இன்று காலை DOT உடன் நடந்த பேச்சு வார்த்தையில் 78.2 DA இணைப்பு என்று உடன்பாடு கண்டபோதிலும் அது BSNL போர்டிலிருந்து அப்ரூவல் பெற்றாக வேண்டும் என்று கூறியதை நாம் ஏற்கவில்லை. மீண்டும் இன்று மாலை CMD உடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதிலும் மீண்டும் அதையே நிர்வாகம் வலியுறுத்தியது. ( ஏற்கனவே BSNL BOARD நம்மிடம் BSNL ன் நிதியாதாரம் மேம்பட்ட பிறகு பரிசீலிக்கலாம் என்று கூறியிருக்கிறது. எனவே மீண்டும் போர்டு அப்ரூவலுக்கு வைப்பது தேவையில்லாதது ). இந்த இணைப்பு BSNL BOARD APPROVAL க்கு பிறகுதான் முடியும் என்று கூறுகிறது. முடியும் என்பதை மினிட்சில் (ஒப்பந்தத்தில்) குறிக்க வேண்டும் என்று நாம் வற்புறுத்துகிறோம்.
இதை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததால் நாம் போராட்டத்தை தொடர்கிறோம்.
தேசம் முழுதும் திரண்டு நின்று இரண்டு நாளாய் நடத்திய போராட்டம் மூன்றாம் நாளில் முடிவுக்கு வரும்! இன்றேல் வரவைப்போம்!
போராட்டக் களத்தில் முனை முகத்து நிற்கும் தோழர்களே உங்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
S . சிவசிதம்பரம்,
மாநில துணைத் தலைவர், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment