விளைந்த வெள்ளாமை வீட்டுக்கு வர வேண்டும்
விவசாயி வாழ்வு வெளிச்சம் பெற வேண்டும்.
2010 -ல் இழந்தவை ஏராளம்
அது தொடரலாமா தாராளமாய் இவ்வாண்டும்?
DOT இடமிருந்து BSNL பொதுத் துறைக்கு
என்னென்ன எடுத்து வந்தது NFTE அன்று.
போனசும், பென்சனும், துறையின் நிதி ஆதாரமும்
ஊழியர் வாழ்வாதாரமும்
போராடிப் பெற்றிட்ட புதுமைப் பயன்அன்றோ!
கானல் நீராய் அது இன்று காட்சியளிக்க விடலாமா!
கையிருப்பும் கரைந்து,
துறை வருமானமும் மறைந்து
வாடும் பயிராய் இன்று வதை படுவது யாராலே!
வெற்று ஆரவாரம், பொதுமைப் புரட்சி வேடம்
குறுக்கு வழிச் சிந்தனைகள், கூடா நட்புக்கள்
இவையனைத்தும் கொள்கையாய்க் கொண்டிட்ட
EU வின் தலைமை இனி நமக்கு தேவைதானா?
நல்லதொரு விடியல் நமக்கினி வந்திடவே!
செழுமையாய் உழைத்திடுவீர்!
செயலூக்கம் பெற்றிடுவீர்!!
இனிய நல் பொங்கல் வாழ்த்துக்கள்!
அன்புடன், S. சிவசிதம்பரம்,
பட்டுக்கோட்டை.
No comments:
Post a Comment