JTO அரவாழி மற்றும் தோழர் சேகர் இருவரும்
மா. செயலரை அவரது இல்லத்தில் சந்தித்த போது.
====================================================================இன்று.... 08/07/2021... இந்திய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் (NFPTE ) முன்னாள் பொதுச்செயலாளரும்... இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் டி. ஞானையா அவர்களின் நினைவு நாள். நமது நெஞ்சார்ந்த... நினைவார்ந்த அஞ்சலிகள் ! அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து தோழர் டி. ஞானையா . 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் . 1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார். 1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் .
திருச்சியில் பணியாற்றியபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE பொதுச்செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 முதல் 1970 வரையிலும் மற்றும்...1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார். அவர் ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர். நமது வாழ்வை மேம்படுத்த நாளும் போராடும் சமூகத்திற்காக தோழர் ஞானையா அளித்த விலைமதிப்பில்லா கொடைக்காக அவரை வணங்குவோம்! ஒவ்வொரு தபால் தந்தி ஊழியரும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர் என்ற வகையில் அற்புதமான மனித நேயர் மாபெரும் தோழர் ஞானையா குறித்து பெருமை கொள்வோம்!
- பாலமுருகன், மாநில அமைப்புச் செயலர்.
No comments:
Post a Comment