RED SALUTE TO COMRADE GAYA SINGH!
ஏஐடியூசியின் புகழ்மிக்க தலைவர்,
அகில இந்திய உருக்குத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர்
தோழர் கயாசிங் இன்று காலமானார்.
இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
ஏஐடியூசி அகில இந்திய செயல் தலைவர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் உள்ளிட்ட பெரும் பொறுப்புகளை வகித்தவர். மாணவப் பருவத்திலிருந்தே
தீவிர அரசியல் நாட்டம் கொண்டவர்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார்,
லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் இவருடன்
படித்தவர்கள். அவர்கள் சோஷலிஸ்ட் பாதைக்குப் போக, தன்னை கம்யூனிஸ்ட்டாக உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர்.
அவரது வயது 75.
ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
பொதுவாழ்விலும், தொழிலாளி வர்க்க நலன்களுக்காகவும் ஐம்பதாண்டுகளைத் தாண்டிய அயராத உழைப்பிலிருந்து விடைபெற்ற அந்தச் செயல் வீரருக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலி.
No comments:
Post a Comment