் செயலர் நடராஜன், மாநில அமைப்புச் செயலர் பாலமுருகன், குடந்தை மாவட்டச் செயலர் விஜய், நமது மூத்த தலைவர் தோழர். சேது, மாவட்டச் செயலர் கிள்ளி, TMTCLU மாவட்டச் செயலர் தோழர் கலைச்செல்வன், ஆகியோர் பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். 
நிகழ்ச்சிக்கு தஞ்சை பாஸ்டின் அமலநாதன், அம்மாபேட்டை காமராஜ், திருவையாறு பத்மநாபன், திருவாரூர் சிவப்பிரகாசம், பாலதண்டாயுதம், திருத்துறைப்பூண்டி தட்சிணாமூர்த்தி,  பட்டுக்கோட்டை செல்வகுமார், மன்னை செல்லையன், பன்னீர்,  தர்மராஜ் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர். Friday, December 7, 2018

காலவரையற்ற வேலை நிறுத்தம் 
காலம் கொடுத்து ஒத்திவைப்பு.
====================
நினைத்துப் பார்க்கிறோம்!

இப்போதுள்ள நிலைமையில் எடுத்த நல்ல முடிவு இது. இதை தஞ்சை மாவட்டச் சங்கம் பெரிதும் வரவேற்கிறது.  எங்கள் பகுதியில் வேலை நிறுத்தம் கஜாவால் 15-11-18 லேயே துவக்கப்பட்டுவிட்டது.   அதை AUAB யாலும் நிறுத்த முடியாது என்ற நிலைக்கு இன்றும் தொடர்கிறது. 

சம்பள மாற்றத்திற்காக இது வரை நாம் நடத்திய போராட்டங்கள்  நிலைமையை சரியாக கணித்து நடத்தப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். இதற்காக AUAB நிர்வாகிகளுக்கு தஞ்சை மாவட்டம் பாராட்டுக்களைத்  தெரிவித்துக் கொள்கிறது. 

1. நமது துறையின் நஷ்டத்திற்கு முழுமுதற் காரணம் BSNL ல் 4 G இல்லாதது. இந்த ஒரு காரணத்திலாயே நமது வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும் முடியவில்லை, தக்க வைக்கவும் முடியவில்லை.  எனவே, இதனை முன்னிறுத்தி போராட்ட திட்டத்தில் BSNL க்கு 4G கொடு என்ற கோரிக்கையை வைத்தோம். இதில் சேவை முன்னிறுத்தப் பட்டிருக்கிறது.
2. சமூக அக்கறையோடு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பில் மாற்றம் என்ற கோரிக்கையையும்  முன்வைத்திருக்கின்றோம்.
3. மூன்றாவதாகத்தான் ஊதிய மாற்றக் கோரிக்கை.  

இப்படிப் பொறுப்பு வாய்ந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைத்துப் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினோம்.

11-7-18 கண்டன ஆர்ப்பாட்டம்.
24 முதல் 26-7-18 வரை 3 நாள் உண்ணாவிரதம்.
2 நாள் வேலை நிறுத்தம்.
29-10-18  பத்திரிகையாளர்கள்  சந்திப்பு.
30-10-18  தர்ணா போராட்டம்.
14-11-18 உரிமைப் பேரணி.
03-12-18 காலவரையற்ற வேலை நிறுத்தம். 

நமது போராட்ட முறைதான்  02-12-18 ஞாயிற்றுக்கிழமையில்  DOT செகரட்டரியை நம்மை அழைக்க வைத்தது. அடுத்த நாள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை. அப்பொழுதும் 10 ம் தேதிவரை கெடு கொடுத்துவிட்டுத்தான் பேச்சு வார்த்தைக்கு நமது தலைவர்கள் சென்றார்கள். 
இன்றைக்கு அதிலும் பல முன்னேற்றங்கள் வந்திருக்கிறது.

1. 4 Gக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்படும்.
2. ஓய்வூதிய மாற்றம் விரைவில். அது ஊதியமாற்றத்தோடு      
    இணைக்கப்படாது.
3. DOT யும் BSNL ம் ஒரு மாதத்திற்குள் பேசி முடிக்க வேண்டும் என்று    
     அமைச்சர் DOT செகரட்டரியிடம் கூறியிருக்கிறார்.

இதையும் நாம் நம்பவில்லை. சொன்னதைச் செய்ய அவகாசம் கொடுத்துதான் 10 ம் தேதி வரை ஒத்திவைத்த போராட்டத்தை மறு அறிவிப்பு வரும் வரை என்று AUAB முடிவு செய்துள்ளது. 

இந்தத் தன்மையை,  நியாயத்தை சரியாக புரிந்து கொள்வதுதான் நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.


போராட்டத்தில் இணையாத ஒன்றிரண்டு சங்கங்களும் 
உடனே இணைந்தாக வேண்டும்.
வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியது தவறு 
என்ற சொத்தை வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வளவுக்குப் பின்னும் லீவு போடலாம், 
MC கொடுக்கலாம் என்ற புத்திசாலிச் 
சிந்தனைகளையும் விட்டொழிக்க வேண்டும்.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழர்களே!
நாம் வேலை நிறுத்தம் செய்தால் 
எந்தத் தொழிலும் பாதிக்காது. 
நமக்காக எவரும் கவலைப்படமாட்டார்கள்.
நமது சம்பளம்தான் பறி போகும்.

ஒன்றுபட்ட தன்மைதான் 
நமது துயரோட்டும்.
அது இன்று நமக்கு வாய்த்திருக்கிறது.
வாராது வந்த மாமணியை தோற்போமோ!
காத்து நிற்போம்.

வாழ்த்துக்களுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்.
மறைந்தார் நெல் ஜெயராமன்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழி வந்தவர். 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துளார். இந்த நெல் ரகங்களை மற்றவர்களும் உற்பத்திசெய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக, வருடா வருடம் திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா மற்றும் கருத்தரங்குகள் நடத்திவந்தார். அதுமட்டுமின்றி, வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகளும் கொடுத்து வந்தார். 

நெல் ஜெயராமன்இதற்கிடையே, கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.நெல் ஜெயராமன்இதைத் தொடர்ந்து, அமரர் ஊர்தி மூலம் நெல் ஜெயராமனின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்திற்கு இரவு  9.30 மணி அளவில் கொண்டுவரப்பட்டது. இதற்கான செலவு மற்றும் ஜெயராமின் மகன் சீனிவாசனுடைய படிப்புச் செலவு என அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR