TMTCLU மாவட்டச் செயற்குழு
=============================
மார்ச் 2 ம் தேதி மன்னார்குடி தொலைபேசி இணைப்பகத்தில் மாவட்டத் தலைவர் தோழர். நாடிமுத்து தலைமையில் 70 பேர் பங்கேற்ற மாவட்டச் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தோழர். கலைச்செல்வன் செயற்குழுவின் நோக்கங்களை விரிவாக எடுத்துக் கூறி மாவட்டச் செயற்குழுவை துவக்கி வைத்தார்.
பொருளாளர் ஆர்.கே. ராஜேந்திரன் நிதி
நிலைமைகளை எடுத்துக் கூறினார்.
இறுதியாக NFTE மாவட்டச் செயலர் தோழர் கிள்ளிவளவன் சிறப்புரையாற்றினார். தஞ்சையில் மாநில மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது பற்றியும், நடந்து முடிந்த வேலை நிறுத்தம், ஒப்பந்த, நிரந்தர ஊழியருக்கு சம்பளம் வராதது, ஒப்பந்த ஊழியர் ஆட்குறைப்பு செய்யப்படுவார்களா என்பது போன்ற தோழர்களின் கேள்விக்கு விரிவான பதிலை எடுத்துச் சொன்னார்.
கீழ்கண்ட தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
=======================
1. மார்ச் மாத இறுதிக்குள் தஞ்சையில் மாநில மற்றும் மாவட்ட மாநாட்டை இணைத்து நடத்திட வேண்டும்.
2. ஒப்பந்த ஊழியர்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி அளித்திட வேண்டும்.
4. மாநாட்டுப் பணிகளை தஞ்சையில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக தோழர். ஜோதிவேல் இணைப் பொருளராக பணியாற்றுவார்.
இறுதியாக தோழர். ஆர்.கே. ராஜேந்திரன் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment