தோழர்.பி. சென்னகேசவன் JTO
NFTE தமிழ் மாநில துணைத் தலைவர்.
30-09-2017 ல் பணி ஒய்வு பெறுகிறார்.
1983 ல் RM ஆகத் துவங்கி
லைன்மேன், TTA வாகப் பயணித்து
JTO வாக பணியை நிறைவு செய்கிறார்.
சங்கப் பணியை
துவங்கும் போது மாவட்டப் பொறுப்பு
முடியும் போது மாநிலப் பொறுப்பு
இடையில் தம் சங்கத்திலும்,
பொதுவுடைமை இயக்கத்திலும்
இடைவிடாத உழைப்பு.
மாநாட்டுக்குப் பெயர் போன வேலூர்
பல மாற்றங்களை உருவாக்கிய வேலூர்.
சைட்டில் சைடு அடிக்காத வேலூர்.
தஞ்சையைப் போல்
தனது மாவட்டத்திலும்
பெரிய அமைப்பு என்ற
தடத்தைப் பதித்த வேலூர்.
மத்திய, மாநில, மாவட்ட அளவில்
நடத்திய மாநாடு ஏராளம்.
மாநாட்டுக்கு காட்சிகளில்
வேலூர் நமக்கு மாதிரிப் பள்ளி!
செயல் வீரர்கள் கைக்கொண்ட
தனிப்படைத் தலைவன்
சென்னகேசவன்.
வேலூரிலே தோழர்கள்
தலைவனைப் பாராட்ட
இன்று விழா எடுக்கிறார்கள்.
அவர் நலமுடன் வாழ்ந்து
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நனி சிறந்த பணியாற்ற
நாமும் அவரை வாழ்த்துவோம்!
தோழமையுடன்,
தஞ்சை மாவட்டச் சங்கம்.
No comments:
Post a Comment