அனைத்து சங்க கூட்டமும்...! முடிவுகளும்...!
3-வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு
தீர்வு காணவும்.,
துணை டவர் நிறுவனம் அமைப்பதை
தடுத்து நிறுத்தவும்.,
விவாதித்து., நல்ல முடிவு எடுப்பதற்காக., அனைத்து சங்க கூட்டம்
04-10-2017 அன்று டெல்லியில்.,
NFTE சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது.
இக் கூட்டத்தில்., NFTE, BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO,
AIGETOA, SEWA - BSNL, BSNLMS, BSNLOA, ATM மற்றும் TOA BSNL
ஆகிய சங்கங்களின் பொதுச் செயலர்கள் மற்றும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
26-09-2017 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின்
தொடர்ச்சியாக நடைபெற்ற இக் கூட்டத்தில் 3-வது ஊதிய
மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் தொடர்பாக அனைத்து
சங்க பிரதிநிதிகளின் கருத்து பதிவு மற்றும் தீவிர
ஆலோசனைக்கு பிறகு கீழ்க்கண்ட...!
முடுவுகள் எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
- ஊதிய மாற்றம் மற்றும் துணை டவர் நிறுவனம் உள்ளிட்ட பொதுவான பிரச்சனைகளுக்காக., பிரச்சனைகளின் தீர்விற்காக போராட்டங்களை நடத்த., இனி "ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL" என்ற பதாகையின் கீழ் செயல்படுவது.
- BSNL நிறுவனத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் கொடுக்கும் அனைத்து அறிவிப்பு மற்றும் மகஜர்களில் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அமைப்பில் உள்ள அனைத்து பொது செயலர்களும் கையெழுத்து இடுவது.
- 01-01-2017 முதல் சிறப்பான ஊதிய மாற்றத்தை பெற்றிடவும்., 2-வது ஊதியக்குழுவில் தீர்வு காணாத நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிடவும், துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை தடுத்திடவும் கீழ்க்கண்ட போராட்ட இயக்கங்கள் நடத்தப்படும்.
- 16-10-2017 அன்று மத்திய, மாநில மற்றும் மாவட்ட தலைநகர் (அ) தலைமை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது.
- 15-11-2017-க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மகஜர் கொடுப்பது.
- 16-11-2017 அன்று மத்திய, மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது.
- 2017 டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடத்துவது.
- அதன் பின்பும்., பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை எனில்காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்துவது.
- ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அமைப்பின்..., அடுத்த கூட்டம் 23-10-2017 அன்று காலை 11-00 மணிக்கு BSNLMS அலுவலகத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment