இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் இறுதியில் நேற்று இரவு 09:30 மணிக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நமது தஞ்சை மாவட்டத்தில் 60 % ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். தலைமைக்கு 30 % தான் என்று தவறான தகவலை எவரோ கொடுத்துள்ளனர். நேற்று நிர்வாகத்திடம் கேட்டு உண்மை அறியப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகத்தோடு சளைக்காது பேசி ஒப்பந்தம் கண்ட அனைத்து சம்மேளனத் தலைவர்களே! உங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
போராட்ட காலம் துவங்கி விட்டது. தொடர்ந்து நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், துறையை, துறைத் தொழிலாளியை காவு கொடுக்க எண்ணும் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடியாக மாற வேண்டும்!!
நன்றி தோழர்களே!! ஒப்பந்த விபரங்களுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம்!
தோழமையுடன்,
S . சிவசிதம்பரம் - K . நடராஜன்.
மாநிலச் சங்க நிர்வாகிகள் - தஞ்சை.
No comments:
Post a Comment