Part 2:
நண்பன்:
என்னா தோழரே! நம்பூதிரியோட பச்சைப் பொய்யை அழகாப் புட்டு புட்டு வைச்சீங்க! இன்னைக்கு என்னா சொல்லப் போறீங்க?
வம்பன்:
இன்னைக்கும் ஒரு மோசம்போன கதைதான். சொல்றேன் கேளுங்க. போனசே மத்திய அரசு ஊழியருக்கு இல்லாத காலத்திலே ஒனக்கும் உண்டுடா போனஸ் என்று சொல்லி நம்ம தாத்தன் குப்தா போராடி ஜெயிச்சு 15 நாள்ல ஆரம்பிச்சு 77 நாள் வரைக்கும் போனசைக் கொண்டு போய் நிருத்தினார்ல! அது இன்னைக்கி என்னாச்சு?
நண்பன்:
இல்லாத ஒண்ணாச்சு. அதானே!
வம்பன்:
அது இல்லாம போனதுக்கு முக்கிய காரணம் என்னா தெரியுமா?
நண்பன்:
அதான் எனக்கும் புரியாமப் போச்சு. அது இல்லாமப் போனா நமபூதிரிக்குத்தானே கெட்ட பேரு.. எதுனால இப்படி ஆச்சு? ஆனாலும் BSNL நஷ்டத்துல இருக்கும்போது எப்படிங்க போனஸ் கொடுக்க முடியும்?
வம்பன்:
இதான், இதான்! அந்த ஆளுக்கு மூலதனம். இப்படிச் சொல்லித்தான் அந்த ஆளும் காலத்தை ஓட்டிக்கிட்டிருக்காரு! நீங்களும் நம்பிக்கிட்டிருக்கிறீங்க! வெவரமாச் சொல்றேன் கேளுங்க?
நம்பூதிரிக்கு மொதல்ல குப்தா எதைச் செஞ்சாலும் புடிக்காது. PLI போனஸ் அதாவது உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது குப்தா கொண்டு வந்தது. அத லாபத்தோடு இணைந்த போனஸ் அப்படீன்னு நம்பூதிரி மாத்தினார். மாத்தினதோடு மட்டுமில்லாம வருஷத்துக்கு 50000 கோடிக்கு மேலே லாபம் வந்தா எனக்கு 10000 போனஸ் தரனும்னார்.
நிர்வாகமும் ரொம்ப நாளா இது மாதிரியான ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்திருக்கும் போலிருக்கு. ஒடனே OK சொல்லிருச்சு.
லாபம் போச்சா! போனஸ் போயே போச்சு!!
தன்னோட தெறமை எந்த அளவுக்கு இருக்குன்னு அவருக்கே தெரியல்லே! அதுனால வந்த சிக்கல்தான் இது. பக்கத்துல போஸ்டல்ல ED க்கு இந்த வருஷம் 6000 ரூவா போனஸ். நம்ம கேசுவல் லேபர்க்கு நாம 2000 ரூவா வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
ஆனா நமக்கு இல்லாமப் போயிருச்சி.
நண்பன்:
இருந்தாலும் நான் வாங்கிக் கொடுத்திடுவேன். அதுக்காகத்தான் டிசம்பர் 1,2 ல போராட்டம் சேந்து பண்ணோம். இப்பக் கூட ஆர்ப்பாட்டம் வச்சிருக்கோம் தெரியுமா என்று சொல்றாரே!
வம்பன்:
JAC அதாவது அதிகாரிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் சேர்ந்து போராடியும் கிடைக்காத ஒன்று, தனியா EU மட்டும் போராடினா கெடைச்சிருமா என்ன?
அதோடு மட்டுமல்ல தோழர்! நம்பூதிரி தோழர்கள் கிட்டே நாம அங்கீகாரத்தில் இருந்த போது எப்படி போராட்டம் நடத்தினோம். இப்போ அபிமன்யு எப்படி நடத்துரார்னு தெளிவா கேக்கணும் .
பேருதான் அபிமன்யு! ஒரு வியூகம் கூடவா வகுக்கத் தெரியாது. போராடுவாராம். CMD கேட்டுக்குவாராம்! இவுரு வாபஸ் வாங்கிடுவாராம்! அப்புறம் அதுக்காகவே ஆர்ப்பாட்டம் நடத்துவாராம். என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு!
வம்பன்:
இப்ப நம்பூதிரித் தோழர்களே ரொம்ப பீல் பண்றாங்க தெரியுமா? இவுங்கள நம்பி, இவுங்களுக்கு ஆதரவா இருந்து 6 வருஷத்தை வீணடிசுட்டமேன்னு சிலர் வேதனைப்படுறாங்க. சிலர் ஆத்தமாட்டாதவன் இடுப்பிலே அம்பத்திரெண்டு கருக்கருவாள் எதுக்குன்னு கிண்டலும் பண்றாங்க தோழரே!
நண்பன்:
அதுனாலதான் காசக் குடுத்து சங்கத்த ஒடைச்சி, எப்படியாவது ஜெயிச்சிப் புடலாம்னு பாக்குறாரு.
வம்பன்:
இந்த முறை அது நடக்காது. அவரு கனவு கண்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். சரிங்க தோழரே! நாளைக்கி நேரம் இருந்தா சந்திப்போம்.
பேட்டி தொகுப்பு:
உங்கள் Seenathaana
No comments:
Post a Comment