தோழர்களே வணக்கம்!
BSNLEU சங்கத்தைப் பற்றி, அதன் அறியாமை, இயலாமை, முயலாமை, கையாலாகாத்தனம் சரணாகதிப் போக்கு இவை யாவற்றையும் பற்றி, நமது மாநிலச் சங்கப் பத்திரிகை " ஒலிக்கதிர் " தேர்தல் சிறப்பிதழில் ஏராளமான விஷயங்கள்
வெளிவந்துள்ளது. கூட்டங்களிலும் பேசி வருகிறோம்.
இவைஎதற்கும் பதில் சொல்லத் தயாரில்லை BSNLEU சங்கமும், செல்லப்பாவும்.
பணி ஒய்வு நாளன்று EL பணம் அந்தத் தொழிலாளருக்கு ஒரே நாளில் கிடைத்து வந்தது. அதுவும் நம்பூதிரி காலத்தில் LIC க்குப் போய்விட்டது. இதைக் கொடுக்கும் முன்பாக நிர்வாகத்திடம் விவாதித்திருந்தால் RELIANCE ல் உள்ளது போல் RISK COVERAGE ஐ கொண்டு வந்திருக்கலாம்.
இவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிற இன்சூரன்ஸ் திட்டத்தில் எந்த RISK பலனும் இல்லை. ஒரு உதாரனத்திற்க்காகத்தான் RELIANCE COMPANY கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. RELIANCE COMPANY இடம் ஏன் இதைக் கொண்டுபோய்ப் போடவில்லை என்று நாம் கேட்கவில்லை! RELIANCE க்கு நாம் வக்காலத்தும் வாங்கவில்லை.
1800 கோடி ரூபாயை RELIANCE COMPANY க்கு TRAI தள்ளுபடி செய்து BSNL க்கு நஷ்டத்தை உருவாக்கிய போது நீங்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கம். அப்போது வாய்மூடி மவுனியாகவும் இருந்தீர்கள்.
செல்லப்பா & CO. பொதுத்துறை நிறுவனத்தை காப்போம் என்று சொன்னதை நமது தோழர்கள் அனைவரும் BSNL பொதுத் துறையைத்தான் சொல்கிறார்கள் என்று நம்பி இருந்தார்கள். இப்போதுதான் புரிகிறது அவர் LIC பொதுத் துறையைத்தான் காப்பதாகக் கூறினார் என்பது.
நெருங்கிக் கேட்டால் நாங்கள் பொதுத் துறையைத்தான் காப்போம் என்றுதான் சொன்னோமே தவிர எந்தப் பொதுத் துறை என்று சொன்னோமா! என்று கேட்கக் கூடும். BSNLEU சங்கத்திற்குத் தொழிற்சங்கம் பற்றித்தான் தெரியாமல் இருந்தது. தமிழும் தெரியாது என்று இப்போது புரிகிறது.
இனியாவது
தமிழை தரவாய் அறிக... ஒலிக்கதிரை ஒழுங்காய்ப் படிக்க....
BSNL தொழிலாளியிடம் சந்தா வாங்கிக் கொண்டு LIC க்கு விசுவாசம் காட்டும் BSNLEU வைப் புறக்கணிப்போம்!
BSNL ஐ வாழ வைப்போம்!
NFTE ஐ ஆதரிப்போம்!
எங்களுக்குப் பதில் தான் சொல்லவில்லை, ஒரு கேள்வி கூடவா எங்களிடம் கேட்கக் கூடாது என்ற ஆவலைப் பூர்த்தி செய்த செல்லப்பாவுக்கு நன்றி!
தோழமையுடன்,
K. நடராஜன்,
மாநிலத் துணை செயலர்,
தஞ்சை.
No comments:
Post a Comment