தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Thursday, December 30, 2010

உணர்வுகள் மடைமாற்றிக்கொண்ட விழா!

   சிறக்க விழா நடத்த வேண்டுமா!   சேலம் மாவட்டத்தை அழையுங்கள்!! 
     இனி அப்படித்தான்  தலைவர்கள், தோழர்கள் எல்லோருமே சொல்வார்கள்.   அந்தளவுக்கு விழா ஏற்பாடுகளை மாவட்டச் செயலர் தோழர் நூருல்லா  தலைமையில் செய்து முடித்திருந்தார்கள்.   கொள்கை விளக்க போர்டுகள், மேடை அமைப்புகள், உணவு ஏற்பாடு, தலைவர்களை கவுரவித்த விதம் அனைத்துமே சிறப்பாக இருந்தது.     உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.  

     நமது தஞ்சை மாவட்டத்திலிருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்களிப்பு செய்தார்கள்.  தஞ்சையிலிருந்து ஒரு வேனும், திருவாரூரிலிருந்து ஒரு வேனும் வந்திருந்தது.   மாவட்டத்திலிருந்து ரூபாய் 2500  துவக்க விழாவுக்கு நிதி அளித்தார்கள்.  தலைவர் தமிழ்மணி அவர்களை கவுரவித்து நினைவுப் பரிசும் வழங்கினார்கள். 

     தலைவர் தமிழ்மணி பாராட்டு விழாவில் பங்கெடுத்துக்கொண்ட தோழர்கள் அனைவருமே தோன்றியதை தயங்காமல் அப்படியே பேசினார்கள் என்பதுதான் என்னைப் பொறுத்தவரை பெரும் சிறப்பு.   தோழர் R.K  அவர்கள் தனக்கும், தமிழ் மணிக்கும் இடையிலான நெருக்கத்தையும் இறுக்கத்தையும் பளிச்சென்று பேசி " நண்பேண்டா " என்றது அனைவரையும் நெகிழ வைத்தது.   
தோழர் ஞானையா அவர்கள் 
திருநெல்வேலி மாநாட்டு நிகழ்வையும் , அதில் பொறுப்பு எடுக்கக் கூடாது என்று சொன்னபொது அதை மனதார  ஏற்றுக்கொண்ட தன்மையை பாராட்டி பல்வேறு செய்திகளையும் உடைத்துப் பேசினார்.  
     குடந்தை ஜெயபால், மாலி, முத்தியாலு, S.S. கோபாலகிருஷ்ணன், CKM,  RV, ஜெயராமன், சகோதரச் சங்கத் தோழர்கள், மாற்றுச் சங்கத் தோழர்கள் , பட்டாபி மற்றும் பொதுச் செயலர் அனைவரின் பங்களிப்பும், 
அனுபவப் பகிர்வும் வெகு அற்புதம். 
அனைத்து மாவட்டச் சங்கமும், பல்வேறு தோழர்களும் தலைவரை மகிழ்ந்து கவுரவித்தார்கள். 
தருமபுரி மாவட்டச் செயலர் தோழர் மணி அவர்கள் 
தமிழ்மணியின் தொழிற்சங்க வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக விழாவில் வெளியிட்டார்.  அதைப் போலவே சேலம் மாவட்டத்  தோழர்கள் மலர் ஒன்றும் வெளியிட்டார்கள்.  
அனைத்து தலைவர்களும் தமிழ்மணியோடு வாழ்ந்த காலத்தில் பழகிய விதம், சிறப்பியல்புகள்
அனுபவங்கள்  ஆகியவைகளை  மலரில்  பகிர்ந்து  கொண்டிருந்தனர்     
உணவு இடைவேளையில் கலைநிகழ்வும் நடைபெற்றது.    

    மாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத் துவக்க விழாவும் தோழர்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்தது.  தோழர் ஜெயராமன் அவர்கள் பல்வேறு விபரங்களுடன் விழாவைத் துவக்கி வைத்துப் பேசினார்.  தோழர் C சிங் அவர்கள் நம்மை பார்த்து உற்சாகமடைந்து பேசினார்.   தோழர் CKM அவர்களும் BSNLEU  க்கு இம்முறை பாடம்   புகட்டியாக வேண்டும் என்பதை விளக்கமாக அதே நேரத்தில் ஆவேசமாகப் பேசினார்.  பட்டாபி அவர்கள்  பொறுமையாக அதே நேரத்தில் அக்கறையோடு விழாவைச் சிறப்பாகக்  கொண்டு சென்று முடித்தார்.   
 அன்புடன்,
S.  சிவசிதம்பரம்                          
பட்டுக்கோட்டை.

No comments:

Post a Comment

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR