அன்புத் தோழரும் NFTE பேரியக்கத்தின் தமிழ் மாநிலச் செயலருமான தோழர் K. நடராஜன் அவர்கள் தனது, பணியிலும், படிப்பிலும், பதவியிலும் படிப்படியாக முன்னேறியவர். சங்கப் பணியிலும் சாம, பேத, தான, தண்டத்தை பிரயோகித்துத்தான் இன்றைக்கு வளர்ந்திருக்கிறார். தமிழ் மாநிலத்தின் செயல்பாட்டுத் தளத்தில் அவரது செயல் திட்ட பதிவுகள்தான் இன்றைய கால கட்டத்தில் அகில இந்தியச் சங்கத்துக்கு வலு சேர்த்திருக்கிறது. குடும்ப உறவுகளிலும் அவர் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்திருக்கிறார். அதை லாகவமாகக் கையாண்டு இன்றைக்குத் தன் மகனுக்கு சாதி மறுப்புத் திருமணத்தையும் நடத்தியிருக்கிறார்.
அன்புத் தோழர் நடராஜன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவரையும், அவர்தம் மனைவி, மகன், மருமகள் அனைவரையும் இந்தத் தருணத்தில் அன்போடு வாழ்த்துகிறேன். எங்களின் முன்னாள் மாவட்டச் செயலரே! உங்களை இனிய இப் பிறந்த நாளில் வாழ்த்துவதில் தஞ்சை பெருமிதம் கொள்கிறது!
அன்பிற்கினிய தமிழ் மாநிலத்தின் துணைச் செயலர் தோழர், தலைவர், தம்பி திரு. முரளி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
மாநிலத்தின் இரு கரங்கள், இருகண்கள், இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இணைந்த செயல் வீரர்கள் முரளி – நடராஜன்.
இரு பெரும் ஆளுமைக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் எனும் போது இவைகள் நெஞ்சில் நிழலாடுகிறது. உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. கூப்பிட்ட குரலுக்கு உடன் குரல் மடுக்கும் உங்களை வாழ்த்துவதில் தஞ்சை மாவட்டச் சங்கம் மேலும் பெருமைப்படுகிறது.
அன்புடன் வாழ்த்தி மகிழும் நெஞ்சங்கள்,
கா. கிள்ளிவளவன்,
எஸ். சிவசிதம்பரம்.
No comments:
Post a Comment