ESM, ஹவுஸ் கீப்பிங் தோழர்களுக்கு சம்பளம் வருவதில் கடந்த 2 மாதமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் பட்டுக்கோட்டை பகுதி ESM தோழர்களுக்கு ஜனவரி மாதத்திலிருந்தே சம்பளப் பட்டுவாடா நடைபெறவில்லை.
இது குறித்து நமது ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் கிள்ளிவளவன் மாநிலச் செயலர் பட்டாபியிடம் முறையிட்டார். அவரது வழிகாட்டுதலின் பேரில் இன்று நமது தஞ்சை மாவட்ட பொது மேலாளரிடம் பேட்டி கண்டு தீர்வும் கண்டுள்ளார்.
இது வரை COMMON பண்ட்டிலிருந்து நிதி பெறப்பட்டு சம்பளம் போடப்பட்டு வந்ததால் ஏற்பட்ட தாமதத்தை மாற்றி, இனி ஒப்பந்த ஊழியர் ஊதியம் என்று தனித்தனியாக FUND ALLOTMENT கேட்கப்பட வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டது. அதுவும் இன்றே GM அவர்களால் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. தலைவர் பட்டாபி அவர்கள் உடன் பட்டுவாடாவிற்கு முயல்கிறேன் என்று கூறியுள்ளார்.
தோழர்கள் சிரமத்தை இந்த வாரம் இறுதி வரை பொறுத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன்,
மாவட்டச் செயலர்,
TMTCLU , தஞ்சை மாவட்டம்.
No comments:
Post a Comment