தினம் ஒரு கருத்து
வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.
Saturday, November 28, 2026
வணக்கம் தோழர்களே. கடந்த 22. 11 .26 ஞாயிறு மாலை 5 மணி அளவில் பட்டுக்கோட்டை காசங்குளம் கீழ்க்கரையில் உள்ள சிபிஐ கட்சியை அலுவலகத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் எஸ். டி .சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். செயலாளர் சுப. பாலதண்டாயுதம் வரவேற்றார். ஒரத்தநாடு கலை இலக்கிய பெருமன்றம் தலைவர் சோலை இளங்கோ அவர்களும் பொருளாளர் பிச்சையன் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா அவர்களும் முன்னிலை வைத்தார்கள். வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி மாவட்ட மாநாடு தொடர்பான விளக்கங்களை செயற்குழு உறுப்பினர் சி .ராமலிங்கம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். இந்த கூட்டத்தில் ஒரு மனதாக மணிக் கூண்டு அருகே உள்ள மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சிலையிலிருந்து சிலைக்கு மாலை அணிவித்து பேரணியாக மண்டபம் வரை சிலம்பாட்டத்துடன் செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களும் நிதி மற்றும் மாவட்ட மாநாட்டை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என்று தங்களது மேலான கருத்தை பணிந்து கூறினார்கள். புதிய உறுப்பினர்கள் செல்லகன்னு மற்றும் செந்தில்குமார் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் கூடுதலாக அறிவித்தார்கள். பேரணிக்கு பிறகு மண்டபம் முன்னே கலை இலக்கிய மன்ற கொடியேற்றுதல், முதல் நிகழ்வாக கலைக்குழு ஆறுமுகம் கலைக்குழுவின் பாடல்கள் மற்றும் கருத்தரங்கம் கருத்தரங்கத்தின் முடிவில் மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் சிறப்புரை. அதன் பிறகு தமிழகம் சார்பில் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற துரை மாணிக்கம் ஆசிரியர், பேராவூரணி பெத்தையன் ஆசிரியர் , கோட்டை அம்பிதாசன், மும்பை தமிழ்ச்சங்கம் கவிச்சம்மல் விருது வழங்கிய பேராசிரியர் ராஜதுரை, விளங்குடி தோழர் கலைமாமணி விருது பெற்றவர் ஐவருக்கு பாராட்டுரையும், அதன் பிறகு மதிய உணவு, மதிய உணவிற்கு பிறகு தஞ்சை மாவட்ட செயலாளர் அய்யாறு புகழேந்தி ஐந்தாண்டு கால அறிக்கை வாசிக்க, அதன் பிறகு அறிக்கையின் மேல் விவாதம் மேற்கொள்ளல், விவாதத்திற்கு பிறகு தஞ்சை மாவட்ட நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்து புதிய பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்து அதன் பிறகு வாழ்த்துரையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெகு சிறப்பாக நடத்துவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பட்டுக்கோட்டை கிளை தலைவர் எஸ்டி சாமிக்கண்ணு ஒரத்தநாடு தலைவர் இளங்கோ, செயற்குழு உறுப்பினர் சி. இராமலிங்கம் ஒரத்தநாடு பொருளாளர் பிச்சையன் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி மோகன், செயற்குழு உறுப்பினர் ஜெனிதா, செயற்குழு உறுப்பினர் கீர்த்தனா, துணை செயலாளர் தர்மராஜ், பொருளாளர் விஜயன், செல்லக்கண்ணு, கௌரவத் தலைவர் வீரபாண்டியன், துணை செயலாளர் தயாநிதி, மதுக்கூர் துரைராஜ், செல்வகுமார் பிஎஸ்என்எல், செந்தில்குமார், மூத்த உறுப்பினர் சிவசிதம்பரம் ஒன்றிய செயலாளர் பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
என்றும் உங்கள் S. சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை
அன்புத் தோழர்கள் அனைவருக்கும் இனிய நல வணக்கங்கள். நீண்ட நாட்கள் செயல்படாதிருந்த இத் தளம் செயல்படத் தொடங்குகிறது. மீண்டும் தங்களின் அன்பையும், ஆதரவையும் கோருகிறேன்.
Subscribe to:
Posts (Atom)








