சம்மேளன தினம்
NFPTE சம்மேளனம் நவம்பர் 24, 1954 அன்று கூடிய பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் Fedaral Council தொடர்ந்தது. கடுமையான விவாதம். தோழர் K. ராமமூர்த்தி - தாதாகோஷ் போட்டி. 45 வாக்குகள் வித்தியாசத்தில் தாதாகோஷ் வெற்றி பெற்றார். S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சக்திமிக்க ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா AITEEU CLASS III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய செயலர்.
தொழிலாளர் இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.
9 சங்கங்களை ஒன்றிணைத்து சம்மேளனத்தை உருவாக்கி மிகப் பெரிய சக்தியாக விளங்கியது NFPTE. அடைந்த சாதனைகளை அளவிட முடியாது.
அப்பேர்ப்பட்ட சங்கத்தை உடைத்து வெளியேறிய சங்கம் BSNLEU இன்று கையறு நிலையில் உள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் இது மாதிரி ஒரு சங்கம் அங்கீகாரத்தில் இருந்து கொண்டு அனைவரையும் அலைக்கழித்தது போதும்.
இயலாதவர்கள் வெளியேற வேண்டும். இன்றேல் வெளியேற்றப்பட வேண்டும்.
சம்மேளன தினத்தை கொடியேற்றி கொண்டாடுங்கள். NFPTE ன் தியாகத்தை, செயல்திறத்தை எடுத்துச் சொல்லுங்கள்.
S. சிவசிதம்பரம். பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment