தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, December 7, 2018

மறைந்தார் நெல் ஜெயராமன்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழி வந்தவர். 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துளார். இந்த நெல் ரகங்களை மற்றவர்களும் உற்பத்திசெய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக, வருடா வருடம் திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா மற்றும் கருத்தரங்குகள் நடத்திவந்தார். அதுமட்டுமின்றி, வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகளும் கொடுத்து வந்தார். 

நெல் ஜெயராமன்இதற்கிடையே, கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.நெல் ஜெயராமன்இதைத் தொடர்ந்து, அமரர் ஊர்தி மூலம் நெல் ஜெயராமனின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்திற்கு இரவு  9.30 மணி அளவில் கொண்டுவரப்பட்டது. இதற்கான செலவு மற்றும் ஜெயராமின் மகன் சீனிவாசனுடைய படிப்புச் செலவு என அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR