ஆம்! நாளை 28-12-2010 காலை தோழர் தமிழ்மணிக்கு பாராட்டு விழா!!
தலைவனை வணங்கி வாழ்த்துச் சொல்ல, தமிழகமெங்கிலும் இருந்து தலைவர்கள் தோழர்கள் இன்றிரவிலிருந்தே இயங்கத் தொடங்கி விட்டார்கள்.
நீங்கள் ஜெகன், RK, முத்தியாலு, மாலியால் உயர்த்திப் பிடிக்கப்பட்டவர். அதனால்தான் மாநிலத் தலைமை கொண்டீர்கள்.
அடிமட்டத் தொழிலாளியின் ஆகர்ஷ சக்தியாக நீங்கள் திகழ்ந்ததால்தான் மாவட்டச் செயலர்கள் அதிகப் பட்சம் இன்று டெலிகாம் மேக்கானிக்குகளாய்!
தலைமைத் தகுதிக்கு அதீத அறிவாற்றல், ஆங்கிலப் புலமை அவசியமில்லை!
அன்பு, அக்கறை, அனுபவம் இவை அனைத்தையும் தகுதி கொள்ளும்.
உணர்த்திச் சிவந்த உன்னதத் தலைவனே! உம்மை நாங்கள் வாழ்த்துகின்றோம்!
தலைவா! உனக்கு காலையில் விடை கொடு விழா!!
இடையில் ஒரு மணி நேரம் மூச்சு விட்டுக் கொள்!
மாலையில் தேர்தல் பணி துவக்க விழா!!
லட்சக் கணக்கில் RTP, மஸ்தூர்களை
அரியணை ஏற்றிய ஆற்றல்!
ஆர்ப்பாட்டத்தோடு அமுங்கிடாது
சரண்டருக்கெதிரான அந்தத் துள்ளல்!
பதவி உயர்வு தந்து, போனஸ் தந்து,
40 % ஊதிய உயர்வும் தந்த துடிப்பு!
உபரியும் ஆக்கிட மாட்டேன்! உதவாக்கரையும்
ஆக்கிடமாட்டேன் என்ற உயரிய அக்கறை வெடிப்பு!
இப்படி நம்
ஊனோடும், உயிரோடும் கலந்த NFTE பேரியக்கமே!!
உன்னை உயர்வு கொள்ள, தேர்வு கொள்ள
தலைவனோடு நாங்களும் கரைகிறோம்!
எஸ். சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment