காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது!
NFTE - BSNLEU மற்றும் இரு சங்கங்களின் இணைப்பில் உள்ள ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் TMTCLU - TNTCWU ஆகியவை இணைந்து காத்திருப்புப் போராட்டத்தை
17, 18-09-18 இரு நாளும் நடத்தினார்கள்.
திரளான தோழர்கள் மாவட்ட முழுமையிலிருந்தும் பங்கேற்றிருந்தார்கள்.
2 மாதமாக சம்பளம் வராத சூழ்நிலையில்
தமிழகமெங்கும் ( நம் பகுதியில் இந்த மாதம் மட்டும்தான், அதுவும் தாமதம்தான்) திரட்சியாக இப் போராட்டம் நடைபெற்றது.
நேற்று வரை முடிவு எட்டாததால் இன்றும் போராட்டம் தொடர்ந்தது.
இரு சங்கத்தின் மாநிலச் செயலரும் இன்று காலை CGM மிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில்
Repair and maintenance க்கு வந்த 9 கோடி ரூபாயை housekeeping க்கு payment செய்ய நிர்வாகம் ஒத்துக்கொண்டது.
எனவே, நமது போராட்டத்தை தற்போது
ஒத்தி வைக்கிறோம்.
இரண்டு நாட்களும் எழுச்சியோடு
பங்கேற்ற தோழர்களுக்கு
நன்றியும், பாராட்டும்.
குறிப்பாக பெருந்திரளாக வந்திருந்த
மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சை SDOT, திருவாரூர் SDOT மற்றும் அம்மாப்பேட்டை தோழர்களுக்கு கூடுதல் வாழ்த்தும், பாராட்டும்.
சங்கங்களிடையே ஒற்றுமையை மேலும்
பலப்படுத்துவோம்.
ஒப்பந்தத் தொழிலாளிக்கு ஒப்பற்ற துணையாவோம்!
வாழ்த்துக்கள் தோழர்களே!
தோழமையுடன்,
கே. கிள்ளிவளவன் - D. கலைச்செல்வன்.
போராட்டக் காட்சிகள்:
No comments:
Post a Comment