புதுடெல்லி : மத்திய அரசின் ரெயில்வே உள்பட பல துறைகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் சூழ்நிலையில் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதன் மூலம் அவர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை உள்ளிட்ட பணப்பயன்கள் வழங்குவதை தள்ளிப்போட முடியும். எனவே, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக டெல்லி மேல்சபையில் மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி வி.நாராயணசாமி எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ‘தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
K .நடராஜன் MA ,TTA /PSM
ACS /NFTE -BSNL
தஞ்சாவூர்.
No comments:
Post a Comment