ஒற்றுமையைக் கட்டும் நேரமிது
முதல் நாள் போராட்டத்தில் முனைப்போடு பங்கேற்ற தோழர்களே! உங்களுக்கு நமது புரட்சிகர வாழ்த்துக்கள்!
கூட்டுப் போராட்டக் குழுவின் சார்பில் வைத்த கோரிக்கைகள் மீது இன்று RLC மற்றும் CMD உடன் விவாதிக்கப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர நமக்கும் வேறு வழியில்லை.
நாளைய வேலை நிறுத்தத்தில் இன்று பங்கேற்காதவர்களையும் ஈடுபடுத்துவோம். . அவர்களிடம் எதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லுவோம்.
வெற்றியைப் பார்த்தே பழகிவிட்டதால் இப்பொழுதைய பின்னடைவுகள் சற்று துவளத்தான் செய்யும்!
ஆனால், வெற்றியைக் கண்டு துள்ளுவதும், தோல்வியைக் கண்டு துவளுவதும் போராளிக்கு அழகல்லவே!. ஒன்றுபடும் வாய்ப்பு எப்பொழுது கிடைத்தாலும் நழுவ விடாதவன்தான் நமது தோழனும் இயக்கமும்! விடலாமா தோழர்களே!
கூட்டுப் போராட்டக் குழுவின் சார்பில் வைத்த கோரிக்கைகள் மீது இன்று RLC மற்றும் CMD உடன் விவாதிக்கப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர நமக்கும் வேறு வழியில்லை.
நாளைய வேலை நிறுத்தத்தில் இன்று பங்கேற்காதவர்களையும் ஈடுபடுத்துவோம். . அவர்களிடம் எதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லுவோம்.
போராட்டமில்லாமல் யாராட்டமும் செல்லாது என்பதை மீண்டும் உணர்த்திடும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது! அதிகாரிகள் முதல் அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் போராட்டமல்லவா! அதோடு, இது வாழ்வாதாரத்துக்கான போராட்டம் என்பதையும் உணரச் செய்துவிட்டால் இன்க்ரிமென்ட் டேட், சம்பள வெட்டு என்பதெல்லாம் பெரிதாகத் தோன்றாது.
ஆனால், வெற்றியைக் கண்டு துள்ளுவதும், தோல்வியைக் கண்டு துவளுவதும் போராளிக்கு அழகல்லவே!. ஒன்றுபடும் வாய்ப்பு எப்பொழுது கிடைத்தாலும் நழுவ விடாதவன்தான் நமது தோழனும் இயக்கமும்! விடலாமா தோழர்களே!
தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரனா!
உலகத்துச் செல்வமெல்லாம்
உருவாக்கும் பிதாமகன் அல்லவா!
அவன் ஏழையல்ல!
உருவாக்கும் பிதாமகன் அல்லவா!
அவன் ஏழையல்ல!
அவனுக்கு உரிமை உண்டு! உணர்வு உண்டு!!
என்று சொன்ன தாரபாதாவை நெஞ்சில் நிறுத்துவோம்.
உரிமையை நிலை நாட்டும் இப் போரை உணர்வோடு நடத்துவோம்.
வெற்றி நிச்சயம்!
என்று சொன்ன தாரபாதாவை நெஞ்சில் நிறுத்துவோம்.
உரிமையை நிலை நாட்டும் இப் போரை உணர்வோடு நடத்துவோம்.
வெற்றி நிச்சயம்!
வாழ்த்துகளுடன், S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment