விஜயவாடா நகரில் அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்ற NFTE தேசிய செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்.
1. ஊதிய மாற்றம் : 01-01-2017 முதல் BSNL ஊழியர்கள் அதிகாரிகளுக்கு 15 சதவீத ஃபிட்மெண்ட் பலன்களுடன் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என இத் தேசியச் செயற்குழு கோருகிறது. 01-01-2017 முதலே சலுகைகளையும் படிகளையும் மாற்றியமைக்க வேண்டும். மேலும் சம்பளக்குழுவை இருதரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவாகப் பொருத்தமாக மாற்றியமைக்கவும், உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் துவக்கவும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகிறது.
2. டவர் கம்பெனி : தனியாகத் துணை டவர் கார்பரேஷன் அமைப்பது என்பது பிறகு பங்குதாரரைச் சேர்த்துக் கொள்வது, அதன் மூலம் தந்திரமாகக் கம்பெனியை விற்றுவிடுவது என்பதில் கொண்டுபோய் முடியும். எனவே இந்த தேசியச் செயற்குழு டவர் கார்பரேஷன் அமைப்பதை முழுமையாக எதிர்க்கிறது. மேலும் எதிர்காலத்தில் BSNL நிறுவனம் துண்டுதுண்டாகிச் சிதைந்து போகும். எனவே டவர் கார்பரேஷன் அமைப்பது என்ற அமைச்சரவை முடிவைக் கைவிட வேண்டும்.
மாநில மாவட்டச் சங்கங்கள் இதனை எதிர்த்துத் தொழிலாளர்களைத் திரட்டி ஆர்பாட்டம், தர்ணா போராட்டங்களை நடத்தவும்; டிசம்பர் 12, 13 தேதிகளில் இரண்டு நாள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் தயாராகும்படி தேசியச் செயற்குழு அறைகூவி அழைக்கிறது.
3. PLI போனஸ் : போனஸ் புதிய கணக்கீட்டு முறை இறுதி செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு ரூபாய் 7,000/= போனஸாக வழங்க வேண்டும். இதற்கென எத்தகைய போராட்ட முடிவுகளை எடுக்கவும் மத்திய தலைமைக்கு இச் செயற்குழு அதிகாரம் வழங்குகிறது.
4. CSC தனியார்மயப்படுத்துவது : BSNL 3000 வாடிக்கையாளர் சேவை மையங்களை, ஆள் பற்றாக்குறை என்ற காரணம் சொல்லி, தனியாருக்குத் தாரை வார்ப்பதை இந்த தேசியச் செயற்குழு முழுமையாக எதிர்க்கிறது. தவறான திசைவழியில் அமைந்த இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். இதற்கு மாறாக, நிர்வாகம் போதிய அளவில் சி & டி கேடரில் புதிதாக ஆளெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என இச் செயற்குழு வற்புறுத்துகிறது.
5. பாராளுமன்றம் நோக்கிப் பேரணி : திரு மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதப் பிற்போக்குக் கொள்கைகளை எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கமாக பாராளுமன்றம் நோக்கிப் பேரணியாகத் திரள்வது என்ற போராட்ட அறைகூவலை மத்திய தொழிற்சங்கங்களும் பொது அமைப்புகளும் விடுத்துள்ளன. நவம்பர் 9,10,11 மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் பேரணியில் பெருமளவில் நமது ஊழியர்கள் கலந்து கொள்ள அனைத்து மாநில மாவட்ட சங்கங்கள் தயாரிப்பில் ஈடுபட NFTE தேசியச் செயற்குழு அறைகூவி அழைக்கிறது.
தாதாகோஷ்பவன் : டெல்லி தாதாகோஷ்பவன் குறித்த பிரச்சனைகளை ஆராய ஒரு குழுவை அமைக்குமாறு மத்திய தலைமையை விஜயவாடா தேசியச் செயற்குழு பணிக்கிறது.
6. ஜெசிஎம் : மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் ஊழியர் நலனில் அக்கறையற்ற, ஆர்வமற்ற அணுகுமுறையால், பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மாநில மற்றும் தலமட்ட கூட்டு ஆலோசனைக் குழுக்களின் (JCM) கூட்டங்கள் நடைபெறுவதில்லை. அத்தகைய இடங்களில் NFTE சங்கத்திற்கு முறையான பேட்டி (Formal Meeting) வழங்க வேண்டுமென BSNL நிர்வாகத்தை இந்த தேசியச் செயற்குழுக் கூட்டம் ஒருமனதாக வேண்டுகிறது.
விஜயவாடா நகரில் அக்டோபர் 12, 13 தேதிகளில் நடைபெற்ற NFTE தேசிய செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

No comments:
Post a Comment