தேசியக்குழு கூட்ட முடிவுகள்
23/04/2014ல் டெல்லியில் நடந்த NJCM தேசியக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு
முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- JTO/JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாதவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாடத்திட்டத்தில் இடம் பெறாத கேள்விகள், தவறான கேள்விகள் கேட்கப்பட்டது பற்றி பரிசீலிக்கப்படும்.
- புதிய JTO ஆளெடுப்பு விதி ஒப்புதல் பெறப்பட்டபின் JTOவாக OFFICIATING செய்யும் 1500 TTAக்களும் நிரந்தரம் செய்யப்படுவர்.
- JTO/JAO தேர்வு எழுதுவதற்கான சேவைக்காலம் 7 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படும்.
- SC/ST தோழர்களுக்கு நிரப்பப்படாத காலியிடங்கள் BACKLOG VACANCY ஏதும் இல்லை.இது பற்றி DOTக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வழக்கு நிலுவையில் உள்ளதால் கருணை அடிப்படையில் TSM ஆகப்பணிபுரியும் தோழர்களின் பணி நிரந்தரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட சில தோழர்களது நிரந்தரம் பரிசீலிக்கப்படும்.
- பயிற்சிக் காலத்திற்கான உதவித்தொகை STIPEND புதிய சம்பள விகிதத்தில் 01/01/2007ல் இருந்து வழங்கப்படும்.
- புதிய ஆளெடுப்பு பற்றி ஆய்வு செய்யப்படும். தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலோசனைக்காரர்களின் CONSULTANT உதவி ஏற்கப்படும்.
- 01/10/2000க்குப்பின் வரக்கூடிய பதவி உயர்வு தேதியில் இருந்து சம்பளப்பொருத்தம் 2000 WAGE REVISION அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
- அனைவருக்கும் இலவச SIM வழங்குவது சாதகமாக முடிவெடுக்கப்படும். பிற நிறுவனங்களை அழைப்பதற்கு OFF NET CALLS மாதம் 50 வரை சலுகை அளிக்கப்படலாம்.
- ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க மாநில நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்படும்.
- TSM தோழர்களுக்கான BSNL ஏற்பு உத்திரவு DOTக்கு அனுப்பபட்டுள்ளது.
No comments:
Post a Comment