தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Wednesday, March 16, 2011

ESM , ஹவுஸ் கீப்பிங் தோழர்களின் சம்பளப் பிரச்சினை.

     ESM, ஹவுஸ் கீப்பிங்  தோழர்களுக்கு சம்பளம் வருவதில் கடந்த 2  மாதமாக    தாமதம்  ஏற்பட்டு வருகிறது.   அதிலும் பட்டுக்கோட்டை பகுதி ESM  தோழர்களுக்கு ஜனவரி மாதத்திலிருந்தே சம்பளப் பட்டுவாடா நடைபெறவில்லை.    

     இது குறித்து நமது ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் மாநிலச் செயலர் பட்டாபியிடம் முறையிட்டார்.  அவரது வழிகாட்டுதலின் பேரில் இன்று நமது தஞ்சை மாவட்ட பொது மேலாளரிடம் பேட்டி கண்டு தீர்வும் கண்டுள்ளார்.   
     
     இது வரை COMMON பண்ட்டிலிருந்து நிதி பெறப்பட்டு சம்பளம் போடப்பட்டு வந்ததால் ஏற்பட்ட தாமதத்தை மாற்றி, இனி ஒப்பந்த ஊழியர் ஊதியம் என்று தனித்தனியாக FUND ALLOTMENT கேட்கப்பட வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதுவும்  இன்றே GM  அவர்களால் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.   தலைவர் பட்டாபி அவர்கள் உடன் பட்டுவாடாவிற்கு முயல்கிறேன் என்று கூறியுள்ளார். 
     தோழர்கள் சிரமத்தை இந்த வாரம் இறுதி வரை பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன், 
மாவட்டச் செயலர்,
TMTCLU , தஞ்சை மாவட்டம்.    

Tuesday, March 8, 2011

GPF - EB பில் PAYMENT பிரச்சனைக்கு இன்று தீர்வு. காணப்பட்டது.

      GPF பட்டுவாடாவில் ஏற்பட்டுள்ள குளறுபடியையும், FUND இல்லை  என்று சொல்லி அதன் காரணமாக EB பில் கூட செலுத்தமுடியாத நிலைமையினையும் மாநிலச் செயலர் தோழர். பட்டாபி அவர்களிடம்      நமது  மாவட்டச்  சங்கம்  கூறியதையடுத்து, CGM அவர்களிடம் பட்டாபி அவர்கள் பேசினார்.   அதன் அடிப்படையில் இன்று அப் பிரச்சினை தீர்வுக்கு வந்து விட்டது. ஏற்கனவே  50 % GPF போடுவதற்கான வேலை நடந்திருந்தது.   அதை மாற்றி 100 % GPF PAYMENT க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    எவ்விதத் தடையுமின்றி இனி EB பில் பட்டுவாடாவிற்கு FUND அனுப்பி வைக்கப்படும் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் நமது CGM.   

     நமது கோரிக்கையை உடன் தீர்த்து வைத்த மாநிலச் செயலருக்கும், கூடுதல் பணிச் சுமையை ஏற்றுக்கொண்ட AO அலுவலகத் தோழர்களுக்கும் நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இவண்,
T. பன்னீர்செல்வம்,
தஞ்சை மாவட்டச்  செயலர்.


செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR