தினம் ஒரு கருத்து

வலைதளப் பார்வையாளர் கவனத்திற்கு.... மிக முக்கியமான பதிவுகள் WEBSITE ன் வலது புறத்தில் தலைப்பிட்டு வரிசையாக இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

Sunday, October 22, 2017

நீ எஜமானா? தலைவனா?

எது தலைமைப் பண்பு?

எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி, சிறந்த பேச்சாற்றலோடு இருப்பவர்களெல்லாம் மனிதத் தொடர்பு அறிவுத்திறன் கொண்டவர்கள் அல்ல. மேலோட்டமாகப் பார்க்கும்போது இவர்களுடைய பலம் பேச்சுத் திறன் எனத் தோன்றும். ஆனால் இவர்களுடைய உண்மையான பலம் பேசுவதில் அல்ல கேட்பதில் இருக்கிறது. பிறர் சொல்வதைக் கவனித்து, அவர்களுடைய குரலுக்குச் செவிமடுத்து பின்பு எதிர்வினை ஆற்றுவதே இவர்களுடைய தனிச் சிறப்பு. இவர்களால் மற்றவர்களுடைய உணர்வை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள். தன்னுடைய ஈகோவை விட்டுக்கொடுத்துக்கூட உறவில் பிணைப்பை ஏற்படுத்த கடும் பிரயத்தனம் செய்வார்கள். அதிகாரத்தின் மூலம் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலமாட்டார்கள். அனைவருக்கும் ஒத்துழைப்பு நல்குவார்கள். புதிய சூழலில், பலவிதமான மனிதர்களோடு உற்சாகமாக இணைந்து செயல்படுவார்கள். கூட்டு முயற்சியில் ஈடுபட விரும்புவார்கள். இவர்களுடைய அணுகுமுறை நல்ல தலைமைப்பண்பை வெளிப்படுத்தும்.
“நீ போகலாம் என்பவன் எஜமான். வா! போகலாம் என்பவன் தலைவன். நீ எஜமானா? தலைவனா?” எனும் வைரமுத்து வரிகளை மனிதத் தொடர்பு அறிவுத்திறனுக்கான கவித்துவமான ஒரு வரி விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம். இது அறிமுகம்தான். மனிதத் தொடர்பு அறிவுத்திறன் தொடர்பாகத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளன! 

நன்றி: தி ஹிந்து தமிழ்.

3 comments:

  1. //அடுத்தவருடைய பிரச்சினைக்கு வெறுமனே அனுதாபப்படாமல் அவர்களுடைய நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து பிரச்சினையை அணுகுவார்கள்.//

    தலைவனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய உணர்வு.


    ReplyDelete
  2. good i am really enjoying the article,tks comrade

    ReplyDelete
  3. good i am really enjoying the article,tks comrade

    ReplyDelete

செய்திகள்

NATIONAL FEDERATION OF TELECOM EMPLOYEES THANJAVUR